Tag: #eelamurasunews#eelamnews# srilankanews
-
உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டார் அநுர
உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டார் அநுர ஜனாதிபதி தேர்தல் 2024 இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று முடிவுகளின்படி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் இருந்தாலும், ஜனாதிபதி தேர்தலை வெற்றிக் கொள்வதற்கு போதுமான சதவீதம் கிடைக்கப்பெறவில்லை. எனவே இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டன. இதனடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை விட…
-
குற்றவியல் சட்டத்தை திருத்த அனுமதி
குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எந்தவொரு முறையிலும் உடல் ரீதியிலான தண்டனையை தடை செய்யும் வகையில், தண்டனைச் சட்டம் திருத்தப்பட்டு, அதற்கு உரிய சட்டத்தை உருவாக்குவதற்காக கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, வரைவு தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளது. சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அதனை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால்…
-
ஜனாதிபதி தேர்தலால் வடக்கு கிழக்கு தமிழருக்கு என்ன பயன்
ஜனாதிபதி தேர்தல் ஒவ்வொன்றும் வடக்கு கிழக்கு தமிழருக்கு அவர்களின் வாக்குகளை பெறுவது தான் இலக்காக இருந்து வருகிறது அந்த வகையில் இந்த 2024 டிசம்பர் 21 தேர்தல் நடாத்த தீர்மானங்கள் செய்யப்பட்டது அதில் பெரும்பான்மையான மூவர் தமிழனுக்காக என்று ஒருவர் களத்தில் இறங்க இருக்கும் தேர்தல் எவ்வாறு சாத்தியமாகும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டிய நிலையில் தமிழர்கள் இருக்கின்ற போது உலக அரங்கில் பல இடங்களில் தமிழர்கள் நாடு கடந்த எமது அரசாங்கமும் தீர்மானங்களை தெரிவிக்க வேண்டும்…
-
நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் பிரதமரின் முக்கிய அறிவிப்பு
மீண்டும் ஜனாதிபதியாக ரணில் தெரிவு செய்யப்பட்டால் அடுத்த பிரதமர் தொடர்பில் அவர் தான் தீர்மானிக்க வேண்டும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் இதன்போது, “அடுத்து இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றால் நாடாளுமன்றம் கலைக்கப்படுமா..” என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பிரதமர் தினேஷ் குணவர்தன, அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை ஆயுளை கொண்டுள்ள நாடாளுமன்றம் ஜனாதிபதியிடம் உள்ளது. அவர்…
-
உலகின் மிக நீளமான முத்திரை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
கண்டி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலதா மாளிகை பெரஹராவை குறிக்கும் வகையில் தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட உலகில் மிக நீளமான முத்திரையான 205 மி.மீ நீளமான நினைவு முத்திரை சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
-
22 பேரால் தவறான செயற்பாட்டிற்கு உள்ளான மாணவிக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பு
22 பேரால் தவறான செயற்பாட்டிற்கு உள்ளான மாணவிக்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பு மொனராகல, தனமல்வில பிரதேசத்தில் தகாத முறைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 16 வயது மாணவிக்கு மர்ம அழைப்பு ஒன்று வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் அத்தியட்சகர் தாம் என கூறி மாணவியை அழைத்து வாக்குமூலம் பெற முயற்சிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவரது பெற்றோர் செய்த முறைப்பாட்டிற்கமைய, பொலிஸ் தலைமையகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.…
-
நாமல் ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார். விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நாமல் ராஜபக்ச வேட்பு மனுவில் கையொப்பமிட்டார். இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய நாமல் ராஜபக்ஷ சார்பில், கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இன்று (14) முற்பகல் கட்டுப்பணம் செலுத்தினார். ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜனாதிபதி வேட்பாளர்…
-
அதிரடி கைது வியாழேந்திரனின் செயலாளர்
வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் உதவியாளர்கள் இருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் இன்றையதினம் (01.08.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆற்று மணல் அகழ்வுக்கான உரிமத்தினை பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு அவர்களுக்கு இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-
மகிந்த மொட்டு கட்சிக்கு கலக்கத்தை ஏற்படுத்திய ரணிலின் இரகசிய திட்டம்
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இலங்கையில் புதிய தலைவர் ஒருவரை தேர்வு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள நிலையில், நாட்டின் அரசியல் களம் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கின்றதை காணமுடிகிறது 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பின்னர் அந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் மீதான மக்களின் எதிர்பார்ப்பு எந்த அளவு உச்சத்தில் இருந்ததோ அதற்கு துளிகூட குறையாத வகையில் இவ்வருடம் நடத்தப்படவுள்ள ஜனாதிபதி…
-
தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்!
சனாதிபதித் தேர்தல் 2024 பெயர் குறித்த நியமனப்பத்திரங்களைப் பொறுப்பேற்றல், வைப்புப் பணம் செலுத்துதல் மற்றும் வாக்கெடுப்பு தொடர்பாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு சார்பாக அதன் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.சத்நாயக்க அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி, 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் 2 ஆவது மற்றும் 8 ஆவது பிரிவுகள் குறித்து வாக்காளர்களுக்கு பின்வரும் விடயங்களைத் தெளிவு படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. சனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு 2024, செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி…