Category: பிரதான செய்தி

  • “செம்மணி படுகொலை” மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பிரித்தானிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!

    காணாமல் ஆக்கப்பட்டோர் பின்னனியில் சிறிலங்கா சிங்கள படைகளின் ஆட்கடத்தல்களில் ஈடுபட்ட தமிழின நபர்களான கருணா, டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிள்ளையான் போன்றவர்கள் மீது சர்வதேச தடைகள்! பிரித்தானிய பாராளுமன்ற அமைச்சர் மான்புமிகு பீற்றர் கெய்ல்;( Peter Kayle) மற்றும்; மான்புமிகு சிபோன் மக்டோ (Dame Siobhain McDonagh) ஆகியோரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்கள் “செம்மனி மனித புதைகுழி” மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதிக் கோரிக்கை முன்வைப்பு. செம்மனி படுகொலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் பின்னனியில்…

  • கொழும்பில் இரவு விடுதியில் ஏற்பட்ட குழப்ப நிலை – வெளிநாட்டவர் கைது

    கொழும்பில் இரவு விடுதியில் ஏற்பட்ட குழப்ப நிலை – வெளிநாட்டவர் கைது

    கொழும்பு கோட்டையில் உள்ள டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள ஒரு இரவு விடுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இதன் போது அங்கு ஒருவரை தாக்கியதற்காக இந்திய பிரஜை ஒருவரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று இரவு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, ​​பாதிக்கப்பட்டவருக்கும் இந்தியருக்கும் இடையே ஏற்பட்ட பண விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய பிரஜை தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியரின் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் வத்தளையை சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பாக கோட்டை பொலிஸாரிடம் பாதிக்கப்பட்ட…

  • வரிகள் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

    வரிகள் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

    அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 வீத வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் இட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், குறித்த வரிக்கட்டணங்கள் எப்போது அல்லது எப்படி விதிக்கப்படும் என்பது குறிப்பிடப்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ட்ரம்ப், இந்த வரிகளை விதித்தால், இவ்வாறான வரிகள் விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்படுகின்றது.

  • ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் அநுரகுமாரவின் முதல் உரை

    ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் அநுரகுமாரவின் முதல் உரை

    அமெரிக்க நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை பொதுச் சபையின் 79வது அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, செப்டம்பர் 24 புதன்கிழமை உரையாற்றவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட திருத்தப்பட்ட தற்காலிக பேச்சாளர்களின் பட்டியலின்படி, செப்டம்பர் 23 முதல் 29 வரை நடைபெறும் பொது விவாதத்தின் பிற்பகல் அமர்வில் திசாநாயக்க பேச உள்ளார். அரச தலைவராக தனது முதல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை உரையில், அனுரகுமார திசாநாயக்க இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல், பொருளாதார மறுமலர்ச்சி…

  • முல்லைத்தீவில் நெற்செய்கைக்கு இடையூறு இல்லை – ரவிகரன் எம்.பி உறுதி

    முல்லைத்தீவில் நெற்செய்கைக்கு இடையூறு இல்லை – ரவிகரன் எம்.பி உறுதி

    முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி உள்ளிட்ட எல்லைக் கிராமங்களைச் சேர்ந்த மக்களின் நெற்செய்கை நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தக் கூடாதென மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். குறித்த எல்லைக்கிராம மக்களின் அழைப்பை ஏற்று அங்கு கள விஜயமொன்றை மேற்கொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி உள்ளிட்ட எல்லைக் கிராமங்களைச் சேர்ந்த தமிழ்மக்களின்…

  • குருக்கள்மடம் இராணுவ முகாமை உடனடியாக அகற்ற வலியுறுத்தல்

    மட்டக்களப்பு – மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருக்கள்மடம் இராணுவ முகாம் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்பதோடு, அருகில் உள்ள சிறுவர் பூங்கா எமது பிரதேச சபைக்கு சொந்தமானது என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் வினோராஜ் தெரிவித்துள்ளார். குறித்த விளையாட்டு முற்றத்தை இன்று(15.09.2025) மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் பார்வையிட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குருக்கள்மடம் சிறுவர் விளையாட்டு பூங்கா கவனிப்பார் அற்ற…

  • தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு

    தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டு

    தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக அரசாங்கம் “தொடர்ச்சியான பழிவாங்கல்” செய்வதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து தொழில்துறையினரிடையே கோபம் அதிகரித்து வருவதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரத்தின் போது தனியார் பேருந்துகள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், பிரச்சாரத்தை ஆதரிப்பதற்காக குறிப்பிடத்தக்க நிதி பங்களிப்புகள் வழங்கப்பட்டதாகவும் கூறினார். “நாட்டிலிருந்து தனியார் பேருந்து கலாச்சாரத்தை அகற்ற முயற்சிப்பது நெருப்புடன் விளையாடுவது போன்றது”…

  • யாழில் சட்டவிரோத மணற்கடத்தல்காரர்களால் தாக்கப்பட்ட கடற்றொழிலாளர் படுகாயம்

    யாழில் சட்டவிரோத மணற்கடத்தல்காரர்களால் தாக்கப்பட்ட கடற்றொழிலாளர் படுகாயம்

    சட்டவிரோத மணற்கடத்தலை தடுக்க முயற்சித்த பின்னணியில் கற்கோவளத்தில் கடற்றொழில் வாடிகள் அடித்துடைக்கப்பட்டு தீவைக்கப்பட்ட சம்பவம் நேற்று (12) இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத மணற்கடத்தல்காரர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கடற்றொழிலாளர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் ஒரு கடற்றொழிலாளர் காயமடைந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான வ.வசந்தகுமார் (வயது-30) என்பவர் பலத்த காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக…

  • காசா இனப்படுகொலையாளிகளுடன் எங்களுக்கு தொடர்பில்லை.. சஜித் திட்டவட்டம்

    காசா இனப்படுகொலையாளிகளுடன் எங்களுக்கு தொடர்பில்லை.. சஜித் திட்டவட்டம்

    காசாவில் இனப்படுகொலையில் ஈடுபடும் தரப்புடன் எங்களுக்கு நட்புறவு கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – இலங்கை நட்புறவு சங்கத்தைக் கட்டியெழுப்புவதற்குரிய அழைப்பை ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்ஹ விடுத்திருந்தார். இது பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியது. பின்னர் அவர் மன்னிப்புக் கோரி, அதற்குரிய முயற்சியை கைவிட்டார். இந்நிலையிலேயே சஜித் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பலஸ்தீன மக்களின் விடுதலைக்காக நாம் முன்னிற்கின்றோம். இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் என்பன…

  • கட்டார் மீதான இஸ்ரேலிய தாக்குதல்! மோடி கடும் கண்டனம்

    கட்டார் மீதான இஸ்ரேலிய தாக்குதல்! மோடி கடும் கண்டனம்

    இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கட்டார்  மீதான இஸ்ரேலிய தாக்குதல் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சகோதரத்துவம் வாய்ந்த கத்தாரின் இறையாண்மையை மீறுவதை இந்தியா கண்டிக்கிறது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், மோதல் அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்கும் நாங்கள் ஆதரவளிக்கிறோம். பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவாகவும், அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் இந்தியா உறுதியாக நிற்கிறது எனக்…