Tag: #srilankannews

  • வீசா அனுமதி கட்டணத்தில் மாற்றமில்லை : அமைச்சரவை தீர்மானம்

    வீசா அனுமதி கட்டணத்தில் மாற்றமில்லை : அமைச்சரவை தீர்மானம்

    வெளிநாட்டவர்களிடம் அறவிடப்பட்ட 30 நாட்கள் வீசா அனுமதிக்கான 50 டொலர் கட்டணத்தை மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று (06.05.2024) இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய ஏழு நாடுகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட இலவச வீசா சேவையை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • மட்டக்களப்பில் உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிட்ட ஆசிரியர் எச்சரிக்கப்பட்டு விடுவிப்பு

    மட்டக்களப்பில் உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிட்ட ஆசிரியர் எச்சரிக்கப்பட்டு விடுவிப்பு

    மட்டக்களப்பில் (Batticaloa) சமூக ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட ஆசிரியர் ஒருவர் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். பாடசாலை சிறுமி ஒருவருக்கு இனம் தெரியாத நபர் ஒருவர் ஊசி ஏற்றியதால் சிறுமி மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்டுள்ளதாக சமூக ஊடகங்களில் குரல்பதிவிட்ட ஆசிரியரே இன்று (06) மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு வரவழகை்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டு எச்சரித்து விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜி.எம்.பி.ஆர்.பண்டார தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு நகரிலுள்ள பாடசாலையில் தரம் 5இல் கல்வி கற்றுவரும் 10 வயது…

  • யாழ். தெல்லிப்பழை பெண் மரணம்: தலைமறைவான மகன் கைது!

    யாழ். தெல்லிப்பழை பெண் மரணம்: தலைமறைவான மகன் கைது!

    யாழ். தெல்லிப்பழையில்(Jaffna) உயிரிழந்த குடும்பப் பெண்ணைக் கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பழையிலுள்ள வீடொன்றிலிருந்து நேற்றுமுன்தினம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது. அது கொலையா? தற்கொலையா? என ஆராயப்பட்ட நிலையில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் 16 வயதுடைய மகன் மீது சந்தேகம் வெளியிட்டிருந்தார். கைபேசி விளையாட்டுக்களுக்கு அடிமையான மேற்படி மகன், தாயாரின் சடலம் மீட்கப்பட்ட பின்னர் தலைமறைவான நிலையில், இன்று…

  • கனடாவில் சாலை விபத்தில் சிக்கி பலியான இந்திய தம்பதியின் அடையாளம் தெரிந்தது!

    கனடாவில் சாலை விபத்தில் சிக்கி பலியான இந்திய தம்பதியின் அடையாளம் தெரிந்தது!

    கனடாவில் பிரதான சாலை 401ல் தவறான பாதையில் சென்று விபத்தில் சிக்கி கொல்லப்பட்ட இந்திய தம்பதிகள் தொடர்பில் பெயர் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. ரொறன்ரோவில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தால் குறித்த தம்பதி அடையாளம் காணப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை இந்திய துணைத் தூதரகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், பிரதான சாலை 401ல் வாகன விபத்தில் சிக்கி பலியானவர்கள் 60 வயது மணிவண்ணன் அவரது மனைவி 55 வயது மகாலட்சுமி மற்றும் அவர்களின் பேரக்குழந்தை என குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், பாதிக்கப்பட்டுள்ள…

  • இணையவழி மோசடிகள் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை

    இணையவழி மோசடிகள் தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை

    வங்கிகள் சங்கம், லங்காபே (LankaPay) மற்றும் ‘FinCSIRT’ ஆகியன இணைந்து, இணையவழி மோசடிகள் அதிகரித்துள்ளமை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. உலகளவில் மற்றும் , கவர்ச்சிகரமான இணைய சலுகைகளை காட்டி கையடக்கத் தொலைபேசி பயனர்கள் அறியாத இணைப்புகளை கவனக்குறைவாக கிளிக் செய்து, தீங்கிழைக்கும் பயன்பாடுகள் மற்றும் கோப்புகளை பதிவிறக்கம் செய்யத் தூண்டும் மோசடிகள் குறித்து இந்த அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

  • பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

    பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

    2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு நாளைய தினம் தோற்றவுள்ள மாணவர்கள் வெப்பமான காலநிலை தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் விசேட வைத்திய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அளுத்கமகே, சாதாரண தர பரீட்சை நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் திரவ பானங்களை உட்கொள்வது பொருத்தமானது. அதற்கு மிகவும் பொருத்தமான சுத்தமான…

  • நிபந்தனையை மீறினால்  இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி!

    நிபந்தனையை மீறினால் இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி!

    IMF நிபந்தனைகளை மாற்றினால் நாடு இரு வாரங்களில் வங்குரோத்தடையும் என்று போக்குவரத்து, ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula Gunawardena) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 2022 ஆம் ஆண்டு நாடு பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. எரிபொருள், சமையல் எரிவாயு இன்றி நாடு எதிர்கொண்ட நெருக்கடியிலிருந்தும் தேசிய அழிவிலிருந்தும் அதனை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் கடன் உடன்படிக்கைக்கு சென்றது.

  • கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணியின் பொதியில் மர்மம்!

    கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணியின் பொதியில் மர்மம்!

    கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இரத்தினக் கற்களை எடுத்துச் செல்ல முற்பட்ட வேளையில், விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கன் UL 127 விமானத்தின் ஊடாக சென்னை செல்ல முற்பட்ட நபரே இவ்வாறு சிக்கியுள்ளார். குறித்த பயணியின் பயணப் பொதியில் இருந்து 482.02 கிராம் எடையுள்ள பல்வேறு வகையான மாணிக்கக் கற்கள் மீட்கப்பட்டுள்ளன.  

  • சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணிலுக்கு இல்லாத அதிகாரம்

    சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணிலுக்கு இல்லாத அதிகாரம்

    பெருந்தோட்ட மக்களின் சம்பள  விவகாரம் தொடர்பில் முடிவு எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கூட கிடையாது. அது கம்பனிகளுக்கே உண்டு என்று பொதுமகன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். பெருந்தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்  மேற்கண்டவாறு கூறினார். மேலும், கடந்த காலங்களில் எங்களை அவமானப்படுத்தினார்கள். இன்று லயத்திற்கு 10 பட்டதாரிகள் இருக்கின்றார்கள். இப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அல்ல.  மக்களால் தெரிவு செய்யப்படாத ஒருவர் இவர்.

  • இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

    இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

    இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் 3.4 மில்லியன் குடும்பங்களுக்கு அரசாங்கம் 26.6 பில்லியன் ரூபா பெறுமதியான அரிசியை வழங்கியுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் கே.ஜி.விஜேசிறி தெரிவித்துள்ளார். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் திட்டம் தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் போஷாக்கு நிலையை உயர்த்துவதே இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும் என்று…