Author: Six Side Media
-

நாடளாவிய ரீதியில் அதிரடி சோதனை நடவடிக்கை – ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒரே இரவில் கைது
நாடளாவிய ரீதியில் நேற்றையதினம் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தின் கீழ் மற்றுமொரு விசேட சுற்றிவளைப்பு நேற்று மேற்கொள்ளப்பட்டது. தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார், சிறப்பு அதிரடி படையினர் மற்றும் இராணுவத்தினர் உட்பட 6500இற்கு மேற்பட்ட பாதுபாப்பு தரப்பினர் ஈடுபட்டனர். தேடுதல் நடவடிக்கையின் போது, 24,281 நபர்கள் சோதனை செய்யப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 10,175 வாகனங்கள் மற்றும்…
-

யாழில் கிறிஸ்தவ தேவாலயத்தில் அடாவடி.. NPP தீவக அமைப்பாளர் உள்ளிட்ட 8 பேர் அதிரடி கைது!
யாழ். மெரிஞ்சிமுனை – நாரயம்பதி மாதா கோயிலின் சுருவத்தை மதுபோதையில் உடைத்து சேதப்படுத்திய சந்தேகத்தின் பேரில் வேலணையை சேர்ந்த 8 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் தேசிய மக்கள் சக்தியின் தீவக அமைப்பாளர் வேல்முருகன் மயூரன் உள்ளடங்கலாக 8 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மெரிஞ்சிமுனை – நாரயம்பதி மாதா கோயிலின் மாதா சுருவத்தை மதுபோதையில் இருந்த 20 பேரடங்கிய கும்பல் ஒன்று உடைத்து சேதப்படுத்தியதாக ஊர்காவற்றுறை…
-

கனடாவில் இருந்து இலங்கை வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் வெளிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டிற்குள் நுழைய முயன்றபோது, விமான நிலைய சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கனடாவின் ஒன்ராறியோவை சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. அவர் கனடாவிலிருந்து கட்டார், தோஹாவிற்கு போதைப்பொருள் கொண்டு வந்துள்ளார். அங்கிருந்து, அவர் கட்டார், எயபர்வேஸ் விமானமான QR-662 மூலம் கட்டுநாயக்க…
-

40 நாடுகளுக்கான விசா கட்டணங்கள் தொடர்பில் அரசாங்கம் அதிரடி தீர்மானம்
40 நாடுகளுக்கான விசா கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார். நாட்டின் சுற்றுலாத் துறையை வளர்க்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டுக்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கை 91ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு 96வது இடத்தில் இருந்த இலங்கை கடவுச்சீட்டு 5 இடங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளமை சிறம்பம்சமாகும். இவ்வாறானதொரு நிலையில், 40 நாடுகளுக்கான விசா கட்டணங்களை தள்ளுபடி…
-

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றம்
அரசியல் கைதிகளின் விடுதலையை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் கணநாதன் உஷாந்தனால் கொண்டுவரப்பட்ட பிரேரணையானது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தனது பிரேரணை தொடர்பாக உறுப்பினர் சபையில் கருத்து தெரிவிக்கையில், மிக மோசமான துன்பியல்கள் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கறுப்பு ஜூலையை நினைவேந்தி வருகின்றோம். இவ் வலிமிகு காலத்தில் மிக நீண்ட காலமாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் பிரேரணை ஒன்றை சபையில் சமர்ப்பிக்கிறேன். பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு…
-

இலங்கைக்கான தமது விஜயத்தை நிறைவுசெய்த சர்வதேச நாணய குழுவின் அறிக்கை
இலங்கைக்கான தமது விஜயத்தை நிறைவுசெய்த சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழாம், நாட்டின் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் சிறப்பான பொருளாதார விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.8% வளர்ச்சியடைந்தது, பணவீக்கம் தணிந்தது, உத்தியோகபூர்வ இருப்புக்கள் 6 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளன. இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியம் தற்போதைய நிதி முன்னேற்றங்களைப் பாராட்டியது. எனினும், அதிகரித்து வரும் வெளிப்புற அபாயங்கள் குறித்து எச்சரித்தது. நிலையான மறுசீரமைப்பு முயற்சிகளை,…
-

2026 ஆம் ஆண்டு முதல் புதிய கல்வி முறைமை அறிமுகம்
2026 ஆம் ஆண்டு முதல் புதிய கல்வி முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளதுடன் அது பரீட்சையை மையமாகக் கொண்ட மாதிரியிலிருந்து விலகி, செயலில் கற்றலை ஊக்குவிக்கும் ஒரு கல்வி முறைமையை உருவாக்கும் என்று கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவித்துள்ளார். ஊடக சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர், பரீட்சைக்கு தயாராவதை மையமாகக் கொண்ட தற்போதைய முறைமை மாற்றப்படும் என்று விளக்கினார். இந்த புதிய முறைமையில், மாணவர்கள் பல்வேறு கற்றல் நடவடிக்கைகளில் பங்கேற்பார்கள் மற்றும் ஒரு இறுதி பரீட்சையை எதிர்கொள்வதற்குப் பதிலாக…
-

இலங்கைக்கு கிடைக்கவுள்ள ஒரு பில்லியன் டொலர்
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து காரணமாக அரசல்லாத தரப்புக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக ஒரு வருடத்தினுள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை ஆரம்ப நட்டஈடாக செலுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நட்டஈட்டு தொகை திறைசேரியின் செயலாளருக்கு செலுத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் தமது உத்தரவில் தெரிவித்துள்ளது. பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ, நீதியரசர்களான யசந்த கோதாகொட, ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கம்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழு, ஓய்வுபெற்ற நீதியரசர் காமினி அமரசேகர…
-

புகழ்பெற்ற மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்
பிரபல WWE மல்யுத்த வீரர் மற்றும் நடிகராக பலரின் சிறுவயதில் மனதை கொள்ளை கொண்ட ஹல்க் ஹோகன் 71வது வயதில் இன்று காலமாகியுள்ளார். இன்று WWE தங்களது X பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், ஹோகன் மரணித்ததாக அறிவித்துள்ளது. “WWE மிகவும் வருத்தத்துடன் WWE ஹால் ஆஃப் ஃபேம் வீரர் ஹல்க் ஹோகன் மறைந்ததை தெரிவித்துக் கொள்கிறது. “பொப் கலாச்சாரத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க நபர்களில் ஒருவரான ஹோகன், 1980களில் WWEயை உலகளாவிய புகழுக்கு கொண்டு செல்ல உதவியவராவார். ”…
-

மஹர சிறைச்சாலை பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது: அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
மஹர சிறைச்சாலை வளவில் காணப்படும் பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (22) இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினா நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.யான மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மஹர சிறைச்சாலை வளவில் காணப்படும் பள்ளிவாசலுக்கு வெளியார் வருவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. எனவே அந்த பள்ளிவாசலை…