Category: இலங்கை செய்திகள்
-

இலங்கைக்கான தமது விஜயத்தை நிறைவுசெய்த சர்வதேச நாணய குழுவின் அறிக்கை
இலங்கைக்கான தமது விஜயத்தை நிறைவுசெய்த சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழாம், நாட்டின் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் சிறப்பான பொருளாதார விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.8% வளர்ச்சியடைந்தது, பணவீக்கம் தணிந்தது, உத்தியோகபூர்வ இருப்புக்கள் 6 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளன. இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியம் தற்போதைய நிதி முன்னேற்றங்களைப் பாராட்டியது. எனினும், அதிகரித்து வரும் வெளிப்புற அபாயங்கள் குறித்து எச்சரித்தது. நிலையான மறுசீரமைப்பு முயற்சிகளை,…
-

2026 ஆம் ஆண்டு முதல் புதிய கல்வி முறைமை அறிமுகம்
2026 ஆம் ஆண்டு முதல் புதிய கல்வி முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன் அது பரீட்சையை மையமாகக் கொண்ட மாதிரியிலிருந்து விலகி, செயலில் கற்றலை ஊக்குவிக்கும் ஒரு கல்வி முறைமையை உருவாக்கும் என்று கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார். ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர், பரீட்சைக்கு தயாராவதை மையமாகக் கொண்ட தற்போதைய முறைமை மாற்றப்படும் என்று விளக்கினார். இந்த புதிய முறைமையில், மாணவர்கள் பல்வேறு கற்றல் நடவடிக்கைகளில் பங்கேற்பார்கள் மற்றும் ஒரு இறுதி பரீட்சையை எதிர்கொள்வதற்குப் பதிலாக…
-

மஹர சிறைச்சாலை பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது: அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
மஹர சிறைச்சாலை வளவில் காணப்படும் பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (22) இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினா நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.யான மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மஹர சிறைச்சாலை வளவில் காணப்படும் பள்ளிவாசலுக்கு வெளியார் வருவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. எனவே அந்த பள்ளிவாசலை…
-

திருகோணமலை மக்களின் காணி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு..!
திருகோணமலை மாவட்டத்தில், மக்களின் குடியிருப்பு காணிகளை உரியவாறு அடையாளம் கண்டு, அவைகளை விடுவிப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில், புதிய அரசாங்கம் அக்கறையுடன் செயல்படும் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர உறுதியளித்துள்ளார். 2024ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த, கிழக்கு மாகாண துறைமுக ஊழியர்களின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் மானியம் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (19) சீனக்குடா துறைமுக அதிகார சபை மண்டபத்தில் நடைபெற்றது.…
-

யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தின் வறண்ட வலயம் தொடர்பான 11ஆவது சர்வதேச மாநாடு
யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தின் வறண்ட வலயம் தொடர்பான 11ஆவது சர்வதேச மாநாடு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாநாடு எதிர்வரும் 16ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக விவசாய பீட கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. அது தொடர்பாக தெளிவூட்டும் ஊடக சந்திப்பு விவசாய பீட பீடாதிபதி பேராசிரியர் கந்தையா பகீரதன் தலைமையில் இன்று (14.07.2025) இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-

அதிகரிப்பை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை!
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், இன்று (14) அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 297.13 புள்ளிகளால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 18,838.39 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 9.5 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது.
-

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்! மக்களுக்கு அறிவிக்கப்படவுள்ள புதிய தகவல்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் வெளிவரும் புதிய விடயங்களை தேவையான நேரத்தில் மக்களுக்கு அறிவிப்போம் என்று பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இதில் மறைப்பதற்கு தேசிய மக்கள் சக்திக்கு எதுவும் இல்லை எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் புலனாய்வு செய்து விசாரணை செய்ய ஒரு ஆணைக்குழுவே நியமிக்கப்பட்டிருந்தது. அந்த ஆணைக்குழுவின் விசாரணை…
-

வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் 10 மாணவிகள் 9ஏ சித்தி பெற்று சாதனை
வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில் 10 மாணவிகள் 9ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். 2024ஆம் ஆண்டிற்கான கா.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ள முன்னனிப் பாடசாலைகளில் ஒன்றான வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியில், 10 மாணவிகள் 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். பிரசாந்தன் ஹரனி, சிவரூபன் மகிழிசை, சிவனேஸ்வரன் சிபிக்கா, அஜந்தன் வர்ணிகா, அஜித்குமார் ஹரணியா, சுவேந்திரன் தன்சிகா, தவசீலன் கபிஸா, தவபாலன் அர்ச்சனா, வோல்டர் விதுசாலினி, துதர்சன் பேரேழில் ஆகிய…
-

முதல் போட்டியில் பங்களாதேஸை தோற்கடித்த இலங்கை அணி
சுற்றுலா பங்களாதேஸ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நேற்று(10) கண்டி பல்லேகலையில் இடம்பெற்ற 20க்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி 154 ஓட்டங்களை பெற்றது. இதில், ஹுசைன் எமொன் 38 ஓட்டங்களையும்,மொஹமட் நயிம் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் மஹீஸ் தீக்ஸன 2 விக்கட்டுக்களை கைப்பற்றினார். இதனையடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 159 ஓட்டங்களை…
-

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது
2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சையில் தோற்றிய பரீட்சார்த்திகள் http://www.doenets.lk மற்றும் http://www.results.exams.gov.lk தளத்தில் சுட்டெண் உள்ளிட்ட விபரங்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும். மார்ச் மாதம் நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சைக்கு மொத்தம் 4 இலட்சத்து 78 ஆயிரத்து 182 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். அவர்களில் 3 இலட்சத்து 98ஆயிரத்து 182 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர்