Category: பிரதான செய்தி

  • அம்மாவின் ஆசையை நிறைவேற்ற பெலாரஸுக்குச் சென்ற தம்பிக்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை : அண்ணனின் உருக்கமான வேண்டுகோள் !

    கடந்த 2025.04.06 ஆம் திகதி எமக்கு ஓர் திடுக்கிடும் தகவல்! அவர் அங்கு தவறான முடிவெடுத்து உயிரிழந்தாக எனக்கு தகவல் கிடைத்திருந்தது. எனது தம்பி வெளிநாடு செல்ல வேண்டும் என்பது எமது அம்மாவின் ஆசை. அம்மாவின் ஆசையை நிறைவேற்றி, அம்மாவின் ஆத்மா ஈடேற வேண்டும் என்பதற்காகவும், எமது வீட்டுச் சுமைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டுதான் எனது தம்பி தொழில் வாய்ப்புக்காக சென்றிருந்தார். பெலாரஸ் நாட்டிற்கு தொழில் வாய்ப்புக்காக சென்ற எனது தம்பியான விநாயகமூர்த்தி பகிரதனுக்கு என்ன நடந்தது என்பது…

  • டிரம்பின் வரி மிரட்டலுக்கு பணிந்ததா கொலம்பியா?

    தென் அமெரிக்க நாடான கொலம்பியா இந்த நாடு கடத்தும் திட்டத்தை நிராகரித்தது. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், கொலம்பியா மீது வரி விதிப்பு, விசா ரத்து, பயணியர் வர தடை என, கெடுபிடிகளை விதித்தார். சட்டவிரோதமாக குடியேறிய கொலம்பியர்களை இரண்டு விமானங்களில் அமெரிக்க அரசு அனுப்பி வைத்தது. அந்த விமானங்கள் தரையிறங்க கொலம்பியா அனுமதிக்கவில்லை. இதனால், கொலம்பிய நாட்டு இறக்குமதிக்கான வரியை 25 சதவீதம் உயர்த்தினார் டிரம்ப். இது அடுத்த ஒரு வாரத்தில் 50 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும்…

  • ஈழமுரசின் இன்றைய தின ராசி பலன்கள் தை – 12 சனிக்கிழமை 25 ஜனவரி 2025

    மேஷம் ராசி : செயல்களில் ஒருவிதமான படபடப்பு உண்டாகும். பணிகளில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். போக்குவரத்துகளில் விழிப்புணர்வு வேண்டும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். தொழில்நுட்பக் கருவிகளால் விரயங்கள் உண்டாகும். விளையாட்டுன விஷயங்களில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல்கள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள். ரிஷபம் ராசி : மனதில் நினைத்த பணிகளைச் செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவுகள் மேம்படும். வெளியூர் பயணங்களால் சாதகமான சூழல் அமையும். பணி நிமித்தமான சில முக்கியக்ஷ முடிவுகளை எடுப்பீர்கள்.…

  • பாடசாலை மாணவிகள் தொடர்பில் பிரதமர் எடுத்துள்ள நடவடிக்கை!

    நாட்டிலுள்ள பாடசாலைகளில் 6ஆம் தரத்திற்கு மேற்பட்ட மாணவிகளின் சுகாதார பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்கிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கல்வி அமைச்சின் இந்த கலந்துரையாடல், நேற்று (22) கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் கல்வி அமைச்சு வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில், சுகாதாரத் துவாய் உற்பத்திக்காக இலங்கையில் தர நிர்ணயக் கட்டளைகள் நிறுவனத்தின் சான்றிதழ் பெற்ற பிரதான 4 கம்பனிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர். இதேவேளை, கல்வி அமைச்சின் சுகாதார மற்றும் போஷாக்கு பிரிவின்…

  • கட்சியை மீள கட்டியெழுப்புவேன்: ஜீவன் உறுதி

    அரை மனதுடன் நூறு அங்கத்தவர்கள் இருப்பதைவிட, முழு மனதுடன் பத்து அங்கத்தவர்கள் என்னுடன் இருந்தால் நான் கட்சியை மீள உறுதியாக கட்டியெழுப்புவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரங்களில் தெரிவித்ததைப்போல் எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் கட்சியில் மாற்றங்களை மேற்கொள்ள இருக்கின்றோம். இம்மாற்றங்களினூடாகவே தொடர்ந்து செயற்பட தயார்நிலையில் இருக்கின்றோம். இதுவே காலத்தின் தேவைப்பாடும் ஆகும். இ.தொ.காவின் பொதுச்செயலாளர் என்ற பதவி…

  • யாழில் சட்டத்தரணி ஒருவர் வீட்டில் கோடி கணக்கில் திருட்டு நகைகள் பொலீசாரால் மீட்ப்பு

    யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ஒரு கோடி 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கிளிநொச்சியில் பதுங்கியிருந்த ஒருவரும் குறித்த வீட்டில் பணியாற்றிய பணிப்பெண்ணுமே யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் சட்டத்தரணி ஒருவர் வீட்டில் இல்லாத சமயத்தில் 40 பவுண் நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன…

  • கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பில் பெண் மர்மமான முறையில் கொலை

    கொழும்பில் அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் உள்ள வீடொன்றில் தனிமையில் இருந்த 70 வயதுடைய பெண் ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று பிற்பகல் கிருலப்பனை, காலிங்க மாவத்தையில் உள்ள வீட்டுத் தொகுதியில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டில் இருந்து சுமார் 8 பவுண் தங்கம் திருடப்பட்டுள்ளதாக கிருலப்பனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொலை செய்யப்பட்ட பெண் கொலை செய்யப்பட்ட பெண் தனது கணவர், மகள் மற்றும் பேத்தியுடன் வசித்து வந்துள்ளார்.…

  • பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு

    அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் உள்ள தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் இன்றுடன் நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் அடுத்த மாதம் 13ஆம் திகதியுடன் நிறைவடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி 02 ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என்று…

  • யாழ். ஊடக அமையத்துக்கு சீனத் தூதுவர் குழு விஜயம்

    இலங்கைக்கான சீன நாட்டுத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழுவினர் யாழ். ஊடக அமையத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். குறித்த விஜயமானது நேற்று (19) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ். ஊடக அமையத்தின் போசகர் இ.தயாபரன், தலைவர் கு.செல்வக்குமார் உள்ளிட்டோர் தூதுவரை வரவேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிகழ்வில், யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • புதிய அமைச்சரவை இன்று சத்தியப்பிரமாணம்

    அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று (18) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளது. ஜனாதிபதி முன்னிலையில் இன்று முற்பகல் 10.00 மணிக்கு குறித்த பதவிப்பிரமாணம் இடம்பெறவுள்ளதுடன், அமைச்சரவை அமைச்சர்கள் பிரதி அமைச்சர்களுக்கான பதவிப்பிரமாணமும் இடம்பெறவுள்ளது. இதேவேளை, 10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் (21) காலை. புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 11.30க்கு வழங்குவார் என நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம்…