Category: இலங்கை செய்திகள்
-
மன்னாரில் பட்டதாரி இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு!
மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவமானது நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்றுள்ளது. மரணமடைந்த இளம் தாய் பட்டப்படிப்பை நிறைவு செய்த மரியராஜ் சிந்துஜா (27) என தெரிய வந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,, இறந்த இளம் தாய்க்கு முதலாவது ஆண் குழந்தை மன்னார் மாவட்ட பொது…
-
முல்லைத்தீவில் ஒட்டிசுட்டானில் இளம் குடும்ப பெண் சடலமாக மீட்பு
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகர பகுதியில் கிணற்றிலிருந்து இளம் குடும்ப பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது இந்த சம்பவமானது, இன்று (29.07.2024) காலை இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணை நேற்று (28) இரவு தொடக்கம் காணவில்லை என வீட்டார் மற்றும் அயலவர்கள், கிராமத்தவர்கள் இணைந்து தேடுதல் நடத்தியுள்ளனர். இருப்பினும், அவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், இன்று (29) காலை வீட்டு கிணற்றுக்குள் அவரின் சடலம் இருப்பதனை அவதானித்த குடும்பத்தினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து, பொலிஸாரால்…
-
சட்டவிரோத நில அபகரிப்புக்கு எதிராக. கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்
கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கனகாம்பிகைகுளத்தின் ஒரு பகுதி சட்டவிரோதமாக தனிநபர் ஒருவரால் மண் நிரப்பட்டு அடாத்தாக பிடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொது மக்களால் எதிர்ப்பு ஆா்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏ9 வீதியில் கனகாம்பிகைகுளம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதியில் இன்று ஒன்று கூடிய பொதுமக்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர் கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தின் ஏ9 வீதியோடு அண்டியதாக சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு குளத்தை தனிநபர் ஒருவர் மண் நிரப்பி பிடித்து்ளள நிலையில் குறித்த குளத்தின்…
-
தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்!
சனாதிபதித் தேர்தல் 2024 பெயர் குறித்த நியமனப்பத்திரங்களைப் பொறுப்பேற்றல், வைப்புப் பணம் செலுத்துதல் மற்றும் வாக்கெடுப்பு தொடர்பாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு சார்பாக அதன் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.சத்நாயக்க அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி, 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் 2 ஆவது மற்றும் 8 ஆவது பிரிவுகள் குறித்து வாக்காளர்களுக்கு பின்வரும் விடயங்களைத் தெளிவு படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. சனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு 2024, செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி…
-
வெகுவாகக் குறைவடைந்த அரச ஊழியர்களின் சம்பளம்: வெளியான முக்கிய தகவல்
வெகுவாகக் குறைவடைந்த அரச ஊழியர்களின் சம்பளம்: வெளியான முக்கிய தகவல் 2020 மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கிடையில் அரச ஊழியர் ஒருவரின் சம்பளத்தின் உண்மையான பெறுமதி முப்பத்தாறு வீதத்தால் (36%) குறைந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் துறையின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார். மேலும், தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தின் உண்மையான பெறுமதி சுமார் இருபது வீதத்தால் (20%) குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கமைய, 2020 ஆம் ஆண்டுக்குள் ஐம்பதாயிரம் ரூபா சம்பளம்…
-
யாழில் இளைஞனுக்கு நடந்துள்ள கொடூரம்
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இளைஞன் ஒருவனை கடத்திச் சென்ற கும்பல் வாளால் வெட்டி சித்திரவதை செய்த சம்பவமொன்று நேற்று (26) இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியில் இருந்து காதலியை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதிக்கு இளைஞர் ஒருவர் வந்துள்ளார். இதன்போது அங்கு கூடிய இனந்தெரியாத நபர்கள் இளைஞனை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்று தலை முடியை வெட்டி வாளால் உடலில் வெட்டி சித்திரவதை செய்துள்ளனர். இதன் பின்னர் குறித்த இளைஞனை உடுவில் பகுதியிலுள்ள வீதியொன்றில் போட்டுவிட்டு குறித்த கும்பல் தப்பிச் சென்றுள்ளதாக…
-
நாமல் மீது தாக்குதல் முயற்சி -மகிந்த வீட்டுக்குள் நடந்த மோதல் – மோதலை தவிர்த்த ஷிரந்தி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கும் இடையில் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொழும்பில் உள்ள நாமல் ராஜபக்சவின் வீட்டிற்கு நேற்றிரவு சென்றிருந்த லொஹான் ரத்வத்தவுடனான வாக்குவாதம், அடிதடி வரை சென்று தடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது வீட்டில் இருந்தவர்களின் தலையீட்டினால் மோதல் தடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் மட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பது தொடர்பாக இருவருக்கும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. முறுகல் நிலை…
-
இலங்கைக்கு சுற்றுலாப்பயணிகள் ஒரு பில்லியன் வருகை
இந்த வருடம் ஜூலை 15 ஆம் திகதி வரையில் இலங்கைக்கு 1,095,675 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இந்நிலை தொடருமானால், போருக்குப் பின்னர் இலங்கையில் சுற்றுலாத்துறையின் உச்ச நிலையை பதிவான 2018 ஆம் ஆண்டை விடவும் நல்ல நிலையை அடைய முடியும் என சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல், கொவிட் – 19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் சுற்றுலா வர்த்தகம் வீழ்ச்சியடைந்தது எனவும் ஆனால்…
-
மகிந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க, பிரதமர் நாமல்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP), தனது ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை எதிர்வரும் திங்கட்கிழமையன்று பரிந்துரைக்கும் என ராஜபக்சவின் விசுவாசியும், முன்னாள் இராஜதந்திரியுமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில், கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார். எனினும், இது தொடர்பாக கட்சியின் உத்தியோகபூர்வ தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை. 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் திகதி இலங்கையில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான…
-
கட்டுப்பணம் கட்டிய ரணில்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சீ பெரேரா குறித்த கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக ஜனாதிபதி சார்பில் இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராக இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. மேலும், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் இந்த விடயத்தை…