Category: உலக செய்திகள்

  • செல்லப்பிராணிகள் நன்கொடை: டென்மார்க் மிருகக்காட்சி சாலை வேண்டுகோள்

    செல்லப்பிராணிகள் நன்கொடை: டென்மார்க் மிருகக்காட்சி சாலை வேண்டுகோள்

    வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை எங்களுக்கு நன்கொடையாக கொடுங்கள் என்று டென்மார்க்கின் மிருகக்காட்சி சாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டதாக சமூகவலைதளத்தில் தகவல் வெளியாகி உள்ளது. டென்மார்க் நாட்டில் ஆல்போர்க் மிருகக்காட்சி சாலை உள்ளது. இங்குள்ள விலங்குகளுக்கு இயற்கை உணவு அளிப்பதை நோக்கமாக கொண்டு, அங்கு பணியாற்றும் ஊழியர்கள்,செல்லப்பிராணிகளை கருணை கொலை செய்வதாகவும், வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்க்கும் உரிமையாளர்கள், பல்வேறு காரணங்களுக்காக கொடுக்கப்பட வேண்டிய ஆரோக்கியமான பிராணிகள் இருந்தால் எங்களிடம் நன்கொடையாக வழங்கலாம் என்று மிருகக்காட்சி சாலை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது…

  • 600 ஆண்டுக்கு பின் வெடித்த எரிமலை; ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமா?

    600 ஆண்டுக்கு பின் வெடித்த எரிமலை; ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமா?

    ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள கிராஷென்னினிகோவ் எரிமலை, 600 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வெடித்துள்ளதாகவும், சமீபத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இது நிகழ்ந்திருக்கலாம் எனவும் அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் கடந்த மாதம் 30ம் திகதி, 8.8 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. இதையொட்டி ஜப்பான், ஹவாய் தீவுகளில் சுனாமி அலைகள் ஏற்பட்டன. இந்நிலையில் ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள கிராஷென்னினிகோவ் எரிமலையில் இருந்து தீப் பிழம்பு நேற்று எழுந்துள்ளது.…

  • ரஷ்யாவுடன் அணு ஆயுதப் போருக்கு அமெரிக்கா தயார்; டிரம்ப்

    ரஷ்யாவுடன் அணு ஆயுதப் போருக்கு அமெரிக்கா தயார்; டிரம்ப்

    ரஷ்யாவுடன் அணு ஆயுதப் போருக்கு அமெரிக்கா தயாராக உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். உக்ரைன் மீதான போரால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்யா – அமெரிக்கா இடையே மோதல் போக்கு உள்ளது. இந்த வார தொடக்கத்தில் டிரம்புக்கும், ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி மெட்விதேவுக்கும் இடையிலான கருத்து…

  • ஜெர்மன் ரயில் விபத்திற்குக் காரணம் பிபெராச்சில் ஏற்பட்ட நிலச்சரிவு – பொலிஸ் தெரிவிப்பு

    ஜெர்மன் ரயில் விபத்திற்குக் காரணம் பிபெராச்சில் ஏற்பட்ட நிலச்சரிவு – பொலிஸ் தெரிவிப்பு

    பிபெராச்சில் ஏற்பட்ட நிலச்சரிவுதான் ரயில் விபத்திற்குக் காரணம் என்று ஜெர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனியின் பிபெராச் நகரில் பெய்த கனமழையின் விளைவாக ஏற்பட்ட பயங்கர ரயில் விபத்துக்கு நிலச்சரிவு காரணமாக இருக்கலாம் என்று ஜெர்மன் பொலிசார் தெரிவித்துள்ளனர் முதற்கட்ட விசாரணையில், ரயில் தடம் புரண்டு, தண்டவாளத்தில் சரிந்து விழுந்து மண்மேட்டில் மோதியது தெரியவந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் ரயில் நிறுவன ஊழியர் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர், மேலும் சுமார் 50 பேர் காயமடைந்தனர்,…

  • சற்று முன்னர் இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

    சற்று முன்னர் இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

    இந்து சமுத்திரத்தில் சற்று முன்னர் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தமான்-நிக்கோபார் தீவுகளின் அருகே குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கம் இடம்பெற்ற பிரதேசத்தில் ரிக்டர் அளவில் 6.6 அதிர்வலை பதியப்பட்டுள்ளது. எனினும் நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி அனர்த்தம் தொடர்பில் இதுவரை எச்சரிக்கைகள் ஏதும் விடப்படவில்லை.

  • புகழ்பெற்ற மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்

    புகழ்பெற்ற மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்

    பிரபல WWE மல்யுத்த வீரர் மற்றும் நடிகராக பலரின் சிறுவயதில் மனதை கொள்ளை கொண்ட ஹல்க் ஹோகன் 71வது வயதில் இன்று காலமாகியுள்ளார். இன்று WWE தங்களது X பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், ஹோகன் மரணித்ததாக அறிவித்துள்ளது. “WWE மிகவும் வருத்தத்துடன் WWE ஹால் ஆஃப் ஃபேம் வீரர் ஹல்க் ஹோகன் மறைந்ததை தெரிவித்துக் கொள்கிறது. “பொப் கலாச்சாரத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க நபர்களில் ஒருவரான ஹோகன், 1980களில் WWEயை உலகளாவிய புகழுக்கு கொண்டு செல்ல உதவியவராவார். ”…

  • பிரித்தானியாவிற்கு செல்ல இலவச வாய்ப்பு பெறும் இந்தியர்கள்

    பிரித்தானியாவிற்கு செல்ல இலவச வாய்ப்பு பெறும் இந்தியர்கள்

    இந்தியர்கள் பிரித்தானியா செல்வதற்கான இலவச விசா வாய்ப்பு ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு, இதற்கான விண்ணப்பப்படிவத்தை இன்று(22) மதியம் 1.30 முதல் நாளை மறுதினம் (24) வரை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் 18- 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அத்தோடு,குறித்த நபர்களின் வங்கிக் கணக்கில் இரண்டு இலட்சம் ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டு இருக்க வேண்டும். மேலும், ஏதாவது ஒரு கற்கை நெறியில் பட்டம் பெற்று இருக்க வேண்டும் எனவும்…

  • அரச ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்த ட்ரம்ப்

    அரச ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்த ட்ரம்ப்

    அமெரிக்க அரச ஊழியர்களில் 1,300 பேரை பணி நீக்கம் செய்ய ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதியாக, கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் முறையாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றது முதல் பல்வேறு நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறையில் உள்ள 1,300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அமெரிக்காவில் உள்நாட்டு பணிகளில் ஈடுபட்டு வந்த 1,107 பணியாளர்கள், வெளிநாட்டு பணிகளை…

  • அமெரிக்காவை முழுதாக புறக்கணித்து வரும் கனேடியர்கள்

    அமெரிக்காவை முழுதாக புறக்கணித்து வரும் கனேடியர்கள்

    கனேடியர்கள் அமெரிக்க சுற்றுலாவை புறக்கணித்து வருவதால் அமெரிக்க பொருளாதாரத்தில் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. Vancity என்னும் ஆய்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்காவுக்கு கனேடிய சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவால் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில், வாஷிங்டனில் கனேடியர்களால் பெறப்படும் வருவாய் 47 சதவீதமும், மொத்த அமெரிக்காவில் 33 சதவீதமும் குறைந்துள்ளது. மேலும், அமெரிக்க இணையத்தள வர்த்தக நிறுவனங்களில் பொருட்கள் கொள்வனவு செய்யும் கனேடியர்களின் எண்ணிக்கை 14 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில்…

  • இந்தியப் பெருங்கடலில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் உத்தி: 2025-ல் உலக சக்தியை மறுவடிவமைக்கும் கடல் அச்சு

    இந்தியப் பெருங்கடலில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் உத்தி: 2025-ல் உலக சக்தியை மறுவடிவமைக்கும் கடல் அச்சு

    ✧.முன்னுரை உலக நாடுகள் அமெரிக்காவின் மேற்கு ஆசியத் தலையீடுகள், உக்ரைனில் நடைபெறும் போர் மற்றும் கிழக்கு ஆசியக் கிளர்ச்சிகளை கவனிக்கின்ற நிலையில், சீனா மெதுவாகவும் வியூகமாகவும் ஒரு பெரும் மாற்றத்தை இந்தியப் பெருங்கடலில் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தின் (BRI) ஊடாக, சீனா உலக வர்த்தக மற்றும் பாதுகாப்பு வழித்தடங்களில் தனது பாதிப்பை நிலைநாட்டிக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் பொருளாதார மேம்பாட்டு முயற்சியாக தோன்றிய இது, தற்போது ஒரு வலிமையான புவியியல் சக்தியாக விரிவடைந்துள்ளது. இந்தியப் பெருங்கடல் இப்போது…