Category: உலக செய்திகள்

  • சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள பதாகை

    ஈரானில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளமை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தை ட்ரம்ப் ரத்து செய்ததுடன் மீண்டும் ஈரானின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஏற்கனவே, கமேனியின் கொலைக்கு நிச்சயம் பழிதீர்ப்போம் என ஈரானின் புதிய தலைமை மதகுரு மொஜ்தபா கமேனி அறிவித்திருந்தார். மேலும், கமேனியின் இறுதிச்சடங்கில் அமெரிக்கா மற்றும் ட்ரம்ப்புக்கு எதிரான…

  • லெபனானில் ஆயுதக் கிடங்கில் பயங்கர வெடி விபத்து : பலர் பலி

    லெபனானில் ஆயுதக் கிடங்கில் பயங்கர வெடி விபத்து : பலர் பலி

    லெபனானில் ஆயுதக் கிடங்கில் இருந்த வெடிப்பொருட்களை அகற்றும் பணியில் இராணுவ வீரர்கள் மற்றும் நிபுணர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் 6 இராணுவ நிபுணர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பலர் காயம் அடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. 14 மாதங்களாக இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் மோதல் நடைபெற்று வந்த…

  • அமெரிக்கா உடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது ரஷ்யா!

    அமெரிக்கா உடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது ரஷ்யா!

    அமெரிக்கா உடனான உறவில் பதற்றம் நிலவும் நேரத்தில், அந்நாட்டுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது தொடர்பாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தின் கீழ் எங்களுக்கு நாங்களே விதித்து கொண்ட சுயமான கட்டுப்பாடுகளுக்கு இனி நாங்கள் கட்டுப்பட மாட்டோம். அமெரிக்காவுக்கு எதிராக, குறுகிய தூரம் மற்றும் நீண்ட தூரம் செல்லும் அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்கிறோம். இவ்வாறு அந்த…

  • ரஷ்யாவுடன் அணு ஆயுதப் போருக்கு அமெரிக்கா தயார்; டிரம்ப்

    ரஷ்யாவுடன் அணு ஆயுதப் போருக்கு அமெரிக்கா தயார்; டிரம்ப்

    ரஷ்யாவுடன் அணு ஆயுதப் போருக்கு அமெரிக்கா தயாராக உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். உக்ரைன் மீதான போரால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்யா – அமெரிக்கா இடையே மோதல் போக்கு உள்ளது. இந்த வார தொடக்கத்தில் டிரம்புக்கும், ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி மெட்விதேவுக்கும் இடையிலான கருத்து…

  • ஜெர்மன் ரயில் விபத்திற்குக் காரணம் பிபெராச்சில் ஏற்பட்ட நிலச்சரிவு – பொலிஸ் தெரிவிப்பு

    ஜெர்மன் ரயில் விபத்திற்குக் காரணம் பிபெராச்சில் ஏற்பட்ட நிலச்சரிவு – பொலிஸ் தெரிவிப்பு

    பிபெராச்சில் ஏற்பட்ட நிலச்சரிவுதான் ரயில் விபத்திற்குக் காரணம் என்று ஜெர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனியின் பிபெராச் நகரில் பெய்த கனமழையின் விளைவாக ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்துக்கு நிலச்சரிவு காரணமாக இருக்கலாம் என்று ஜெர்மன் பொலிசார் தெரிவித்துள்ளனர் முதற்கட்ட விசாரணையில், ரயில் தடம் புரண்டு, தண்டவாளத்தில் சரிந்து விழுந்து மண்மேட்டில் மோதியது தெரியவந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் ரயில் நிறுவன ஊழியர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர், மேலும் சுமார் 50 பேர் காயமடைந்தனர்,…

  • சற்று முன்னர் இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

    சற்று முன்னர் இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

    இந்து சமுத்திரத்தில் சற்று முன்னர் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தமான்-நிக்கோபார் தீவுகளின் அருகே குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் இடம்பெற்ற பிரதேசத்தில் ரிக்டர் அளவில் 6.6 அதிர்வலை பதியப்பட்டுள்ளது. எனினும் நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி அனர்த்தம் தொடர்பில் இதுவரை எச்சரிக்கைகள் ஏதும் விடப்படவில்லை.

  • புகழ்பெற்ற மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்

    புகழ்பெற்ற மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்

    பிரபல WWE மல்யுத்த வீரர் மற்றும் நடிகராக பலரின் சிறுவயதில் மனதை கொள்ளை கொண்ட ஹல்க் ஹோகன் 71வது வயதில் இன்று காலமாகியுள்ளார். இன்று WWE தங்களது X பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், ஹோகன் மரணித்ததாக அறிவித்துள்ளது. “WWE மிகவும் வருத்தத்துடன் WWE ஹால் ஆஃப் ஃபேம் வீரர் ஹல்க் ஹோகன் மறைந்ததை தெரிவித்துக் கொள்கிறது. “பொப் கலாச்சாரத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க நபர்களில் ஒருவரான ஹோகன், 1980களில் WWEயை உலகளாவிய புகழுக்கு கொண்டு செல்ல உதவியவராவார். ”…

  • பிரித்தானியாவிற்கு செல்ல இலவச வாய்ப்பு பெறும் இந்தியர்கள்

    பிரித்தானியாவிற்கு செல்ல இலவச வாய்ப்பு பெறும் இந்தியர்கள்

    இந்தியர்கள் பிரித்தானியா செல்வதற்கான இலவச விசா வாய்ப்பு ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு, இதற்கான விண்ணப்பப்படிவத்தை இன்று(22) மதியம் 1.30 முதல் நாளை மறுதினம் (24) வரை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் 18- 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அத்தோடு,குறித்த நபர்களின் வங்கிக் கணக்கில் இரண்டு இலட்சம் ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டு இருக்க வேண்டும். மேலும், ஏதாவது ஒரு கற்கை நெறியில் பட்டம் பெற்று இருக்க வேண்டும் எனவும்…

  • அரச ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்த ட்ரம்ப்

    அரச ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்த ட்ரம்ப்

    அமெரிக்க அரச ஊழியர்களில் 1,300 பேரை பணி நீக்கம் செய்ய ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதியாக, கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் முறையாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றது முதல் பல்வேறு நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறையில் உள்ள 1,300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அமெரிக்காவில் உள்நாட்டு பணிகளில் ஈடுபட்டு வந்த 1,107 பணியாளர்கள், வெளிநாட்டு பணிகளை…

  • அமெரிக்காவை முழுதாக புறக்கணித்து வரும் கனேடியர்கள்

    அமெரிக்காவை முழுதாக புறக்கணித்து வரும் கனேடியர்கள்

    கனேடியர்கள் அமெரிக்க சுற்றுலாவை புறக்கணித்து வருவதால் அமெரிக்க பொருளாதாரத்தில் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. Vancity என்னும் ஆய்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்காவுக்கு கனேடிய சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவால் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில், வாஷிங்டனில் கனேடியர்களால் பெறப்படும் வருவாய் 47 சதவீதமும், மொத்த அமெரிக்காவில் 33 சதவீதமும் குறைந்துள்ளது. மேலும், அமெரிக்க இணையத்தள வர்த்தக நிறுவனங்களில் பொருட்கள் கொள்வனவு செய்யும் கனேடியர்களின் எண்ணிக்கை 14 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில்…