Category: முக்கிய செய்தி
-
அநுர மற்றும் தென்னிலங்கை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய சுமந்திரன் தொடர்பான முடிவு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படாமல் போனது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் தென்னிலங்கை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமந்திரன் நாடாளுமன்றத்தில் இருந்திருந்தால் அரசாங்கத்திற்கு சார்பாகவே செயற்பட்டிருப்பார். எனவே, அவர் தேர்தலில் தோல்வியுற்றது அநுர மற்றும் தென்னிலங்கை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் எனக் கூறப்படுகின்றது. சுமந்திரன் தமிழ் மக்களின் உரிமைக்காக தீவிரமாக போராடியிருந்தால் தென்னிலங்கையில் அவருக்கு இந்தளவுக்கு ஆதரவு இருந்துருக்காது. இவ்வளவு காலமும் அரசாங்கத்துக்கு சார்பாக சுமந்திரன் செயற்பட்டதாலேயே அவரை…
-
மன்னிப்பு கோரிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா
பத்தாவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் போது, கவனக்குறைவாக எதிர்க்கட்சித் தலைவருக்கான ஆசனத்தில் அமர்ந்திருந்தாக கூறி, யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், சம்பவம் தொடர்பில் மன்னிப்பு கோரியுள்ளார். புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக நேற்று (25.11.2024) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செயலமர்வின் போதே இந்த மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. இதன்போது, அர்ச்சுனா, தனது செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்ததுடன், எதிர்க்கட்சித் தலைவருக்கான நியமிக்கப்பட்ட ஆசனத்தில் அமரத் தீர்மானித்தமையினால் ஏற்பட்ட தவறான புரிதலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். குறித்த தினத்தில்…
-
இந்தியாவிற்கு விஜயம் செய்த ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். இந்தியாவின் மத்திய பிரதேசத்தின் இந்தோரில் சத்திய சாய் வித்தியா விஹார் உயர் கல்வி நிறுவனத்தின் நிகழ்வு ஒன்றில் பங்குபற்றுவதற்காக அவர் இவ்வாறு இந்தியா சென்றுள்ளார். இந்த விஜயத்தில் ரணில் விக்ரமசிங்கவுடன் அவரது துணைவியாரான மைத்திரி விக்ரமசிங்கவும் இணைந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட சொற்பொழிவொன்றை ஆற்ற உள்ளார். இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 30ஆம் திகதி நாடு திரும்புவார்…
-
வடக்கு – கிழக்கில் மோசமடையும் இயற்கைச் சீற்றம்! மக்களுக்கு அவசர எச்சரிக்கை
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் வடக்கில் பாதிப்பு அதிகமாக உள்ளது. மேலும், நிலவும் சீரற்ற காலநிலை தொடர்பில் பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருவதுடன் அவதானமாக செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போதைய வானிலை தொடர்பில் வெளிவரும் அறிவிப்புக்களை மக்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் அவதானத்துடன் செயற்படுமாறு யாழ்.பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் தலைவர், சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா…
-
நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய அர்ச்சுனா – சபாநாயகர் வெளியிட்ட தகவல்
நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய அர்ச்சுனா – சபாநாயகர் வெளியிட்ட தகவல் நாடாளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுடன் கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சபாநாயகர் அஷோக ரங்வல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அர்ச்சுனா அமர்ந்தமையினால் குழப்ப நிலைமை ஏற்பட்டது. இதன்போது அவர் வெளியிட்ட சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கமைய, இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடி மேலதிக நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். சபாநாயகர் தகவல் நேற்று பிற்பகல்…
-
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரம்! நம்பிக்கையை இழந்த புதிய அமைச்சர்
போர் முடிவடைந்து 15 வருடங்களாகின்றன. எனவே காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் இனியும் வருவார்கள் என்று நம்ப முடியாது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் தொடர்ந்தும் தெரிவிக்கையில், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தான். இதில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இருக்கின்றனர். தமது பிள்ளைகளை ஒரு சில அதிகாரிகளிடம் ஒப்படைத்த மக்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்று கேட்கின்றனர். இதன் பின்னணியை தேடிப்பார்க்கும் போது, அங்கும்…
-
புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களுக்கான வாகனங்கள் – அரசு வெளியிட்டுள்ள தகவல்
அமைச்சரவை மற்றும் பிரதி அமைச்சர்கள் முந்தைய அரசாங்கத்தில் அமைச்சர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ வாகனங்களைப் பயன்படுத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உத்தியோகபூர்வ சொகுசு அல்லாத, எரிபொருள் திறன் கொண்ட வாகனம் வழங்கப்படும் என்று அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளது இதன்படி, அனைத்து 159 அரசாங்க நாடாளுமன்ற ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு அதிகார பூர்வ வாகனம் இருக்கும். அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள், தமது அமைச்சுக்களை மேற்பார்வையிட்ட முன்னைய அமைச்சர்களுக்கு அந்தந்த அமைச்சுகளால் ஒதுக்கப்பட்ட வாகனங்களைப்…
-
அநுரவிற்கு ஆபத்தாகும் அரசியல் யாப்பு விவகாரம்
இலங்கையின் அரசியல் யாப்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாற்றங்களை ஏற்படுத்துவராயின் அது அவருக்கு வாக்களித்த அனைத்து தரப்பினரையும் திருப்தியடைய செய்யும் என கூற முடியாது. இவ்வாறிருக்க, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை அநுர சுமத்தியிருந்தார். ஒரு நாட்டின் உண்மையான அபிவிருத்தி என்பது ஊழலற்ற ஆட்சிக் கட்டமைப்பை உருவாக்குவதும் ஆகும். எனினும், இலங்கையில் ஊழலுக்காக அமைச்சர்கள் கூட கைதுசெய்யப்பட்ட வரலாறு மிகக்குறைவு. இந்நிலையில்,…
-
3ம் உலகப்போர் தொடங்கி விட்டது.. முட்டிமோதும் வல்லரசுகள்.. உடைத்து பேசிய உக்ரைனின் மாஜி படை தளபதி
3ம் உலகப்போர் தொடங்கி விட்டது.. முட்டிமோதும் வல்லரசுகள்.. உடைத்து பேசிய உக்ரைனின் மாஜி படை தளபதி மூன்றாம் உலகப்போர் அதிகாரப்பூர்வமாக தொடங்கிவிட்டது என்று உக்ரைனின் முன்னாள் ராணுவ தளபதி வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுக்கு பிறகு அமெரிக்கா, வட கொரியா, ஈரான், சீனா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டை சுட்டிக்காட்டி பரபரப்பை பற்றவைத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் நடவடிக்கையை தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வந்தால்…
-
அடுத்த மூன்று நாட்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அடுத்த மூன்று நாட்களில் நாட்டின் வானிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நவம்பர் 23ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஒரு இலட்சம் ரூபாய் செலவிட்டு நாடாளுமன்றம் சென்ற பெண் சட்டத்தரணி ஒரு இலட்சம் ரூபாய் செலவிட்டு நாடாளுமன்றம் சென்ற பெண் சட்டத்தரணி அதன் பின் அடுத்த இரண்டு நாட்களில் அது தென்மேற்கு…