Category: இலங்கை செய்திகள்

  • அமெரிக்காவினால் இலங்கைக்கு கிடைத்துள்ள அன்பளிப்பு

    அமெரிக்காவினால் இலங்கைக்கு கிடைத்துள்ள அன்பளிப்பு

    விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான இரண்டு வண்டிகள் இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவினால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன. குறித்த இரண்டு வண்டிகளும் பாரிய கொள்ளளவு மற்றும் விலை உயர்ந்த வண்டிகளாகும். அமெரிக்கா -இலங்கை நட்புறவை வலுப்படுத்தும் செயற்பாடுகளின் ஒரு கட்டமாக இந்த வண்டிகளை அமெரிக்கா அரசாங்கம் அன்பளிப்புச்செய்துள்ளது. இதன் மூலம் இலங்கை விமானப்படையின் ஆற்றல் அதிகரிப்பதுடன் மிகவும் வினைத்திறனுடன் எரிபொருள் நிரப்புதல், விமானப்படையின் நடவடிக்கைகளை மேம்படுத்தல் மற்றும் நீண்ட கால போர் நடவடிக்கைகளுக்கு தயார்படுத்தல் போன்றவற்றில் பயன்மிக்க பங்களிப்பை குறித்த வண்டிகள்…

  • புனரமைக்கப்பட்ட நூலகத்தை மக்கள் பாவனைக்கு வழங்குக; மட்டு. மாநகர சபை முதல்வருக்கு சிறையிலிருந்து பிள்ளையான் கடிதம்!

    புனரமைக்கப்பட்ட நூலகத்தை மக்கள் பாவனைக்கு வழங்குக; மட்டு. மாநகர சபை முதல்வருக்கு சிறையிலிருந்து பிள்ளையான் கடிதம்!

    புனர்நிர்மாணிக்கப்பட்ட பொது நூலகத்தைத் திறந்து, மக்கள் பாவனைக்கு விடுமாறு கோரி சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிள்ளையான் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான பிள்ளையான் என்ற சந்திரகாந்தன் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக, கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி கைது செய்யப்பட்டுத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 30 ஆம் திகதி பிள்ளையான் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் மட்டக்களப்பு…

  • பலாங்கொடையில் ஏற்பட்ட காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த உலங்குவானுர்தி அனுப்பி வைப்பு

    பலாங்கொடையில் ஏற்பட்ட காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த உலங்குவானுர்தி அனுப்பி வைப்பு

    பலாங்கொடை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த இலங்கை விமானப் படையின் உலங்குவானுர்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இம்புல்பே – பலாங்கொடை, ரத்தனகொல்லவில் பெரும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அதனை அணைக்கும் செயற்பாடுகளில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பலாங்கொடையின் ரத்தனகொல்ல-இம்புல்பே பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுப்படுத்த, பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் ஒருங்கிணைந்த நடவடிக்கையாக, இலங்கை விமானப்படையின் பெல் 412ரக ஹெலிகொப்டர்  ஈடுபடுத்தப்பட்டது. விரைவாகச் செயற்பட்ட…

  • தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை திருப்திப்படுத்த முனையும் அரசாங்கம்! மறுக்கும் ஜனாதிபதி அநுர..

    தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை திருப்திப்படுத்த முனையும் அரசாங்கம்! மறுக்கும் ஜனாதிபதி அநுர..

    தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தவே முன்னாள் கடற்படை தளபதி நிசாந்த உலுகேதென்னவை அரசாங்கம் கைது செய்துள்ளதாக தெரிவிக்கும் கருத்து முற்றிலும் தவறானது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் நேற்றையதினம் (07) நாடாளுமன்றத்தில் பங்கேற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் கடற்படை தளபதியை கைது செய்த போது புலம்பெயர் தமிழர்களின் தேவைக்காக அவர் கைது செய்யப்பட்டதாக ஊடக மாநாடுகளை…

  • அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

    அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

    2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு தலா 11,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், பௌதீக ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் நவீன அரச…

  • இலங்கை கடற்கரையை அண்டிய கட்டடங்களுக்கு அபராதம்

    இலங்கை கடற்கரையை அண்டிய கட்டடங்களுக்கு அபராதம்

    இலங்கையின் கடற்கரைகளில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றாமல் இருப்பதற்கு கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவ திணைக்களம் திட்டமிட்டுள்ளது. அத்தோடு,அந்தக் கட்டடங்களுக்கு ஆண்டுதோறும் அபராதம் அறவிடத் திட்டமிட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் அபராதம் அறவிடுவதன் மூலம் ஆண்டுதோறும் அனுமதியை புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இதற்குத் தேவையான சட்ட விதிகளை தயாரிப்பதற்காக கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவ திணைக்களத்தின் இயக்குநர் ஜெனரல் பேராசிரியர் டர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார். கடலோரப் பகுதி என்பது சராசரி…

  • நுவரெலியா மாவட்டத்தில் தற்காலிக பாதுகாப்பு இல்லம் திறந்து வைப்பு

    நுவரெலியா மாவட்டத்தில் தற்காலிக பாதுகாப்பு இல்லம் திறந்து வைப்பு

    தற்போது நாட்டில் அதிகரிக்கும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு தற்காலிக பாதுகாப்பை வழங்குவதற்காக நுவரெலியாவில் தற்காலிக பாதுகாப்பு இல்லம் ஒன்றினை மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் திறந்து வைத்தார். இதன்போது நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் (29)  மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போது, நுவரெலியா மாவட்டத்தில் வாழ்கிற…

  • ஜயவர்தனபுர வைத்தியசாலையின் புதிய தலைவர் நியமனம்

    ஜயவர்தனபுர வைத்தியசாலையின் புதிய தலைவர் நியமனம்

    ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் புதிய தலைவராக வைத்தியர் தமரா கலுபோவில நியமிக்கப்பட்டுள்ளார். இவரை, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம்  தலைவராக நியமித்துள்ளதையடுத்து, வைத்தியர் தமரா கலுபோவில இன்று (30) காலை ஸ்ரீஜெயவர்தனபுர வைத்தியசாலையில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (29) புதிய தலைவருக்கான நியமனக் கடிதத்தை வைத்தியர் தமரா கலுபோவிலவிடம் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சில் வழங்கி வைத்தார்.

  • வட்ஸ்அப் நிதி மோசடி குறித்து பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

    வட்ஸ்அப் நிதி மோசடி குறித்து பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

    நிதி மோசடி செய்வதற்காக வாட்ஸ்அப் கணக்குகளை அங்கீகரிக்கப்படாத முறையில் அணுகுவது குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மோசடி செய்பவர்கள் வாட்ஸ்அப் தளத்தைப் பயன்படுத்தி போலி செய்திகள் மற்றும் இணைப்புகளை அனுப்பி, பயனர்களின் தனிப்பட்ட கணக்குகளில் அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெற்று நிதி மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் குற்றப் புலனாய்வுத் துறை (CID) கண்டறிந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மோசடி செய்பவர்கள் பயனரிடமிருந்து வாட்ஸ்அப் OTP (ஒரு முறை கடவுச்சொல்) பெற்று கணக்கைக்…

  • கம்பளையில் பிரபல குடை உற்பத்தித் தொழிற்சாலை தீயில் எரிந்து முற்றாக நாசம்

    கம்பளையில் பிரபல குடை உற்பத்தித் தொழிற்சாலை தீயில் எரிந்து முற்றாக நாசம்

    கண்டி, கம்பளையில் பிரபல குடை உற்பத்தித் தொழிற்சாலையொன்று தீயில் எரிந்து முற்றாக நாசமாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. கம்பளை வைத்தியசாலை வீதியில் அமைந்திருந்த கந்துரட்ட குடை உற்பத்தித் தெழிற்சாலையே இவ்வாறு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. இன்று(28) மாலை குறித்த தீ அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. தீயை அணைக்க பல்வேறு தரப்புகளும் கடுமையாக போராடிய நிலையில் குடை உற்பத்தித்தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.