முல்லைத்தீவு மாவட்டத்தில் தேர்தலுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி மாவட்ட அரசாங்க அதிபர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான அனைத்து ஏற்ப்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்
சற்று முன்னர் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்
நாளையதினம் (14) இடம்பெற இருக்கும் பாராளுமன்ற தேர்தல் தாெடர்பாக முல்லைத்தீவு மாவட்ட அனைத்து தேர்தல் பணிகளும் பூர்த்தியாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்களிக்க தகுதிபெற்ற 86889 பேர் 137 வாக்களிப்பு நிலையங்களில் நாளையதினம் வாக்களிக்க இருக்கின்றனர்.
இன்று (13.11.2024) காலை 7 மணி முதல் அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் (14.11.2024) காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகி மாலை 4 மணிவரை இடம்பெறும்.
முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தவரை நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல் ஒன்று இடம்பெறுவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்திருக்கின்றது. இந்த தேர்தல் பணிக்காக சுமார் 1500 மேற்பட்ட அரச உத்தியோகத்தர்கள், 500 பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஈடுபட்டிருக்கின்றார்கள்.
நாளை மாலை 4 மணிக்கு வாக்களிப்பு முடிவடைந்த பின்னர் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்கெண்ணும் எட்டு வலயத்திற்கு வாக்கு பெட்டடிகள் எடுத்து வரப்படும் என மேலும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply