Category: விளையாட்டு செய்திகள்

  • உசேன் போல்டின் 100 மீட்டர் உலக சாதனையை முறியடித்த சீன ஹியூமனாய்டு ரோபோ!

    பெய்ஜிங்கில் நடைபெறும் உலக ஹியூமனாய்டு ரோபோ போட்டியில், சீனாவைச் சேர்ந்த ‘டியான்ங்காங் அல்ட்ரா’ (Tiangong Ultra) என்ற ஹியூமனாய்டு ரோபோ 100 மீட்டர் இலக்கை 9.39 வினாடிகளில் கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. இது ஜமைக்காவின் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் 2009-இல் படைத்த 9.58 வினாடி உலக சாதனையை விட அதிவேகமானது. ‘பெய்ஜிங் ஹியூமனாய்டு ரோபோ இன்னோவேஷன் சென்டர்’ உருவாக்கிய டியான்ங்காங் அல்ட்ரா, பந்தயத்தின் தொடக்கத்தில் பின்தங்கியிருந்தாலும் இறுதிப் பகுதியில் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான…

  • சர்வதேச கால்பந்திலிருந்து ஓய்வை அறிவித்த நெய்மர்

    பிரேசிலின் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மர் ஜூனியர் , சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2026 ஃபீஃபா (FIFA) உலகக் கோப்பை தொடரின் ‘ரவுண்ட் ஆஃப் 16’ (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் பிரேசில் 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறியதைத் தொடர்ந்து அவர் இந்த உருக்கமான முடிவை எடுத்தார். உலகக் கோப்பையில் நார்வேக்கு எதிரான நாக்-அவுட் போட்டியில் பிரேசில் தோற்று வெளியேறியது. இந்த ஆட்டத்தில்…

  • 2026 உலகக் கிண்ணக் செம்பியன்ஷிப் தொடர்: அர்ஜென்டினா அணி மீது ஒழுங்கு நடவடிக்கை

    2026 ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் செம்பியன்ஷிப் தொடரின் போது இடம்பெற்ற பல விதிமீறல்கள் மற்றும் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பாக, அர்ஜென்டினா காற்பந்து சங்கம் (AFA) மற்றும் வீரர்கள் மீது சர்வதேச காற்பந்து சம்மேளனம் ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற பிறகு, அர்ஜென்டினா வீரர்கள் ‘லாஸ் மால்வினாஸ் சோன் அர்ஜென்டினாஸ்’ (‘ஃபாக்லாண்ட்ஸ் அர்ஜென்டினாவுக்குச் சொந்தமானது’) என்ற வாசகம் அடங்கிய பதாகையைக் காட்சிப்படுத்தினர்.…

  • டி20 தரவரிசையில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி முன்னேற்றம்

    டி20 தரவரிசையில் இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக முன்னேற்றம் பெற்றுள்ளார். ஐ.சி.சி கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழமை வெளியிடப்படுகிறது. அதன்படி, இந்த வாரத்துக்கான ஐசிசி தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூலை 29) வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய அணியின் 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக முன்னேற்றம் பெற்றுள்ளார். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இடம்பெற்றிருந்த வைபவ் சூர்யவன்ஷி, அயர்லாந்து தொடரில் விளையாடவில்லை என்றாலும், இங்கிலாந்து…

  • உலக டெஸ்ட் கிரிக்கட் செம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    சர்வதேச கிரிக்கட் பேரவையின் 2025-2027 உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அவுஸ்திரேலியா முதலிடத்தை பெற்றுள்ளது. தென்னாபிரிக்க அணி இரண்டாம் இடத்திலும், நியூஸிலாந்து மூன்றாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன. பங்களாதேஷ், இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் என்பன 4ஆம் இடம் முதல் 8 ஆம் இடம் வரையில் தரப்படுத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தானிய அணி புள்ளிப்பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது. உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் புள்ளிகளைப் பொறுத்தவரையில், வெற்றிகளுக்கு 12 புள்ளிகளும், சம முடிவுகளுக்கு 6…

  • LPL ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு: ஜஃப்னா கிங்ஸ் அணி இணை உரிமையாளர் உள்ளிட்ட இருவரின் பிணை கோரிக்கை நிராகரிப்பு!

    லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரில் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஜஃப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் உள்ளட்ட இரு சந்தேகநபர்களின் பிணை விண்ணப்பத்தை கொழும்பு பிரதம நீதவான் அஸங்க எஸ். போதரகம இன்று (27) நிராகரித்துள்ளார். கடந்த 24ஆம் திகதி சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கே.டபிள்யூ.எஸ். பெர்னாண்டோவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த நீதவான், பிணை கோரிக்கையை நிராகரித்து கட்டளையிட்டார். தனது சேவைபெறுநர்கள் இருவரும் நோய்வாய்ப்பட்டுள்ளதால்…

  • 2030 உலகக்கிண்ணக் கால்பந்து போட்டி திகதி அறிவிப்பு

    24-ஆவது FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2030 ஆம் ஆண்டு ஜூன் 8 முதல் ஜூலை 21 வரை நடைபெறவுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) தற்காலிக அட்டவணையை வெளியிட்டுள்ளது. உலகக்கோப்பை வரலாற்றிலேயே முதல் முறையாக 44 நாட்கள் நீடிக்கும் மிக நீண்ட தொடராக இது அமையவுள்ளது. உலகக்கோப்பையின் 100-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நூற்றாண்டு விழா மற்றும் முதல் சுற்றுப் போட்டிகள் தென் அமெரிக்காவில் தொடங்கும். மொராக்கோ, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அதிகாரப்பூர்வ…

  • வெற்றிக் கிண்ணத்துடன் நாடு திரும்பிய ஸ்பெயின் அணிக்கு உற்சாக வரவேற்பு

    2026 ஃபிஃபா (FIFA) உலகக் கிண்ணக் கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் தேசிய கால்பந்து அணி, வெற்றிக் கிண்ணத்துடன் தங்களது தாய்நாட்டிற்குத் திரும்பியுள்ளது. நாட்டை வந்தடைந்த வீரர்களுக்கு அந்நாட்டு இரசிகர்கள் திரண்டு வந்து பிரம்மாண்ட வரவேற்பு அளித்துள்ளனர். அத்துடன், வெற்றியடைந்த வீரர்கள் உலகக்கிண்ணத்தை திறந்தவெளிப் பேருந்தில் சென்று நகரின் முக்கிய வீதிகளில் அணிவகுப்பு நடத்தினர். இந்தத் வெற்றி அணிவகுப்பைக் காணவும், வீரர்களை வாழ்த்தவும் இலட்சக்கணக்கான ஸ்பெயின் இரசிகர்கள் வீதிகளின் இருபுறமும்…

  • ஸ்பெயின் கிண்ணத்தை ஏந்தியபோது திரும்பி நின்ற ஆர்ஜென்டினா வீரர்கள்

    2026 FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை ஏந்தியபோது, ஆர்ஜென்டினா வீரர்கள் மேடையை நோக்கித் திரும்பாமல் மைதானத்தின் மறுபக்கம் தங்களின் ரசிகர்களை நோக்கித் திரும்பி நின்றது உலகளவில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இந்தத் தோல்வியின் ஏமாற்றத்தில் ஆர்ஜென்டினா வீரர்கள் இவ்வாறு நடந்துகொண்டனர். ஆர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு…

  • உலகக் கோப்பையில் லமின் யமாலைவிட அதிகம் வைரலான இந்த குட்டி பையன் யார் தெரியுமா?

    மைதானத்தின் பெரிய திரையில் கை அசைத்து, நாக்கை நீட்டி சேட்டை செய்த கெய்னைப் பார்த்து, லமின் யமாலும் அவரது சக வீரர்களும் சிரித்த தருணமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.       அர்ஜென்டினாவை 1-0 என்ற Goal  கணக்கில் வீழ்த்தி, இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்றிருக்கிறது ஸ்பெயின். இன்று சமூக வலைதளங்கள் முழுவதும் ஸ்பெயினின் வெற்றிதான் பேசுபொருளாக இருந்தாலும், அதே அளவுக்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இன்னொரு பெயரும் இருக்கிறது. அது லமின் யமால்…