Author: Six Side Media

  • குருக்கள்மடம் இராணுவ முகாமை உடனடியாக அகற்ற வலியுறுத்தல்

    மட்டக்களப்பு – மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருக்கள்மடம் இராணுவ முகாம் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்பதோடு, அருகில் உள்ள சிறுவர் பூங்கா எமது பிரதேச சபைக்கு சொந்தமானது என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் வினோராஜ் தெரிவித்துள்ளார். குறித்த விளையாட்டு முற்றத்தை இன்று(15.09.2025) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் பார்வையிட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குருக்கள்மடம் சிறுவர் விளையாட்டு பூங்கா கவனிப்பார் அற்ற…

  • விமானத்தில் கோளாறு 151 பயணியர் தப்பினர்

    விமானத்தில் கோளாறு 151 பயணியர் தப்பினர்

    உத்தர பிரதேசத்தின் லக்னோவில் இருந்து டில்லி புறப்பட்ட, ‘இண்டிகோ’ விமானம் திடீர் கோளாறு காரணமாக, 151 பயணியருடன் அவசரமாக தரையிறக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தின் லக்னோவில் இருந்து டில்லிக்கு 151 பயணியருடன், இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டது. இதில், உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவின் மனைவியான, லோக்சபா எம்.பி., டிம்பிள் யாதவ் பயணித்தார். பகல் 11:00 மணிக்கு புறப்பட்ட விமானம், ஓடுபாதையின் எல்லை வரை சென்றது. திடீரென…

  • தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு

    தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு

    தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக அரசாங்கம் “தொடர்ச்சியான பழிவாங்கல்” செய்வதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து தொழில்துறையினரிடையே கோபம் அதிகரித்து வருவதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரத்தின் போது தனியார் பேருந்துகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், பிரச்சாரத்தை ஆதரிப்பதற்காக குறிப்பிடத்தக்க நிதி பங்களிப்புகள் வழங்கப்பட்டதாகவும் கூறினார். “நாட்டிலிருந்து தனியார் பேருந்து கலாச்சாரத்தை அகற்ற முயற்சிப்பது நெருப்புடன் விளையாடுவது போன்றது”…

  • யாழில் சட்டவிரோத மணற்கடத்தல்காரர்களால் தாக்கப்பட்ட கடற்றொழிலாளர் படுகாயம்

    யாழில் சட்டவிரோத மணற்கடத்தல்காரர்களால் தாக்கப்பட்ட கடற்றொழிலாளர் படுகாயம்

    சட்டவிரோத மணற்கடத்தலை தடுக்க முயற்சித்த பின்னணியில் கற்கோவளத்தில் கடற்றொழில் வாடிகள் அடித்துடைக்கப்பட்டு தீவைக்கப்பட்ட சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத மணற்கடத்தல்காரர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கடற்றொழிலாளர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் ஒரு கடற்றொழிலாளர் காயமடைந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான வ.வசந்தகுமார் (வயது-30) என்பவர் பலத்த காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக…

  • 2025 முதல் பாதியில் 18 பில்லியன் இலாபம் ஈட்டிய பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

    2025 முதல் பாதியில் 18 பில்லியன் இலாபம் ஈட்டிய பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

    2025ஆம் ஆண்டின் முதல் பாதியில், 18 பில்லியன் ரூபாய் இலாபத்தை ஈட்டியதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. பெட்ரோலியத் துறையை மேலும் மேம்படுத்துவதற்காக பல திட்டங்களை ஆரம்பிக்க இந்த இலாபம் பயன்படுத்தப்படுகிறது என்று கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் மயூர நெத்திகுமார கூறியுள்ளார். எரிபொருள் கட்டமைப்புக்களை மேம்படுத்துதல் மற்றும் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை மையப்படுத்தி, முத்துராஜவெல முனையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வரை மேற்கொள்ளப்படும் விமான எரிபொருள் குழாய் அமைக்கும் திட்டங்களையும் அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

  • காசா இனப்படுகொலையாளிகளுடன் எங்களுக்கு தொடர்பில்லை.. சஜித் திட்டவட்டம்

    காசா இனப்படுகொலையாளிகளுடன் எங்களுக்கு தொடர்பில்லை.. சஜித் திட்டவட்டம்

    காசாவில் இனப்படுகொலையில் ஈடுபடும் தரப்புடன் எங்களுக்கு நட்புறவு கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – இலங்கை நட்புறவு சங்கத்தைக் கட்டியெழுப்புவதற்குரிய அழைப்பை ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்ஹ விடுத்திருந்தார். இது பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியது. பின்னர் அவர் மன்னிப்புக் கோரி, அதற்குரிய முயற்சியை கைவிட்டார். இந்நிலையிலேயே சஜித் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக நாம் முன்னிற்கின்றோம். இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் என்பன…

  • கட்டார் மீதான இஸ்ரேலிய தாக்குதல்! மோடி கடும் கண்டனம்

    கட்டார் மீதான இஸ்ரேலிய தாக்குதல்! மோடி கடும் கண்டனம்

    இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கட்டார்  மீதான இஸ்ரேலிய தாக்குதல் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சகோதரத்துவம் வாய்ந்த கத்தாரின் இறையாண்மையை மீறுவதை இந்தியா கண்டிக்கிறது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், மோதல் அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்கும் நாங்கள் ஆதரவளிக்கிறோம். பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவாகவும், அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் இந்தியா உறுதியாக நிற்கிறது எனக்…

  • இலங்கையில் மனித உரிமை குறித்து கவலை எழுப்ப அவசியம் இல்லை: ரஷ்யா தெரிவிப்பு

    இலங்கையில் மனித உரிமை குறித்து கவலை எழுப்ப அவசியம் இல்லை: ரஷ்யா தெரிவிப்பு

    இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை குறித்து கவலைகளை எழுப்ப எந்த காரணமும் இல்லை என்று ரஷ்யா கூறியுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் பொறிமுறைகளுடன் பரஸ்பர மரியாதைக்குரிய ஒத்துழைப்பைக் கட்டியெழுப்ப இலங்கை அதிகாரிகள் தயாராக இருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. இலங்கை குறித்த ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, ரஷ்யா இந்தக்கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர், இலங்கைக்கு அண்மையில் வந்து சென்றமை, இதற்கான தெளிவான உதாரணம் என்றும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.…

  • மன்னார் பொது மருத்துவமனைக்கு 600 மில்லியன் மானியம் வழங்கும் இந்தியா

    மன்னார் பொது மருத்துவமனைக்கு 600 மில்லியன் மானியம் வழங்கும் இந்தியா

    மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் புதிய விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவை நிர்மாணிப்பதற்காக இந்தியா, இலங்கை ரூபாயில் 600 மில்லியன்களை மானியமாக வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செப்டம்பர் 9 ஆம் திகதி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர்; அனில் ஜாசிங்க ஆகியோரால் கையெழுத்தானது. இந்த கையெழுத்து நிகழ்வில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் கலந்து கொண்டார். இந்த உதவியின் ஊடாக இரண்டு மாடி யுஸ்ருன் பிரிவின்…

  • மத்திய கிழக்கில் ஏற்பட்ட திடீர் பதற்றம்.. அதிருப்தியில் ட்ரம்ப்

    மத்திய கிழக்கில் ஏற்பட்ட திடீர் பதற்றம்.. அதிருப்தியில் ட்ரம்ப்

    இஸ்ரேல் கட்டாரின் தோஹா நகரில் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி அதிருப்தி வெளியிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகை மாநாட்டில், டோஹா மீதான இஸ்ரேலின் தாக்குதல் இஸ்ரேலிய அல்லது அமெரிக்க இலக்குகளை முன்னேற்றவில்லை என்று அமெரிக்காவின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், ஹமாஸை ஒழிப்பது ஒரு தகுதியான இலக்கு என்று ட்ரம்ப் நம்புவதாகவும் கரோலின் லீவிட் அறிவித்துள்ளார். அத்துடன், கட்டார், அமெரிக்காவின் ஒரு நெருங்கிய நட்பு நாடு என்றும், தாக்குதல் நடந்த இடம் குறித்து…