Tag: #srilankannews
-

வவுனியாவில் பல லட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
வவுனியா(Vavuniya) உக்குளாங்குளம் பகுதியில் பல லட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் ரிஸ்வி தலைமையிலான பொலிஸ் பிரிவினர் திடீர் சோதனை நடவடிக்கையினை உக்குளாங்குளம் பகுதியில் முன்னெடுத்திருந்தனர். இதன் போது 50கிராம் ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் செட்டிக்குளம் பகுதியினை சேர்ந்த 36வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
-

பொலிஸார் முன்னிலையில் பொது மக்களை அச்சுறுத்திய பிள்ளையான் கும்பல்!
மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட பண்ணையாளர்களிடம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மே தினப் பேரணி மோட்டார் சைக்கிள் அணியினர் அச்சுறுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மாதவனையில் நடைபெற்ற வீதியால் வந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மே தினப் பேரணியில் வந்த ஆதரவாளர்களே இவ்வாறு நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதேவேளை பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்த பொலிஸார், விசேட அதிரடிப் படையினருக்கு முன்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மோட்டார் சைக்கிள் அணியினர் நடந்து…
-

உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர ( 2023) பரீட்சைக்கு மொத்தம் 346,976 பேர் தோற்றியிருந்தனர். இவர்களில் 281445 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 65531 தனியார் விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். இதேவேளை சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்கமைய,…
-

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்(Bandaranaike International Airport) கடமையில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரர் ஒருவரின் துப்பாக்கியொன்று செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று (30) காலை 10.25 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவத்தில் விமானப்படை வீரரின் கையிலிருந்த T-56 ரக துப்பாக்கியே தவறுதலாக செயற்பட்டுள்ளதாகவும் இதனால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.
-

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அறிமுகமாகும் புதிய வசதி!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் தங்கக் கடையொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. விமான நிலையத்தில் தங்க வணிகத்தை புதிய வர்த்தக வாய்ப்பாக அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான முன்மொழிவுகளை விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் ஸ்ரீலங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சமர்ப்பித்துள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
-

சர்வதேச மாணவர்களுக்கு கனடா அரசு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!
கனடாவில் (Canada) கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களுக்கு (International Students) கோவிட் காலகட்டத்தில் அகற்றப்பட்ட கட்டுப்பாடு இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவில் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்களை குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் பணிபுரிய அனுமதிப்பதால், அவர்களில் சிலர் கனடாவுக்கு வரும் நோக்கமே கல்வி கற்பதற்காக அல்லாமல் பணி புரிவதற்காக மாறிவிடுகிறது என கனடா புலம்பெயர்தல் துறை அமைச்சர் மார்க் மில்லர் (Marc Miller) தெரிவித்துள்ளார்.
-

14 வயது சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட சந்தேகநபர் கைது!
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட 28 வயதுடைய ஆண் என்பதுடன் எதிர்வரும் 14 ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று(30) உத்தரவிட்டுள்ளார். இதில் கைது செய்யப்பட்டவர் திருமணமான ஒரு பிள்ளையின் தந்தையும் இவர் மனைவியுடன் பிரிந்து வாழ்ந்துவருவதாகவும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில்…
-

கோவிட் தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!
கொவிஷுல்ட் (Covishield) தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என அஸ்ட்ரா செனெகா (AstraZeneca) தடுப்பூசி நிறுவனம் முதன்முறையாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த தடுப்பூசியானது பல்வேறு வழக்குகளில் உயிரிழப்புக்கள் மற்றும் உடல் உபாதைகளை ஏற்படுத்தியுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இது சிலருக்கு குருதி உறைவு நோயை ஏற்படுத்தியுள்ளதோடு குருதிக் கலங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
-

பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள சுதந்திரக் கட்சி தலைமையகம்!
நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டிருந்த சுதந்திரக் கட்சி தலைமையத்தினுள் பொலிஸார் உள்நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சீல் முததிரையை உடைத்து அகற்றிய பின்னரே இன்று காலை பொலிஸார் சுதந்திரக் கட்சித் தலைமையத்தினுள் புகுந்து, கட்டிடத்தை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்டுவந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தினுள் இருந்த முக்கியமான ஆவணங்கள், கோப்புகள் காணாமல் போயுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் மேலதிக விசாரணைகள் நிறைவடையும் வரை சுதந்திரக்…
-

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்!
ஜப்பானின் (Japan) வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா (Yoko Kamikawa) மிக விரைவில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அவர், எதிர்வரும் மே மாதம் 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.