Tag: #srilankannews
-

மின் கட்டணம் குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் ஏற்றுக்கொள்ளும் தொகையால் கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.
-

யாழில் தனியார் பேருந்தை மறித்து மிரட்டல்!
காரைநகர் – யாழ்ப்பாணம்(Jaffna) இடையே போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றினை வலந்தலை சந்தியில் மறித்து கும்பல் ஒன்று மிரட்டல் விடுத்ததாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றையதினம்(03.05.2024) இடம்பெற்றுள்ளது. அத்துடன் தனிநபர் ஒருவரும் பேருந்தை மறித்து மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
-

பொது வேட்பாளராகக் களமிறங்கும் ரணில்: விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு!
நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என்ற உத்தரவாதத்தை சர்வதேசம் வழங்கிய பின்னரே ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் அறிவிப்பை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் என அறியமுடிகின்றது. எதிர்வரும் ஜூன் நடுப்பகுதியில் வங்குரோத்து நிலையிலிருந்து இலங்கை மீண்டுவிட்டது என்ற அறிவிப்பு வெளிவரவுள்ளது எனவும் தெரியவருகின்றது. அதுவரை நலன்புரித் திட்டங்களை முன்னெடுப்பது எனவும், முன்கூட்டியே தேர்தலில் களமிறங்கும் அறிவிப்பை விடுத்தால் அது நலன்புரித் திட்டங்களைப் பகிரும் விடயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார் என நம்பகரமான…
-

மட்டக்களப்பில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு!
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பகுதியில் உள்ள பாழடைந்த வெற்றுக்காணியொன்றினுள் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய பீ.மதனராஜ் என்பவரே சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வருகை தந்த ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துடன் , மட்டக்களப்பு தடயவியல் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரனைகளை முன்னெடுத்தனர்.
-

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: மைத்திரி இரண்டாவது தடவையாக வாக்குமூலம்!
2019 ஆம் ஆண்டு நாட்டை பதற்றத்துக்கு இட்டுச்சென்ற உயர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் (Easter attack) தொடர்பில் இரண்டாவது தடவையாக வாக்குமூலம் வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்றையதினம் (03.05.2024) சுமார் இரண்டு மணிநேரம் அவரிடம் வாக்குமூலம் பெற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த மார்ச் 25 ஆம் திகதி சுமார் ஐந்து மணிநேரம் அவர் தமது வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.
-

யாழில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட மூவர் கைது!
யாழ்.வடமராட்சி, கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெற்றிலைக்கேணி கடற்படையினர் இன்று (02.05.2024) மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இதன்போது ஒளி பாய்ச்சி குறுகிய கண்களை கொண்ட (சுருக்குவலை) வலையை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டமையினால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வெற்றிலைக்கேணி கடற்படை தெரிவித்துள்ளது.
-

மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கும் மொனராகலை மாவட்டத்திற்கும் வெப்ப சுட்டெண் தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த அறிவிப்பானது நாளை( 03) முதல் நடைமுறைக்கு வரும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சில இடங்களில் வெப்ப சுட்டெண், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘அதிக எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-

இலங்கையில் மக்களுக்கு மத்திய வங்கி மீண்டும் விடுத்துள்ள எச்சரிக்கை!
பிரமிட் திட்டங்களில் பங்குபற்றுவது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும் என மத்திய வங்கி மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி 9 நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட திட்டங்களை நடத்துவதாக மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.தடை செய்யப்பட்ட வகையான பிரமிட் திட்டமொன்றினை நேரடியாக அல்லது நேரடியற்று தொடங்குகின்ற, வழங்குகின்ற, ஊக்குவிக்கின்ற, விளம்பரப்படுத்துகின்ற, கொண்டு நடத்துகின்ற, நிதியளிக்கின்ற முகாமைத்துவம் செய்கின்ற அல்லது பணிக்கின்ற எவரேனும் ஆள் தண்டனைக்குரிய தவறொன்றிற்கான குற்றவாளியாதல் வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
-

வாகன இறக்குமதிக்கான அனுமதி! முதலில் இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்கள்!
வாகன இறக்குமதிக்கு அனுமதியளிக்கும் போது முதலாவது பொது போக்குவரத்து வாகனங்களுக்கே அனுமதியளிப்போம் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், இலங்கையின் வாகன தேவைகளை நான்கு வகைகளாக பிரித்திருக்கின்றோம். முதலாவதாக பொது போக்குவரத்துக்கான வாகனங்கள், பேருந்து, லொறி போன்றவையைக் குறிக்கும். இரண்டாவது பொது தேவைக்காக மக்களினால் பயன்பபடுத்தப்படுகின்ற வாகனங்கள். உதாரணமாக மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டி போன்றவற்றை குறிப்பிடலாம்.
-

எரிவாயு விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் – நாளை முதல் புதிய விலை!
லிற்றோ எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த குறைப்பு ஏற்படவுள்ளது. அதற்கமைய, புதிய விலைகள் நாளை காலை அறிவிக்கப்படும் லிற்றோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,000 ரூபாவாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.