Tag: #eelamurasu#srilankanews
-
இலங்கைக்கு அருகில் இந்து சமுத்திரத்தில் பல கோடி பெறுமதியான பெரும் புதையல்
இந்து சமுத்திர பிராந்திய கடற்படுக்கையில் இலங்கைக்கும் – மாலைத்தீவுக்கும் அருகில் பல கனிமங்கள் நிறைந்த ஒரு மலைத்தொடர் காணப்படுகின்றது என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி ஆரூஸ் தெரிவித்தார். இதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் நாடு மிகப்பெரிய செல்வந்த நாடாக மாறக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
-
பொருத்தமான நபரை நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு பணிப்பு
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதன்படி, இந்த இடைக்கால தடை உத்தரவு அமுலில் இருக்கும் காலப்பகுதியில் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு சட்டத்திற்கு அமைய பொருத்தமான நபரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவுகளை அறிவித்துள்ளது. இந்த…
-
கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: கிளப் வசந்தவின் மனைவி தொடர்பில் வெளியான புதிய தகவல்
அண்மையில் அத்துருகிரியில் சுட்டுக்கொல்லப்பட்ட வசந்த பெரேராவின் மனைவி பொது நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, கொலையுடன் தொடர்புடைய பெண் உட்பட மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா கடந்த ஜூலை 8 ஆம் திகதி அத்துருகிரியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார் இதன்படி, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபர்கள் 7 பேரை கைது செய்து…
-
கொழும்பில் நடந்த படுகொலையை நேரலையில் பார்வையிட்ட கும்பல்: வெளிநாட்டிலிருந்து வந்த கடும் எச்சரிக்கை
கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரியலில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களை அடுத்து பாதாள உலகக் குழுவினரின் அட்டகாசம் தீவிரம் அடைந்துள்ளது. கிளப் வசந்த படுகொலை செய்யப்படுவதை, கொலைத் திட்டத்தை செயல்படுத்தியதாக கூறப்படும் சஞ்சீவ புஸ்பகுமார அல்லது லொக்கு பெட்டி நேரலையில் பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதை அவர் தனது கைப்பேசி மூலம் நேரலையில் பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கிளப் வசந்த குறித்த நிலையத்தை திறக்க வந்ததில் இருந்து சுட்டுக் கொல்லப்படும் வரை நேரலையாக காட்சிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
-
அத்துருகிரிய துப்பாக்கிச் சூடு – 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு!
அதுருகிரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 05 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வாக்குமூலங்களை அதுருகிரிய பொலிஸார் பதிவு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார். துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற அத்துரிகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் நிலைய உரிமையாளர் உட்பட 05 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதுருகிரிய பிரதேசத்தில் நேற்று (08) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் “கிளப்…
-
நாளையும் நாளை மறுதினமும் அரச சேவை முடங்கும் அபாயம்!
200க்கும் மேற்பட்ட அரச சேவை சங்கங்கள் நாளை 08 தாக்கியும் மற்றும் நாளை மறுதினமும் 09 திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளன. நிறைவேற்று அதிகாரிகளுக்கு மாத்திரம் வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவை அனைத்து அரச ஊழியர்களுக்கும் வழங்குமாறு கோரி இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. கிராம உத்தியோகத்தர்கள், நில அளவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அஞ்சல் ஊழியர்கள் உட்பட பல அரச சேவை…
-
இலங்கையில் எதிர்வரும் ஜனவரி முதல் புதிய வரி
முட்டை விலையில் 15 சதவீத வற் வரி விதிக்கப்பட உள்ளதென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் எச்.எம்.டி.ஆர். அழககோன் தெரிவித்துள்ளார். இதனால் நுகர்வோர் அதிகாரசபை நிர்ணயித்த விலைக்கு முட்டைகளை விற்பனை செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 02 செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் நுகர்வோர் அதிகாரசபை மீண்டும் முட்டைக்கான அதிகபட்ச விலையை நிர்ணயித்துள்ளது. அதற்கமைய, வெள்ளை முட்டை 43-47 ரூபாய்க்கும், பழுப்பு நிற முட்டை 45-49 ரூபாய்க்கும் விற்கப்பட வேண்டும்.…