Category: பிரதான செய்தி

  • பூமிக்கு மேலே ஒளிரும் பச்சை, சிவப்பு நிற அதிசயம்

    சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு மேலே ஒளிரும் ‘அரோரா’ எனப்படும் துருவ ஒளியின் கண்கவர் காட்சியை நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் படம் பிடித்துப் பகிர்ந்துள்ளார். தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருக்கும் அனில் மேனன், இந்த அரிய இயற்கைக் காட்சியை ஐபோன் மூலம் பதிவு செய்ததாகத் தெரிவித்துள்ளார். பூமியின் வளிமண்டலத்திற்கு மேலே பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் ஒளிரும் துருவ ஒளியின் இந்த அழகிய காட்சி, பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே, அனில்…

  • கோல்டு வாங்குறதா? டீ குடிக்கிறதா? துபாயில் இரண்டுமே ஒரே கப்பில்… விலை மட்டும் இம்புட்டா!

    துபாயில் உள்ள ஒரு ஆடம்பர உணவகம், ரூ.1 லட்சம் விலையுள்ள பிரீமியம் பானத்தை அறிமுகப்படுத்தி உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. ‘கோல்டு காரக் டீ’ (Gold Karak Tea) என்று அழைக்கப்படும் இந்த ஆடம்பர பானம், உணவில் பயன்படுத்தக்கூடிய 24-காரட் தங்கத்தைக் கொண்டும், உண்மையான வெள்ளி கோப்பையில் வைத்தும் வழங்கப்படுகிறது. இது ஒரு சாதாரண தேநீரை அதிநவீன ஆடம்பர அனுபவமாகக் கணநேரத்தில் மாற்றுகிறது. இந்த ‘கோல்டு காரக் டீ’ இவ்வளவு விலை உயர்ந்ததாக இருப்பது ஏன்? ஒரு சாதாரண…

  • நாளை இடம்பெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

    இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (9) நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்ட 2,723 பரீட்சை மையங்களில் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். இம்முறை பரீட்சையில் மொத்தம் 294,089 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், அவர்களில் 220,366 பேர் சிங்கள மொழியிலும், 73,723 பேர் தமிழ் மொழியிலும் தோற்றவுள்ளனர். குறித்த பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள் கடந்த 5ஆம் திகதி நள்ளிரவுடன் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும்,பரீட்சை முடியும் வரை அச்சு அல்லது இலத்திரனியல் ஊடகங்கள்…

  • 2027-ல உலகமே வெப்பத்துல கொதிக்கப் போகுதா?

    Super El Nino 2027: சில வானிலை ஆய்வாளர்கள், இது கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வலிமையான எல் நினோவாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால், இந்தக் கூற்றுக்கு தற்போது உறுதியான ஆதாரம் இல்லை என்று விஞ்ஞானிகள் விளக்குகின்றனர். பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் எல் நினோ (El Nino) காலநிலை நிகழ்வு, 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மிகவும் சக்திவாய்ந்த நிலையை அடையக்கூடும் என்று காலநிலை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இது நடந்தால், 2027 ஆம்…

  • டூரிஸ்ட ஏமாத்துறதே இந்த நாட்டுக்கு பொழப்பு… 2-வது இடத்தை பிடித்த டென்மார்க்; சீனா எந்த இடம் தெரியுமா?

    ஒரு நகரம் மற்றும் அங்குள்ள முக்கிய ஈர்ப்பு மையங்கள் குறித்து சுற்றுலாப் பயணிகள் எவ்வளவு எதிர்மறையான, ஏமாற்றமளிக்கும் விமர்சனங்களை எழுதியுள்ளனர் என்பதைக் கணக்கிட்டே இந்தத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. மிகவும் பரபரப்பான சாகசங்கள், கண்கவர் அழகிய இடங்கள் மற்றும் மாயாஜாலமான அனுபவங்களை அள்ளித்தரும் என்று விளம்பரப்படுத்தப்படும் ஒரு நகரத்திற்கு நீங்கள் சென்றதுண்டா? அப்படிச் சென்று, அங்கு உண்மையிலேயே இருந்த சூழலைப் பார்த்து முற்றிலும் ஏமாற்றம் அடைந்தது உண்டா? உலக அளவில் பயணம் செய்யும் பல சுற்றுலாப் பயணிகளுக்கு, சில…

  • யாழ்ப்பாண வைத்தியத்துறையிலே மிகப்பெரியதொரு ஆளுமைகளில் ஒருவர் ஓய்வு பெறுகின்றார்!

    சத்திரசிகிச்சைகளில் தனக்கென ஒரு தனியான வகிபாகத்தை கொண்டு ,மிகப்பெரிய நிபுணராக மக்களுக்கு சிறப்பான சேவையாற்றிய வைத்திய நிபுணர் நா.சிறீஸ்கந்தராஜா அவர்கள் தனது 63 ஆவது வயதுடன் சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார். 34 வருட சேவையில் யாழ்ப்பாணம் மக்களுடனேயே நின்று ,எமது மக்கள் முக்கியமாக போர்க்கால விழுப்புண்கள் , அதிலும் குறிப்பாக கண்ணிவெடிகளில் கால்களை வைத்து துன்பப்பட்டபோது அவர்களுக்காக இரவு பகலாக சத்திர சிகிச்சைகளை மிகப்பெரும் நிபுணர்களுக்கு வலது கையாக நின்று சத்தமில்லாமல் செய்தவர். தான்கொண்ட கொள்கையால் துன்பத்தில்…

  • கனடாவில் வானில் மோதிய இரண்டு சிறிய விமானங்கள்

    கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சில்லிவாக் விமான நிலையத்திற்கு அருகே இரண்டு செஸ்னா வகை சிறிய விமானங்கள் வானில் மோதிக்கொண்ட சம்பவம் தொடர்பாக கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. திங்கட்கிழமை இந்த விபத்து இடம்பெற்றதாக வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விசாரணைக் குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விபத்திற்கான காரணத்தை கண்டறியும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. சில்லிவாக் விமான நிலைய அதிகாரி கேரி அட்கின்ஸ் தெரிவித்ததாவது, இரண்டு பயணிகளுடன் சென்ற ஒரு விமானம்…

  • இலங்கையை தாக்கவுள்ள டைபூன் சூறாவளி

    நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை நாளை நண்பகலின் பின்னர் குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அரசு தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற சிறப்புச் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தகவல் வெளியிடும் போது, திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன இதனை குறிப்பிட்டார். அதற்கமைய, நாளை நண்பகலின் பின்னர் நிலவும் மழை நிலைமை குறையும் என அவர் சுட்டிக்காட்டினார். மேலும் ஜப்பானுக்குத் தெற்கே பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள டைபூன் சூறாவளி தீவிரமடைந்து வருவதாக…

  • எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 600 பில்லியன் டொலர் குறைந்துள்ளது.

    உலகின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த ஒரு மாதத்தில் தனது சொத்து மதிப்பில் 600 பில்லியன் அமெரிக்க டொலரை இழந்துள்ளார். SpaceX மற்றும் Tesla நிறுவனங்களின் பங்குகளில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியே இதற்கு காரணம். ஜூன் 16 அன்று SpaceX பங்குகள் IPO-வில் மிகப்பெரிய வரலாற்றை படைத்தன. IPO விலை 135 டொலராக இருந்த நிலையில், பங்குகள் 150 டொலருக்கு பட்டியலிடப்பட்டன. முதலீட்டாளர்களின் ஆர்வத்தால் பங்குகள் 202 டொலர் வரை உயர்ந்தன. இதனால், மஸ்க்…

  • சர்வதேச மேடைப்பேச்சு போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஒமர் ஹசாரிக்கு முதலிடம்

    லண்டனில் நடைபெற்ற சர்வதேச மேடைப்பேச்சு போட்டியில் (International Public Speaking Competition – IPSC 2026) இலங்கையைச் சேர்ந்த ஒமர் ஹசாரி என்ற மாணவர் முதலிடம் பெற்று உலக சாம்பியன் பட்டத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். கொழும்பு ரோயல் கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்திய 19 வயதுடைய ஒமர் ஹசாரி, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி இந்த சாதனையைப் பதிவு செய்துள்ளார். பிரித்தானியாவின் The English-Speaking Union UK அமைப்பினால் நடத்தப்பட்ட இந்த சர்வதேச…