Category: பிரதான செய்தி
-
தேசிய பட்டியலுக்கான அளவுகோல்களை வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழு
தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிப்பதற்கான அளவுகோல்களை, இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இதன்படி, பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசியல் கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட தேசியப்பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் அல்லது 2024 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தெரிவு செய்யப்படாத வேட்பாளர்கள் மட்டுமே தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட முடியும் என்று ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையில் தேசிய பட்டியல் மூலம் 29 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
-
தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் சி.வி.கே.சிவஞானம் கருத்து
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் கட்சியின் அரசியல் குழுவே இறுதி முடிவு எடுக்கும் என தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (16.11.2024) சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு முடிவும் கட்சியால் எடுக்கப்படவில்லலை. இதனால் கட்சியின் அரசியல் குழு கூடி ஒரு முடிவு எடுக்கும்…
-
வவுனியா சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழப்பு
வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர் வவுனியா மருத்துவமனையில் கடந்த ஒருவாரமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த மரணம் நேற்றையதினம் (16) சம்பவித்துள்ளது. முள்ளியவளை பகுதியினை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான மணிவேல் பிள்ளை சஞ்சீவ் பிரதீபன் என்ற 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் முள்ளிவளை பொலிஸாரால் கடந்த (16.10.24) அன்று கைதுசெய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் இரு குற்றவாளிகளுக்கு பிணை வைத்துள்ளதுடன் மற்றும் ஒரு குற்றச்செயல்…
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டம்
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது இன்று (30) காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகம் முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, காணாமல் போன தமது பிள்ளைகளின் படங்களையும், வாசகங்கள் எழுதிய பதாகைகளையும் ஏந்தியவாறு பிள்ளைகளுக்கு நீதி வேண்டி இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
-
புதிதாக அச்சிடப்பட்ட பணம்: இலங்கை மத்திய வங்கி விளக்கம்
இலங்கை மத்திய வங்கி திறந்த சந்தை செயற்பாடுகள் ஊடாக 100 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் அடிப்படையற்றவை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. புதிதாக பணம் அச்சிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து விளக்கமளிக்கும் வகையில் இலங்கை மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மத்திய வங்கியின் திறந்த சந்தை செயல்பாடுகள் மூலம் பணப்புழக்கத்தை வழங்குவது ஒரு சாதாரண மத்திய வங்கி நடவடிக்கையாகும். வட்டி வீதங்களை நிர்வகிப்பதன் மூலம் விலை ஸ்திரத்தன்மையை…
-
சர்வதேச சந்தையில் குறைந்துள்ள தங்கத்தின் விலை
உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது. அதன்படி உலக சந்தையில் இன்று (28) தங்கம் ஒரு அவுன்ஸின் விலை 2,733.33 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. நேற்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,747.59 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. மேலும், இலங்கை சந்தையில் இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 804,659 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேவேளை, 24 கரட் தங்கம் 1 கிராமின் விலை 28,390 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 1 கிராமின் விலை 26,030 ரூபாவாகவும்,…
-
சிங்கப்பூரில் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு சிறைத்தண்டனை
அதிகாரத்தில் இருக்கும் போது பரிசுப்பொட்களை கையூட்டலாக பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில், சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 62 வயதான ஈஸ்வரன் சுமார் நான்கு லட்சம் சிங்கப்பூர் டாலர்கள் பெறுமதியான பரிசுப் பொருட்களை பெற்றுக்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஃபோர்மிளா வன் க்ரோன்ப்ரீ மோட்டார் போட்டிகளுக்கான நுழைவு சீட்டுகள், சைக்கிள்கள், மதுபானம் மற்றும் தனியார் ஜெட் பயணம் போன்றவற்றை முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் பரிசாக பெற்றுக் கொண்டார் என தெரிவிக்கப்படுகிறது. இந்த குற்றச்செயல்களுக்காக முன்னாள் அமைச்சர்…
-
ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரை!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (25) நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இந்த விசேட உரையானது நாளை இரவு 7.30 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
-
ஊரடங்குச் சட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே தேவையேற்பட்டால் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பின் முக்கிய அதிகாரிகளுக்கு இடையில் இன்று மாலை நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் தேர்தல் முடிவுகள் மொத்தமாக வெளியானதன் பின்னர் தேவையேற்பட்டால் மாத்திரம் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்த இருதரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் ஞாயிறு மாலை தொடக்கம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை முதற்கட்டமாக ஊரடங்குச் சட்டத்தை…
-
அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் தேர்தல் நிறுத்தப்படும்! தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை
ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் போது அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் தேர்த்தல் முடிவுகள் அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பின் போது வாக்களிப்பு நிலையத்தில் ஏதேனும் அசம்பாவித நிலைமை ஏற்படுமாக இருந்தால் அந்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்குகளை சூனியமாக்கப்படும். அந்தத் தொகுதிகளில் மீண்டும் வாக்கெடுப்பை நடத்தும் வரையில் நாடாளவிய ரீதியிலான இறுதித் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நடவடிக்கைக்கு பாதிப்பை…