Category: முக்கிய செய்தி
-
கனடாவில் இந்த வாகனங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவில் போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் ஹைபிரிட் ரக வாகனங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஹைபிரிட் ரக வாகனங்கள் சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹொண்டா நிறுவனத்திற்கு சொந்தமான ஹைபிரிட்டாக வாகனங்கள் குறித்து இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 61000 ஹோண்டா ஹைபிரிட் ரக வாகனங்கள் இவ்வாறு வாபஸ் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ளது உயர் அழுத்தம் காரணமாக எரிபொருள் தாங்கியில் ஏற்பட்ட கோளாரினால் எரிபொருள் கசிவடைந்து தீ பற்றி சொல்லக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால்…
-
அநுரவின் முடிவினால் சர்வதேசம் அதிர்ச்சி
கடந்த காலங்களில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயற்பட்ட ஜே.வி.பியினரால் ஒருபோதும் தமிழ் மக்கள் எந்தவித தீர்வினையும் பெற்றுக்கொள்ள முடியாது என தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தினால் வழமைப்போன்று தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்றப்படுவர் என்ற எச்சரிக்கை உணர்வுடனேயே பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது, அநுர குமார திசாநாயக்க கடந்த காலங்களில் ஈழத்தமிழர்களுக்கான பல வாய்ப்புகளை எதிர்ப்பதற்கும், முறிப்பதற்கும்,தடுப்பதற்கும் தீவிரமாக செயற்பட்டவர். யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்ட ஜே.வி.பியினர் இன்று வரையில் மாறாமல் அவ்வாறே தமிழர்களுக்கு…
-
கனடிய விமான பயணிகளுக்கு நற்செய்தி
கனடிய விமான பயணிகளுக்கு சார்பான வகையில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விமான பயணங்கள் தாமதமாவது மற்றும் பயண பொதிகள் சேதமடைதல் ஆகியன தொடர்பில் பயணிகள் தாக்கல் செய்த வழக்கு தொடர்பில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு சாதக தீர்ப்பு வழங்கியுள்ளது. சில விமான சேவை நிறுவனங்கள் கூட்டாக இணைந்து தாக்கல் செய்த மேன்முறையீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளு கனடிய விமான பயணிகளுக்கு சார்பான வகையில் அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விமான பயணங்கள் தாமதமாவது…
-
கனடாவில் பயங்கர சம்பவம்… பரிதாபமாக உயிரிழந்த பிரான்ஸை சேர்ந்த தாய் – மகள்!
கனடாவின் மொன்றியாலில் இடம்பெற்ற தீ விபத்து சம்பவத்தில் தாய் ஒருவரும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸைச் சேர்ந்த பெண்ணும் அவரது ஏழு வயது மகளும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பில் மொன்றியால் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 43 வயதான லெனோர் கிராயாடி மற்றும் பரன் டிரைன் கிராயாடி ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த தீ விபத்துக்கான காரணங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை. இந்த தீ விபத்து சம்பவம்…
-
கனடாவில் ஆசிரியர் ஒருவரின் தகாத செயல்!
கனடாவின் யோர்க் பிராந்தியத்தில் ஆசிரியர் ஒருவர் தகாத செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 22 ஆண்டுகளாக உயர்நிலைப் பள்ளிகளில் ஆசிரியராக கடமையாற்றி வரும் 47 வயதான ஆசிரியர் ஒருவரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். பதின்ம வயதுடைய மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 5ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எந்த பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றது என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை. எவ்வாறு எனினும் டொரண்டோவை…
-
கனடிய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி
கனடாவின் லிபரல் அரசாங்கத்திற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. சிறுபான்மை அரசாங்கமான லிபரல் அரசாங்கத்திற்கு எதிராக பியே பொலியேவின் தலைமையிலான கான்சர்வேட்டிவ் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றில் சமர்ப்பித்தது. எனினும் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நிபந்தனை அடிப்படையில் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதாக பிளாக் கியூபிகோ கட்சி அறிவித்துள்ளது. தங்களது நிபந்தனைகள் எதிர்வரும் மாதத்திற்குள் நிறைவேற்ற தவறினால் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கப்படும் என பிளாக்…
-
கனடா அமைச்சரவையில் இடம்பிடித்த இரு தமிழர்கள்!
கனடா அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இரு தமிழர்கள் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளனர். அந்தவகையில் , போக்குவரத்து துறை அமைச்சராக அனிதா ஆனந்தும் , போக்குவரத்து துணை அமைச்சராக அருண் தங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் நாயகத்தின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் அனிதா ஆனந்த் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ளார். அதேவேளை அமைச்சரவையில் இருந்து போக்குவரத்து அமைச்சர் Pablo Rodriguez விலகிய நிலையில் புதிய அமைச்சராக அனிதா ஆனந்த் பதவியேற்றுள்ளார். திறைசேரி வாரியத் தலைவராக இருந்த அனிதா ஆனந்திற்கு போக்குவரத்து அமைச்சு…
-
புதிய பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நியமனம்
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். முதலாம் இணைப்பு ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது புதிய பாதுகாப்பு செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி இந்த பதவிக்கு எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துயகொண்டா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன் பதவிப் பிரமாணம்
இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து அவர் தனது விசேட உரையை நிகழ்த்தியுள்ளார். இந்த நிலையில் அநுரகுமார திசாநாயக்கவின் ஆதரவாளர்கள் பலர் காலிமுகத்திடல் பகுதியில் திரண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அநுரகுமார திசாநாயக்க இன்னும் சில நிமிடங்களில் இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட…
-
உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டார் அநுர
உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டார் அநுர ஜனாதிபதி தேர்தல் 2024 இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று முடிவுகளின்படி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் இருந்தாலும், ஜனாதிபதி தேர்தலை வெற்றிக் கொள்வதற்கு போதுமான சதவீதம் கிடைக்கப்பெறவில்லை. எனவே இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டன. இதனடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை விட…