Category: முக்கிய செய்தி

  • பாடசாலைகளுக்கு மிக நீண்ட விடுமுறை! பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

    இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு மிக நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால், விடுமுறை காலத்தில் பிள்ளைகள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்திற்கும் இன்று(22) முதல் விடுமுறை வழங்கப்படுகின்றது. அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு பெறுவதுடன், மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி…

  • உக்ரைன் மீது பயங்கர தாக்குதல்! வெகுநாட்களுக்கு பின் மீண்டும் தோன்றிய புடின்

    ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடிய ஏவுகணையை கொண்டு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்ய ஜனதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். புடின் வெகுநாட்களாக பொதுவெளிகளில் தென்படவில்லை என்ற கருத்து பரவி வந்த நிலையில், நேற்றயதினம் (21.11.2024) உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக அவரே கூறியுள்ளார். மேற்கத்தைய நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட ஏவுகணைகளை ரஷ்யா மீது உக்ரைன் பயன்படுத்தியதையடுத்தே, இந்த தாக்குதலை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் மேற்கத்தைய நாடுகளையும்…

  • டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு

    இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான காசோலை மோசடி தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். குறித்த பிடியாணை இன்றையதினம் (21) பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனோகரன் வர்த்தகர் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான காசோலைகளை வழங்கி மோசடி செய்ததாக டக்ளஸ் தேவானந்தா செய்த முறைப்பாட்டின் பிரகாரம், டக்ளஸ் தேவானந்தா நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா நோய்வாய்ப்பட்டிருப்பதால்…

  • வடக்கில் இராணுவ முகாம் அகற்றப்பட்டமை குறித்து அதிருப்தியடைந்துள்ள நாமல்

    வடக்கு மாகாணத்தில் இராணுவ முகாம் ஒன்று அண்மையில் அகற்றப்பட்டமை குறித்து, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். அத்துடன், எதிர்வரும் மாதங்களில் மேலும் பல முகாம்களை அகற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமது எக்ஸ் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ள அவர், குடிமக்களுக்கு நிலத்தை மீள விடுவிப்பதில் பிரச்சினை இல்லை. எனினும், இந்த விடயத்தில் தேசிய பாதுகாப்பில் சமரசம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்புப் படைகளுடன் கலந்தாலோசித்து…

  • சீனாவால் வடக்கு மக்களின் வாழ்வாதாரத்துக்காக 12 மில்லியன் ரூபா நிதி உதவி

    வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவும் வகையில், சீன அரசாங்கத்தால் 12 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனிடம் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் நேற்று (20.11.2024) கையளித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை, வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று காலை இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங் தலைமையிலான குழுவினர் சந்தித்தனர். இதன்போது, அவர் இந்தக் காசோலையைக் கையளித்ததுடன் வடக்கு மாகாண…

  • நீரை சேமித்து வையுங்கள்! மூன்றாம் உலகப்போர் எச்சரிக்கையை விடுத்த ஐரோப்பிய நாடு

    மூன்றாம் உலகப்போர் அச்சம் உருவாகியுள்ளதால் உணவுப்பொருட்கள் மற்றும் தண்ணீரை சேமித்துவைக்குமாறு சுவீடன் அரசாங்கம் அந்நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் அணு ஆயுதத்தை பயன்படுத்த அந்நாட்டு இராணுவத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் தங்களின் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றன. அந்தவகையில், சுவீடன் நாடு விடுத்துள்ள எச்சரிக்கையானது சர்வதேச ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, ஐரோப்பாவின் முக்கியமான மற்றும் ஏழாவது பெரிய நாடாக கருதப்படும் ஜெர்மனி நாட்டின் அரசாங்கமும்…

  • கொழும்பில் சமூக பிறழ்வான முறையில் இயங்கிய விடுதிகள்: வியட்நாம் பெண்கள் கைது

    வாடிக்கையாளர்களிடம் இருந்து 35,000 ரூபாய் முதல் 50,000 வரை கட்டணம் வசூலித்து, கொழும்பில் சமூக பிறழ்வான முறையில் இயங்கிய இரண்டு விடுதிகளை நடத்திய, வியட்நாமியப் பெண்கள் குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினர் இந்த கைது நடவடிக்கையை இன்று (20) மேற்கொண்டுள்ளனர். இதன்படி, பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வோர்ட் பிளேஸில் உள்ள வீடு ஆகியவற்றில் இருந்து, குடிவரவு திணைக்களத்தினர், ஏழு பெண்கள் உட்பட ஒன்பது வியட்நாம் நாட்டவர்களை கைது செய்தனர்.…

  • அநுரவிற்கு சவாலாகும் அமெரிக்க இராணுவ தரையிறக்கம் தொடர்பான ஒப்பந்தம்

    இலங்கை, அமெரிக்காவுடன் மேற்கொண்டு நிலுவையில் உள்ள சோஃபா ஒப்பந்தத்தினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசிற்கு சிக்கல் நிலைய ஏற்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “மைக் போம்பியோ, அமெரிக்காவினுடைய வெளியுறவு துறை செயலாளராக இருந்த போது, அதாவது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முதலாவது ஆட்சி காலத்தின் இறுதி கட்டத்தின்போது போம்பியோ இலங்கைக்கு விஜயம்…

  • பொலிஸ் அரசியலுக்கு முடிவு கட்டப்படும் : புதிய அமைச்சரின் உறுதிமொழி

    பொலிஸ் அரசியல் மயமாக்கலுக்கு முடிவு கட்டுவதற்கு, இலங்கையின் புதிய பொது பாதுகாப்பு அமைச்சர் உறுதியளித்துள்ளதுடன், இலஞ்சம் மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் மக்களுக்கு உறுதியளித்துள்ளார். பொலிஸின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கு தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் புதிய பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜயபால நேற்று (20) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். முந்தைய அரசாங்கங்களின் கீழ் பொலிஸ்துறை அரசியல் மயமாக்கப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை பொலிஸாரை அரசியல் செல்வாக்கிலிருந்து விடுவிக்க ஜனாதிபதி…

  • ஜனாதிபதியின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் சட்டம்! இந்தியா தீவிர நாட்டம்

    புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை 21 உறுப்பினர்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது உண்மையில் வரவேற்கத் தக்க விடயம் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அ.சர்வேஸ்வரன்(A.Sarveshwaran) தெரிவித்தார். இதன் மூலமாக பல்வேறு நிதி வீண் விரயங்களைத் தடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஊடக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதேவேளை, ஜனாதிபதியின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் சட்டம் தொடர்பிலும், இலங்கை குறித்து இந்தியாவின் அடுத்தக் கட்ட நகர்வு தொடர்பிலும் பேராசிரியர் இதன்போது தெளிவுபடுத்தினார் என்பது…