Category: பிரதான செய்தி

  • வசந்த கரன்னாகொட, யோஷிதவுக்கு எதிரான ஊழல் வழக்கு : முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

    ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதிகளான வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர். சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர்,கருத்திற்கொண்ட நீதிமன்றம், இந்த வழக்கை, முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு உத்தரவிட்டது. தகுந்த தகுதிகளைப் பூர்த்தி செய்யாத…

  • 500,000 போலி Gmail கணக்குகள் மூலம் குண்டு மிரட்டல்கள்: Googleஐ விசாரிக்கவிருக்கும் இந்தியக் காவல்துறை

    இந்தியாவில் போலி வெடிகுண்டு மிரட்டல்களை அனுப்ப 500,000க்கும் அதிகமான Gmail மின்னஞ்சல் கணக்குகள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்பில் Google நிறுவனத்தை இந்தியக் காவல்துறை விசாரிக்கவிருக்கிறது. குஜராத் காவல்துறை இந்த வாரம் மின்னஞ்சல் கட்டமைப்பு ஒன்றை முறியடித்து இருவரைக் கைது செய்தது. அதிரடி நடவடிக்கையில் 513,847 Gmail கணக்குகளும் அவற்றின் கடவுச்சொற்களும் தெரியவந்தன. அவை 2022ஆம் ஆண்டிலிருந்து பயன்படுத்தப்படுகின்றன. இதுவரை காணாத அளவு போலி Gmail கணக்குகள் பயன்படுத்தப்பட்டதாக குஜராத் இணையக் குற்றப்பிரிவின் மூத்த அதிகாரி ராய்ட்டர்ஸிடம்…

  • பல நாடுகளிடமிருந்து எண்ணெய் வாங்குவது தொடரும்: இந்தியா

    இந்தியா தொடர்ந்து பல்வேறு நாடுகளிடமிருந்து எண்ணெய் வாங்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றம், ரஷ்ய எண்ணெய், எரிவாயு ஆகியவற்றை வாங்கும் நாடுகள் மீது கடுமையான வரிவிதிக்கும் புதிய சட்டத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து இந்தியா அவ்வாறு கூறியுள்ளது. 1.4 பில்லியன் மக்களின் எரிசக்தித் தேவையைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சு சொன்னது. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பல்வேறு நாடுகளிடமிருந்து எண்ணெய் வாங்கப்போவதாக அது வலியுறுத்தியது. தனது வர்த்தக, பொருளாதார நலன்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக…

  • புகைமூட்டம், வெப்பம்: ஓராங்குத்தான்களைக் கண்காணிக்கும் சரவாக்

    மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் புகைமூட்டமும் வெப்பமும் நீடிக்கிறது. இந்நிலையில் அங்குள்ள ஓராங்குத்தான்களைக் கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புகைமூட்டமும் கடும் வெப்பமும் ஓராங்குத்தான்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையும் அதிகாரிகள் ஆராய்கின்றனர். 600 ஹெக்டர் பரப்பைக் கொண்ட செமாங்கோ வனவிலங்கு பூங்காவில் (Semenggoh Wildlife Centre) 29 ஓராங்குத்தான்கள் உள்ளன. அவை 3 முதல் 55 வயது வரையுள்ள ஓராங்குத்தான்கள். இதுவரை ஓராங்குத்தான்களின் உடல்நலத்தில் பாதிப்புகள் இல்லை. அடர்ந்த மரங்களின் மேல்பகுதி வெப்பத்தையும் புகைமூட்டத்தையும் ஓரளவுக் குறைப்பதால், ஓராங்குத்தான்களுக்கு அது…

  • மட்டக்குளி விபத்து – கார் சாரதி கஞ்சா உட்கொண்டிருந்தமை உறுதி

    மட்டக்குளியில் மூன்று பேர் உயிரிழப்பதற்கு காரணமான விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் கஞ்சா போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட காரின் சாரதியிடம் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது இந்த விடயம் உறுதியாகியுள்ளது. மட்டக்குளி பகுதியில் காரொன்று வீதியில் பயணித்த பல வாகனங்களுடன் மோதி நேற்று (16) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஒருவர்…

  • மக்காவை நோக்கி ட்ரோன், ஏவுகணை தாக்குதல் முயற்சி – சவூதி எச்சரிக்கை

    சவூதியின் புனித நகரமான மக்காவை நோக்கி ஹவுதி அமைப்பினர்கள் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த முயன்றதாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. மக்காவை நோக்கி வந்த ட்ரோனை, அது மக்கா வான் எல்லைக்குள் நுழைவதற்கு முன்னதாகவே சவூதி வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக சவூதி தரப்பு கூறியுள்ளது. மக்காவை நோக்கி ஹவுதி படையினரால் ஏவப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக சவூதி வான் பாதுகாப்புப்…

  • வடமேற்கு நேபாளத்தில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்

    வடமேற்கு நேபாளத்தில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேசிய நில அதிர்வு திணைக்களத்தின் தகவலின்படி, உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.51 மணியளவில் 4.5 ரிச்டர் அளவில் முதல் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து அதிகாலை 4.28 மணியளவில் 4.2 ரிச்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் மையப்புள்ளி முகு மாவட்டத்தின் கலாய் பகுதிக்கு அருகில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்க அதிர்வுகள் அண்டை மாவட்டங்களான டோல்பா மற்றும் ஜும்லா ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளன.…

  • காண்டாமிருகங்களைக் கொல்ல குறிவைத்த வேட்டைக்காரர்கள்

    காண்டாமிருகங்களைக் கொல்ல வேட்டைக்காரர்கள் குறிவைத்த நிலையில், திடீரென யானைகள் அவர்களை தாக்கிய ஆச்சரிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் வனவிலங்குகள் பூங்கா ஒன்றில் நுழைந்த சட்டவிரோத வேட்டைக்காரர்கள் இருவர், காண்டாமிருகங்களை அவற்றின் கொம்புகளுக்காக கொல்ல திட்டமிட்டுள்ளார்கள். தென்னாப்பிரிக்காவிலுள்ள Kruger வனவிலங்குகள் பூங்காவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தண்ணீர் குடிப்பதற்காக குட்டை ஒன்றில் காண்டாமிருகங்கள் திரண்டிருக்க, வேட்டைக்காரர்கள் அந்த காண்டாமிருகங்களை தங்கள் துப்பாக்கியால் குறிவைத்துள்ளார்கள். விடயம் என்னவென்றால், தங்களுக்குப் பின்னால் யானைக் கூட்டம் ஒன்று மரங்களுக்கு நடுவே மறைந்திருப்பதைக்…

  • சர்வதேச எல்லையில் இந்திய கப்பலுடன் பாகிஸ்தான் போர் கப்பல் மோதல்

    சர்வதேச எல்லையில் இந்திய போர் கப்பலுடன் பாகிஸ்தான் போர் கப்பல் மோதலில் ஈடுபட்ட சம்பவத்திற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை வடக்கு அரபிக்கடலில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையின் முன்னணிப் போர்க்கப்பல் ஒன்றின் மீது பாகிஸ்தான் கடற்படை கப்பல் ஒன்று மோதலில் ஈடுபட்டுள்ளது. சர்வதேச கடல் எல்லையில் நடந்த இந்த மோதல் சம்பவத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றாலும், பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தூதர்…

  • விண்வெளியிலும் ஆயுதங்களை குவித்த அமெரிக்கா

    விண்வெளியை மையமாகக் கொண்டு அமெரிக்கா, சீனா, ரஷ்யா இடையே போட்டி தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், விண்வெளியில் ஆயுதங்களை நிலைநிறுத்தியுள்ளதாக அமெரிக்காவின் விமானப்படை செயலாளர் ட்ராய் மெய்ன்க் (Air Force Secretary Troy Meink) தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேரிலாந்தில் நடைபெற்ற Air, Space and Cyber Conference மாநாட்டில் பேசிய ட்ராய் மெய்ன்க், அமெரிக்கா தற்போது விண்வெளியில் இருந்து செயல்படும் ஆயுதத் திறன்களை பெற்றுள்ளதாக தெரிவித்தார். எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து அமெரிக்காவின்…