Tag: # colombo#eelamurasunews#eelamnews# srilankanews

  • குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரை, உயர் நீதிமன்ற வளாகத்தில் தடுத்து வைக்குமாறு உத்தரவு

    இன்று மாலை நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் வரை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளரை, நீதிமன்ற வளாக சிறையில் தடுத்து வைக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னதாக, இன்று (25.09.2024) காலையில், நீதிமன்றத்தை அவமதித்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய மீது குற்றம் சுமத்துவதற்கான விதியை, இலங்கை உயர் நீதிமன்றம் வெளியிட்டது. அதேவேளை, இலங்கையில் இணையம் மற்றும் வெளிநாட்டு விசா நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கும் அமைச்சரவை தீர்மானத்தை இடைநிறுத்தும் வகையில், நீதிமன்றம் ஏற்கனவே…

  • ஊரடங்குச் சட்ட காலம் தொடர்பில் பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு

    ஊரடங்குச் சட்ட காலம் தொடர்பில் பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் கொழும்பு விமானநிலையத்திற்கு செல்லவேண்டிய நிலையில் உள்ள பயணிகள் தங்களின் பயண திட்ட ஆவணத்தை ஊரடங்கு வேளையில் பயணிப்பதற்கான அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம். பொலிஸ் ஊடக பிரிவு இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதேவேளை வெளிநாடுகளில் இருந்து கொழும்பு விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கள் போர்டிங் பாஸ்களை ஊரடங்கு வேளையில் பயணம் செய்வதற்கான அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை, அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கின்ற…

  • பதற்றமடைய வேண்டாம் : நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரை!!

    ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்பிற்கு பின்னரான வன்முறைகள் குறித்து பதற்றமடைவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் காலத்தில் சமூக அமைதியை பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அவர் ஐக்கியத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மதத்தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், அரசியல் செயற்பாட்டாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார். நாங்கள் அனைவரையும் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டு அமைதியான சூழலிற்கு பங்களிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றம். அனைத்து பிரஜைகளும்…

  • கொழும்பில் வீடொன்றுக்குள் சிறைப்பிடிக்கப்பட்ட நபர் – விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

    கொழும்பில் வீடொன்றுக்குள் சிறைப்பிடிக்கப்பட்ட நபர் – விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல் மாத்தறை சட்டத்தரணிகள் சங்கத்தின் அதிகாரிகள் சந்தேக நபருடன் தொலைபேசியில் உரையாடி, அவர் போலி மாவட்ட நீதிபதி மற்றும் போலி சட்டத்தரணி என காட்டிக் கொள்ளும் நபர் என பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணையில் 20 வருடங்களுக்கு முன்னர் பொரளை பிரதேசத்தில் உள்ள இடமொன்றில் இருந்து இவர் இந்த போலி அடையாள அட்டையை தயாரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. சட்டத்தரணி போல் காட்டிக்கொண்டு ஹோமாகம, பதுளை,…

  • புதிதாக 75,000 வேலை வாய்ப்புகள்!

    ஏற்றுமதி பொருளாதாரம், உற்பத்தி, சுற்றுலா, தொழில்நுட்பத் துறை, நவீன விவசாய முறை ஆகியவற்றின் ஊடாக நாட்டுக்குள் வலுவான பொருளாதாரத்தைக் கட்டமைக்க முடியும் என்றும், அதற்கு அவசியமான அடித்தளத்தை அரசாங்கம் இட்டுள்ளதெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கையின் மிகப் பெரிய ஏற்றுமதி வலயமாக 1000 ஏக்கர் பரப்பளவில் பிங்கிரிய ஏற்றுமதி வலயத்தின் இரண்டாம், மூன்றாம் கட்ட அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கும் வகையில் இன்று (12) நடைபெற்ற நிகழ்விலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். நாட்டில் புதிய ஏற்றுமதிப்…

  • கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: பாடகி சுஜீவாவின் கணவரின் உடல் அடக்கம்

    கொழும்பை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: பாடகி சுஜீவாவின் கணவரின் உடல் அடக்கம் அதுருகிரியில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த பாடகி கே. சுஜீவாவின் கணவர் நயன வசுல விஜேசூரியவின் இறுதிக் கிரியைகள் இன்று (10) தலஹேன பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளன. அத்துருகிரிய பிரதேசத்தில் நேற்று முன்தினம் (08) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கிளப் வசந்த உள்ளிட்ட மேலும் ஒருவர் உயிரிழந்ததுடன், கிளப் வசந்தவின் மனைவி மற்றும் பாடகி சுஜீவா உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் அதுருகிரிய…

  • கொழும்பில் உயிரிழந்த மாணவர்கள் தொடர்பில் மர்மமான திடுக்கிடும் தகவல்கள்

    அண்மையில் கொழும்பில் உயிரிழந்த சர்வதேச பாடசாலை மாணவர்கள், இருவர் தொடர்பில் பல்வேறுபட்ட, முன்பின்னான முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் தற்போதைய தகவல்களின்படி உயிரிழந்த மாணவனின் தந்தை மிகப்பெரும் பணக்காரர் என்பது தெரியவந்துள்ளது. உலகளாவிய ரீதியில் செயற்படும் சிகையலங்கார தொழில்துறையில் தந்தை ஈடுபட்டு வரும் நிலையில் அவருக்கு உலகின் பல நாடுகளில் அதற்கான கிளைகளும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் டெல்லியை தளமாக கொண்டு செயற்படும் குறித்த சலூன் இலங்கையிலும் மிகவும் பிரபல்யம் அடைந்த ஒன்றாகும். அத்துடன்…