Author: yalarasan canada
-

இனி மேல் கனடாவுடன் எந்த வர்த்தகப் பேச்சுவார்த்தையும் இல்லை ; டிரம்ப் வெளியிட்ட தகவல்
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளியுள்ளது.கனடாவுடனான அனைத்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகளையும் முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். வரிகளுக்கு எதிராக தொடங்கப்பட்ட வர்த்தக பிரச்சாரத்தில் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் அறிக்கையை கனடா தவறாக மேற்கோள் காட்டியதாக குற்றம் சாட்டிய பின்னர் ஜனாதிபதி ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார். இனி மேல் கனடாவுடன் எந்த வர்த்தகப் பேச்சுவார்த்தையும் இல்லை ; டிரம்ப் வெளியிட்ட தகவல் | No More…
-
இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையை (West Bank) தன்னுடன் இணைத்தால், அமெரிக்காவின் ஆதரவை இழக்க நேரிடும்!
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் குடியேற்றக்காரர்களின் வன்முறை ஆகியவை காசா போர் நிறுத்தத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக வான்ஸ் கவலை இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையை (West Bank) தன்னுடன் இணைத்தால், அமெரிக்காவின் ஆதரவை இழக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் பிரதமரிடம் இந்த கருத்தை டிரம்ப் கடந்த அக்டோபர் 15 அன்று தொலைபேசி மூலம் தெரிவித்ததாக டைம் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதே…
-
செயலாளர் வெளியே வராவிட்டால் தீக்குளிப்பேன்! பருத்தித்துறை நகரசபை முன் பதற்றம்
வர்த்தகர்கள் விடாப்பிடியாக செயலாளர் வெளியே வரவில்லை எனில் தாம் நகரசபை வாயிலை விட்டு எழுந்திருக்கமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மரக்கறி சந்தையை முன்னர் இயங்கிய இடத்திற்கு மாற்றக்கோரி பருதித்துறை வர்த்தக சமூகம் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை முன்னெடுத்தனர். பருத்தித்துறை நவீன சந்தையிலிருந்து பருத்தித்துறை நகரசபை வரை சென்று அங்கு தவிசாளர் மற்றும் செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. பருத்தித்துறை நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் சில மணிநேரம் மூடப்பட்டே…
-
“செம்மணி படுகொலை” மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!
காணாமல் ஆக்கப்பட்டோர் பின்னனியில் சிறிலங்கா சிங்கள படைகளின் ஆட்கடத்தல்களில் ஈடுபட்ட தமிழின நபர்களான கருணா, டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிள்ளையான் போன்றவர்கள் மீது சர்வதேச தடைகள்! பிரித்தானிய பாராளுமன்ற அமைச்சர் மான்புமிகு பீற்றர் கெய்ல்;( Peter Kayle) மற்றும்; மான்புமிகு சிபோன் மக்டோ (Dame Siobhain McDonagh) ஆகியோரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்கள் “செம்மனி மனித புதைகுழி” மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிக் கோரிக்கை முன்வைப்பு. செம்மனி படுகொலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் பின்னனியில்…
-
முதலமைச்சரை சல்யூட் அடிக்க வைத்த ராஜேஸ்வரி! ஜேஇஇ தேர்வில் வென்றது எப்படி?
முதலில் ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது, நிறைய சந்தேகங்கள் வரும். ஆனால் நான் ஒரு முடிவுடன் இருந்தேன். எப்படியாவது ஜே.இ.இ தேர்வில் வெற்றி பெற வேண்டும் என உறுதியுடன் இருந்தேன் என மாணவி ராஜேஸ்வரி கூறினார். முயற்சியை கை விடாமல் தொடர்ந்து பயிற்சி எடுத்தேன், அதன் விளைவாக தற்போது ஜே.இ.இ தேர்வில் வெற்றி பெற்று ஐஐடி-இல் உயர் கல்வியை தொடர இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது என மாணவி ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார். சேலம் அருகே உண்டு உறைவிட பள்ளியில்…
-
எப்ஸ்டீன் சர்ச்சை, ஸ்பேஸ்எக்ஸ் முடக்கம்: முற்றுகிறது டிரம்ப் -மஸ்க் மோதல்! அமெரிக்க மல்யுத்தமா? அல்லது நாடகமா?
எலான் மஸ்க் மற்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பல மாத கூட்டணி கிட்டத்தட்ட முறிந்தது. ஒரு காலத்தில் நெருங்கிய கூட்டாளிகளாக இருந்தவர்கள் இப்போது ஒரு சூடான பொது மோதலில் சிக்கியுள்ளனர். எலான் மஸ்க்கின் நிறுவனங்களுடன் இணைக்கப்பட்ட அரசாங்க ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக டிரம்ப் அச்சுறுத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் விண்கலத்தை ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மாறி மாறி குற்றசாட்டுகளை முன் வைத்து வரும் டிரம்ப், மஸ்க்…
-
தனிக்கட்சி தொடங்கும் முடிவில் எலான் மஸ்க்? எக்ஸ் தளத்தில் கருத்துக் கணிப்பை தொடங்கினர்! எலான் மஸ்க் – நீண்டகால அரசியல் அபிலாஷை?
அமெரிக்காவின் எலான் மஸ்க், புதிய அரசியல் கட்சியை உருவாக்குவது குறித்து முன்மொழிவதன் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான தனது பொது மோதலை தீவிரப்படுத்தினார். வியாழக்கிழமை (ஜூன் 5) எக்ஸ் தளத்தில் புதுக் கட்சி தொடங்குவது குறித்து எலான் மஸ்க் ஒரு கருத்துக்கணிப்பைத் தொடங்கினார். அவரைப் பின்தொடர்பவர்களிடம், உண்மையில் 80% மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சியை நிறுவ வேண்டிய நேரம் இதுவா என்று கேட்டார். இந்த கருத்துக்கணிப்பு வைரலானது மற்றும் 4.1 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது.…
-
சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். பல்கலையில் முன்னெடுப்பு!
தமிழினத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. யாழ். பல்கலைகழக வளாகத்தில் இன்று மதியம் நடைபெற்ற நிகழ்வில், பொன் சிவகுமாரனின் திருவுருவ படத்திற்கு மாணவர்கள் மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர். தமிழ் மாணவர்களுக்கு தரப்படுத்தல் மூலம் திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தமிழர்களின் உரிமைகளை மீட்பதற்காகவும் கிளர்ந்தெழுந்து ஆயுதம் ஏந்தி போராடினார். அதனால் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொன்.சிவகுமாரன் கடந்த 1974ஆம் ஆண்டு ஜீன் மாதம்…
-
பொன் சிவகுமாரனின் 51 வது ஆண்டு நினைவு தினத்தில் உரும்பிராயில்
விடுதலைப் பயணத்தின் வழி உறுதியுடன் நின்று மாணவ தலைவனாக பெரும் அரசியல் தலைவர்களுக்கு உணர்த்தியவர் சிவகுமாரன் அவர்கள். தமிழ் மக்களின் விடுதலை இலட்சியபூர்வமானது. அவ் விடுதலை என்பது கொள்கை வழியில் அடையப்படவேண்டியது என்பதை தமிழ்த் தேசிய மாணவர் சக்தியாக உணர்த்தியவர் தியாகி பொன் சிவகுமாரன் அவர்கள் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார். பொன் சிவகுமாரனின் 51 வது ஆண்டு நினைவு தினத்தில் உரும்பிராயில் உள்ள பொன் சிவகுமாரனின் நினைவிடத்தில்…
-
வடக்கு மகாணத்தில் காணிகள் தொடர்பில் வர்த்தகமானியை மீளப் பெற்றுக் கொண்ட சம்பவம் அரசாங்கத்தின் புலனாய்வு சார்ந்த விடயத்தின் உள்ளடக்கமாகும்.
வடக்கு அரசியல்வாதிகள், சிவில் தரப்புகள் போராடத் தவறவில்லை. ஆனால் அவ்வகை போராட்டங்கள் பொறுத்து அரசாங்கம் செவி சாய்க்கவில்லை என்பதே முக்கியமான புரிதலாகும். இலங்கை அரசியலில் அரசாங்கம் வெளியிட்ட வர்த்தகமானி ஒன்றை மீள பெற்றிருக்கின்ற விடயம் அதிக பேசுபொருளாக சமகாலத்தை மாறியுள்ளது. அவ்வாறான வர்த்தகமானியை மீளப்பெறுதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் நிகழ்ந்துள்ளது. வடக்கு மகாணத்தில் வவுனியா மாவட்டம் தவிர்ந்த ஏனைய நான்கு மாவட்டங்களிலும் உரிமை கோரப்படாத நிலங்கள் அரசுடமையாக்கப்படும் என்ற வர்த்தகமானியே மீளப்பெறப்பட்டுள்ளது. இது தொடர்பில் அதிகமான உரிமை கோரல்களும்…