Category: முக்கிய செய்தி
-
சிறைக்கு அனுப்பப்பட்ட ரணில்.. ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ள தகவல்
கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஓகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்திருப்பது தொடர்பில் கட்சி தீவிரமாக ஆராயும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். மேலும், அவருக்கு எதிரான வழக்கினை எதிர்த்து கட்சி போராடும் என்றும் ருவான் விஜேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று (22.08.2025) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவர், நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட போது அவரை 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
-
40 நாடுகளுக்கான விசா கட்டணங்கள் தொடர்பில் அரசாங்கம் அதிரடி தீர்மானம்
40 நாடுகளுக்கான விசா கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார். நாட்டின் சுற்றுலாத் துறையை வளர்க்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டுக்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கை 91ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு 96வது இடத்தில் இருந்த இலங்கை கடவுச்சீட்டு 5 இடங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளமை சிறம்பம்சமாகும். இவ்வாறானதொரு நிலையில், 40 நாடுகளுக்கான விசா கட்டணங்களை தள்ளுபடி…
-
இலங்கைக்கான தமது விஜயத்தை நிறைவுசெய்த சர்வதேச நாணய குழுவின் அறிக்கை
இலங்கைக்கான தமது விஜயத்தை நிறைவுசெய்த சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழாம், நாட்டின் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் சிறப்பான பொருளாதார விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.8% வளர்ச்சியடைந்தது, பணவீக்கம் தணிந்தது, உத்தியோகபூர்வ இருப்புக்கள் 6 பில்லியன் டொலர்களை எட்டியுள்ளன. இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியம் தற்போதைய நிதி முன்னேற்றங்களைப் பாராட்டியது. எனினும், அதிகரித்து வரும் வெளிப்புற அபாயங்கள் குறித்து எச்சரித்தது. நிலையான மறுசீரமைப்பு முயற்சிகளை,…
-
மஹர சிறைச்சாலை பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது: அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
மஹர சிறைச்சாலை வளவில் காணப்படும் பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (22) இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினா நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.யான மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மஹர சிறைச்சாலை வளவில் காணப்படும் பள்ளிவாசலுக்கு வெளியார் வருவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. எனவே அந்த பள்ளிவாசலை…
-
அரச ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்த ட்ரம்ப்
அமெரிக்க அரச ஊழியர்களில் 1,300 பேரை பணி நீக்கம் செய்ய ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதியாக, கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் முறையாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றது முதல் பல்வேறு நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறையில் உள்ள 1,300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அமெரிக்காவில் உள்நாட்டு பணிகளில் ஈடுபட்டு வந்த 1,107 பணியாளர்கள், வெளிநாட்டு பணிகளை…
-
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது
2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சையில் தோற்றிய பரீட்சார்த்திகள் http://www.doenets.lk மற்றும் http://www.results.exams.gov.lk தளத்தில் சுட்டெண் உள்ளிட்ட விபரங்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும். மார்ச் மாதம் நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சைக்கு மொத்தம் 4 இலட்சத்து 78 ஆயிரத்து 182 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். அவர்களில் 3 இலட்சத்து 98ஆயிரத்து 182 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர்
-
செம்மணியில் எலும்பு எச்சங்கள் காணப்பட்டதையடுத்து கால்வாய் அமைக்கும் நடவடிக்கை நிறுத்தம்
செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வு இடம்பெறும் பகுதியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுகிழமை ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் தற்காலிக கால்வாய் அமைக்கும் பணிகள் இடம்பெற்ற நிலையில் மூன்று இடங்களில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து கால்வாய் அமைக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. புதிய புதைகுழி இருக்கலாம் எனச் சந்தேகத்தின் அடிப்படையில் தோண்டப்பட்ட குழிகளிலும் மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இரண்டாம்கட்ட அகழ்வுப் பணிகளின் 11 ஆம் நாள் அகழ்வு நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இதன்போது மனிதப்…
-
இன பிரச்சினைகளை தீர்க்க கடினமாக உழைத்தவர் சம்பந்தன்! குகதாசன் எம்.பி தெரிவிப்பு
இலங்கையில் இனப் பிரச்சினைகளை தீர்க்க கடினமாக பாடுபட்டு உழைத்தவரே மறைந்த தலைவர் அமரர் இராஜவரோதயம் சம்பந்தன் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார். மறைந்த பெருந் தலைவர் இரா.சம்பந்தனின் முதலாவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இன்று (06)இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ”1976ம் ஆண்டு முதல் 2023 வரை மிகவும் நெருக்கமாக அவருடன் பணியாற்றியுள்ளேன்.…
-
ட்ரம்பின் வரி விதிப்பு பேச்சுவார்த்தையில் ஒரே ஆசிய நாடாக இலங்கை
உலகளாவிய கட்டணங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள ஒரே ஆசிய நாடு இலங்கை என்று பொருளாதார மேம்பாட்டு துணை அமைச்சர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நிதி மூலோபாயம் குறித்த நாடாளுமன்ற விவாதத்தின் போது உரையாற்றிய அவர், இந்த ஆண்டு தொடக்கத்தில் விதிக்கப்பட்ட 44வீத வரி தொடர்பாக அமெரிக்காவுடன் மிகவும் சாதகமான ஒப்பந்தத்தைப் பெற அரசாங்கம் நம்புகிறது என குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் அழைப்பைத் தொடர்ந்து, இலங்கை தூதுக்குழு கடந்த மாதம் வாஷிங்டன் – டி.சி.க்கு…
-
வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றோம்- பிரபு எம்பி
கடந்த காலங்களில் அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்கியதாகவும் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லையென்று பல விடயங்களை எதிர்க்கட்சியினர் விமர்சனங்களுக்கு உள்ளாக்கி இருந்தார்கள். இன்று நாங்கள் அந்த விமர்சனங்களையும் தாண்டி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகின்றது என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார். கிராமிய பாதை அபிவிருத்தி திட்டம் எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் கிராம வீதிகளை அபிவிருத்தி செய்யும் செயல் திட்டமானது நேற்றைய (21)தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து…