Category: பிரதான செய்தி
-

மத்திய கிழக்கில் ஏற்பட்ட திடீர் பதற்றம்.. அதிருப்தியில் ட்ரம்ப்
இஸ்ரேல் கட்டாரின் தோஹா நகரில் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி அதிருப்தி வெளியிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகை மாநாட்டில், டோஹா மீதான இஸ்ரேலின் தாக்குதல் இஸ்ரேலிய அல்லது அமெரிக்க இலக்குகளை முன்னேற்றவில்லை என்று அமெரிக்காவின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், ஹமாஸை ஒழிப்பது ஒரு தகுதியான இலக்கு என்று ட்ரம்ப் நம்புவதாகவும் கரோலின் லீவிட் அறிவித்துள்ளார். அத்துடன், கட்டார், அமெரிக்காவின் ஒரு நெருங்கிய நட்பு நாடு என்றும், தாக்குதல் நடந்த இடம் குறித்து…
-

எல்ல விபத்தின் எதிரொலி.. நாளை முதல் கடுமையான சட்டம் நடைமுறைக்கு!
ஆபத்தான வகையில் மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக நாளை முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து பிரதியமைச்சர் பிரியந்த குணசேன தெரிவித்துள்ளார். பல்வேறு ஒலிகளுடன், பல வண்ணங்களில் நின்று நின்று ஒளிரும் மின் விளக்குகளுடன் பயணிக்கும் வாகனங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன தமது பேஸ்புக் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த வியாழக்கிழமை எல்ல – வெல்லவாய வீதியின் 24ஆவது மைல்கல் அருகே எதிரே வந்த சொகுசு ஜீப்பின்…
-
இயக்கச்சியில் களைகட்டிய பாரம்பரிய உணவுத் திருவிழா – அலைமோதிய மக்கள்
கிளிநொச்சி- இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷாவின் உணவு திருவிழா இன்றும்(07.09.2025) கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. இந்த உணவுத் திருவிழாவிற்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து மக்கள் வருகை தந்ததுடன் சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளனர். இந்த மாபெரும் உணவு திருவிழா நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன், இன்றுவரை இந்த உணவுத் திருவிழா, சிறப்பாக நடைபெற்று வருகின்றது. மாலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெறவுள்ள இந்த உணவு திருவிழாவில், இசை நிகழ்ச்சி உட்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நடைபெறவுள்ளன.…
-

அரசுடமையாக்கப்பட்ட இந்திய கடற்றொழிலார்களின் படகுகள்!
எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களின் படகுகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளமையை அடுத்து அவற்றை துண்டுகளாக உடைத்து அச்சுவேலி கைத்தொழில்பேட்டைக்கு ஏற்றி செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களின் 124 படகுகள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் நீண்ட காலமாக தரித்து வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு தரித்து நின்ற படகுகளுக்கான வழக்குகள் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவற்றில் 07 படகுகளை இந்திய கடற்றொழிலாளர்களுக்கு திருப்பி வழங்கலாம் என நீதிமன்றம்…
-

சாரதியால் தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து – சாமர்த்தியமாக காப்பாற்றப்பட்ட 30 பயணிகள்
பண்டாரவளை போக்குவரத்து சபை பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர், பயணிகள் பேருந்தில் ஏற்படவிருந்த பாரிய விபத்தை தவிர்த்து 30 பயணிகளின் உயிரைக் காப்பாற்றினர். நேற்று முன்தினம் மாலை, பதுளையில் இருந்து பத்தேவெல, தெமோதர வழியாக பல்லகெட்டுவ நகரத்திற்கு சென்ற பண்டாரவளை போக்குவரத்து சபை பேருந்தில் பயணித்த பயணிகள் பாரிய ஆபத்து ஒன்றை எதிர்கொண்டுள்ளனர். எனினும் பண்டாரவளை போக்குவரத்து சபையில் பணிபுரியும் ஓட்டுநர் சுமிந்த கருணாரத்ன மற்றும் பேருந்தின் நடத்துனர் ஜயவர்தன ஆகியோர் எடுத்த முயற்சியால் பயணிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.…
-

யாழில் கருநிலம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
மன்னாரில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிம மணல் சுரண்டலை கண்டித்து, இளைஞர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு போராட்டம் இன்று(10) மாலை யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் இயற்கை வளங்களில் ஒன்றாக மணல் உள்ளது. இந்த மணல், இல்மனைட் கனிமத்தை கொண்டிருப்பதால் உலகளவில் பெரும் கேள்வி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்தேசிய நிறுவனம் ஒன்று இல்மனைட் மணல் அகழ முயற்சித்து வருகிறது. இந்த அகழ்வைத் தடுக்கவும், மக்களின் பூர்வீக…
-

அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின் நிலை.. சபையில் அறிவித்த ஜனாதிபதி
இறக்குமதி வரி தொடர்பில் அமெரிக்காவுடன் எந்தவொரு இறுதி ஒப்பந்தமும் எட்டப்படவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(07) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இரு தரப்பினரும் சில விஷயங்களில் உடன்பாட்டை எட்டியிருந்தாலும், இறுதி ஒப்பந்தம் எதுவும் கையெழுத்திடப்படவில்லை என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், இரு தரப்பு கலந்துரையாடல்கள் மூலம் வரி 44 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக குறைக்கப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், சில HS குறியீடுகளுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும்…
-

அமெரிக்கா உடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது ரஷ்யா!
அமெரிக்கா உடனான உறவில் பதற்றம் நிலவும் நேரத்தில், அந்நாட்டுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது தொடர்பாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தின் கீழ் எங்களுக்கு நாங்களே விதித்து கொண்ட சுயமான கட்டுப்பாடுகளுக்கு இனி நாங்கள் கட்டுப்பட மாட்டோம். அமெரிக்காவுக்கு எதிராக, குறுகிய தூரம் மற்றும் நீண்ட தூரம் செல்லும் அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்கிறோம். இவ்வாறு அந்த…
-

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு தலா 11,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், பௌதீக ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் நவீன அரச…
-

யாழில் ஹெரோயின் பாவனையில் ஈடுபட்ட கணவனும் மனைவியும் கைது!
யாழ் – குருநகர் பகுதியில் நீண்ட காலமாக ஹெரோயின் பாவனையில் ஈடுபட்ட கணவனும் மனைவியும் (03.08.2025 ) கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 90 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போதை தடுப்பு பிரிவினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். விசாரணைகளின்…