Author: Six Side Media

  • லெபனானில் ஆயுதக் கிடங்கில் பயங்கர வெடி விபத்து : பலர் பலி

    லெபனானில் ஆயுதக் கிடங்கில் பயங்கர வெடி விபத்து : பலர் பலி

    லெபனானில் ஆயுதக் கிடங்கில் இருந்த வெடிப்பொருட்களை அகற்றும் பணியில் இராணுவ வீரர்கள் மற்றும் நிபுணர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் 6 இராணுவ நிபுணர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பலர் காயம் அடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. 14 மாதங்களாக இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் மோதல் நடைபெற்று வந்த…

  • அமெரிக்காவினால் இலங்கைக்கு கிடைத்துள்ள அன்பளிப்பு

    அமெரிக்காவினால் இலங்கைக்கு கிடைத்துள்ள அன்பளிப்பு

    விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கான இரண்டு வண்டிகள் இலங்கை விமானப்படைக்கு அமெரிக்காவினால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன. குறித்த இரண்டு வண்டிகளும் பாரிய கொள்ளளவு மற்றும் விலை உயர்ந்த வண்டிகளாகும். அமெரிக்கா -இலங்கை நட்புறவை வலுப்படுத்தும் செயற்பாடுகளின் ஒரு கட்டமாக இந்த வண்டிகளை அமெரிக்கா அரசாங்கம் அன்பளிப்புச்செய்துள்ளது. இதன் மூலம் இலங்கை விமானப்படையின் ஆற்றல் அதிகரிப்பதுடன் மிகவும் வினைத்திறனுடன் எரிபொருள் நிரப்புதல், விமானப்படையின் நடவடிக்கைகளை மேம்படுத்தல் மற்றும் நீண்ட கால போர் நடவடிக்கைகளுக்கு தயார்படுத்தல் போன்றவற்றில் பயன்மிக்க பங்களிப்பை குறித்த வண்டிகள்…

  • புனரமைக்கப்பட்ட நூலகத்தை மக்கள் பாவனைக்கு வழங்குக; மட்டு. மாநகர சபை முதல்வருக்கு சிறையிலிருந்து பிள்ளையான் கடிதம்!

    புனரமைக்கப்பட்ட நூலகத்தை மக்கள் பாவனைக்கு வழங்குக; மட்டு. மாநகர சபை முதல்வருக்கு சிறையிலிருந்து பிள்ளையான் கடிதம்!

    புனர்நிர்மாணிக்கப்பட்ட பொது நூலகத்தைத் திறந்து, மக்கள் பாவனைக்கு விடுமாறு கோரி சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிள்ளையான் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான பிள்ளையான் என்ற சந்திரகாந்தன் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக, கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி கைது செய்யப்பட்டுத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 30 ஆம் திகதி பிள்ளையான் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் மட்டக்களப்பு…

  • இந்தியாவுடன் எதுவித வர்த்தகப் பேச்சுவார்த்தையும் இல்லை – ட்ரம்ப்!

    இந்தியாவுடன் எதுவித வர்த்தகப் பேச்சுவார்த்தையும் இல்லை – ட்ரம்ப்!

    பிரச்சினைகள்  தீர்க்கப்படும் வரை இந்தியாவுடன் வர்த்தகம் தொடர்பான எவ்வித பேச்சுவார்த்தையும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 30 அன்று, டொனால்ட் ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீத வரியை அறிவித்தார். மேலும் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் ஆயுதங்களை இறக்குமதி செய்தால் கூடுதல் வரி விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார். அதன்படி கடந்த இரு தினங்களுக்கு முன்பு, இந்தியா மீது மேலும் 25 சதவீதம் கூடுதல் வரிகளை விதிக்கும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். இதன்மூலம்,…

  • பலாங்கொடையில் ஏற்பட்ட காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த உலங்குவானுர்தி அனுப்பி வைப்பு

    பலாங்கொடையில் ஏற்பட்ட காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த உலங்குவானுர்தி அனுப்பி வைப்பு

    பலாங்கொடை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த இலங்கை விமானப் படையின் உலங்குவானுர்தி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இம்புல்பே – பலாங்கொடை, ரத்தனகொல்லவில் பெரும் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அதனை அணைக்கும் செயற்பாடுகளில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பலாங்கொடையின் ரத்தனகொல்ல-இம்புல்பே பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை கட்டுப்படுத்த, பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ் ஒருங்கிணைந்த நடவடிக்கையாக, இலங்கை விமானப்படையின் பெல் 412ரக ஹெலிகொப்டர்  ஈடுபடுத்தப்பட்டது. விரைவாகச் செயற்பட்ட…

  • அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின் நிலை.. சபையில் அறிவித்த ஜனாதிபதி

    அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின் நிலை.. சபையில் அறிவித்த ஜனாதிபதி

    இறக்குமதி வரி தொடர்பில் அமெரிக்காவுடன் எந்தவொரு இறுதி ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(07) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இரு தரப்பினரும் சில விஷயங்களில் உடன்பாட்டை எட்டியிருந்தாலும், இறுதி ஒப்பந்தம் எதுவும் கையெழுத்திடப்படவில்லை என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், இரு தரப்பு கலந்துரையாடல்கள் மூலம் வரி 44 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக குறைக்கப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், சில HS குறியீடுகளுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும்…

  • தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை திருப்திப்படுத்த முனையும் அரசாங்கம்! மறுக்கும் ஜனாதிபதி அநுர..

    தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை திருப்திப்படுத்த முனையும் அரசாங்கம்! மறுக்கும் ஜனாதிபதி அநுர..

    தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தவே முன்னாள் கடற்படை தளபதி நிசாந்த உலுகேதென்னவை அரசாங்கம் கைது செய்துள்ளதாக தெரிவிக்கும் கருத்து முற்றிலும் தவறானது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் நேற்றையதினம் (07) நாடாளுமன்றத்தில் பங்கேற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் கடற்படை தளபதியை கைது செய்த போது புலம்பெயர் தமிழர்களின் தேவைக்காக அவர் கைது செய்யப்பட்டதாக ஊடக மாநாடுகளை…

  • அணு ஆயுத அச்சுறுத்தல்களை பொறுத்துக் கொள்ள முடியாது; ஜெய்சங்கர் திட்டவட்டம்

    அணு ஆயுத அச்சுறுத்தல்களை பொறுத்துக் கொள்ள முடியாது; ஜெய்சங்கர் திட்டவட்டம்

    ‘எந்தவித அணு ஆயுத அச்சுறுத்தல்களையும் பொறுத்துக் கொள்ள முடியாது’ என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டில்லியில் தே.ஜ., கூட்டணி பார்லி., குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற, பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ஆப்பரேஷன் சிந்தூர் குறித்தும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இன்று நிறைவேற்றப்பட்ட தேஜ கூட்டணி பார்லிமென்ட் குழு கூட்டம் தீர்மானம், அமைதிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டையும்…

  • அமெரிக்கா உடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது ரஷ்யா!

    அமெரிக்கா உடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது ரஷ்யா!

    அமெரிக்கா உடனான உறவில் பதற்றம் நிலவும் நேரத்தில், அந்நாட்டுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது தொடர்பாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தின் கீழ் எங்களுக்கு நாங்களே விதித்து கொண்ட சுயமான கட்டுப்பாடுகளுக்கு இனி நாங்கள் கட்டுப்பட மாட்டோம். அமெரிக்காவுக்கு எதிராக, குறுகிய தூரம் மற்றும் நீண்ட தூரம் செல்லும் அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்கிறோம். இவ்வாறு அந்த…

  • அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

    அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு

    2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு தலா 11,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், பௌதீக ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் நவீன அரச…