Category: உலக செய்திகள்
-
இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையை (West Bank) தன்னுடன் இணைத்தால், அமெரிக்காவின் ஆதரவை இழக்க நேரிடும்!
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் குடியேற்றக்காரர்களின் வன்முறை ஆகியவை காசா போர் நிறுத்தத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக வான்ஸ் கவலை இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையை (West Bank) தன்னுடன் இணைத்தால், அமெரிக்காவின் ஆதரவை இழக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் பிரதமரிடம் இந்த கருத்தை டிரம்ப் கடந்த அக்டோபர் 15 அன்று தொலைபேசி மூலம் தெரிவித்ததாக டைம் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதே…
-

அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ்
அமெரிக்காவில் கொரோனா வைரஸை போன்று புதிய உருமாறிய வடிவமான ‘ஸ்ட்ரேடஸ்’ வேகமாக பரவி வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதற்கு, மருத்துவ ரீதியிலான பெயராக எக்ஸ்.எப்.ஜி, என கொடுக்கப்பட்டுள்ளதுடன் இது, ஒரு கலப்பின வைரஸ் ஆகும். உலக சுகாதார நிறுவனம் இதை, ‘ கண்காணிக்கப்பட வேண்டிய உருமாறிய வைரஸ்’ என வகைப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த மார்ச் மாதம் முதன் முதலில் இவ்வகை வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் குறைவான நோய் பாதிப்பையே ஏற்படுத்தும் என்றும், ஒட்டுமொத்தமாக…
-

வரிகள் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 வீத வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் இட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், குறித்த வரிக்கட்டணங்கள் எப்போது அல்லது எப்படி விதிக்கப்படும் என்பது குறிப்பிடப்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ட்ரம்ப், இந்த வரிகளை விதித்தால், இவ்வாறான வரிகள் விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்படுகின்றது.
-

கட்டார் மீதான இஸ்ரேலிய தாக்குதல்! மோடி கடும் கண்டனம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கட்டார் மீதான இஸ்ரேலிய தாக்குதல் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சகோதரத்துவம் வாய்ந்த கத்தாரின் இறையாண்மையை மீறுவதை இந்தியா கண்டிக்கிறது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், மோதல் அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்கும் நாங்கள் ஆதரவளிக்கிறோம். பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஆதரவாகவும், அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்திற்கு எதிராகவும் இந்தியா உறுதியாக நிற்கிறது எனக்…
-

பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரான்ஸ் பிரதமர்
பிரான்ஸ் நாட்டின் பிரதமர் பிரான்சுவா பேரூ பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் தேசிய சட்டமன்றத்தில் நடத்தப்பட்ட அவநம்பிக்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பின்னரே அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார். குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 364 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிராக 194 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், பிரதமர் பிரான்சுவா பேரூ தலைமையிலான சிறுபான்மை அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், ஒன்பது மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்த பிரான்சுவா பேரூ, இரண்டு…
-

பிரித்தானியாவில் மைதானத்தில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்! பொலிஸார் விசாரணை
பிரித்தானியாவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் வின்ஸ்ஃபோர்ட் நகரில் உள்ள வார்ட்டன் விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 12 வயதான லோகன் கார்ட்டர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவன் பலத்த காயங்களுடன் மைதானத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போது அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவன்…
-

கமலா ஹாரிசுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவை பாதுகாப்பு ரத்து
அமெரிக்காவின் முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கு வழங்கப்பட்டு வந்த ரகசிய சேவை பாதுகாப்பை டிரம்ப் திரும்ப பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியாக இருந்தவரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிசும் போட்டியிட்டனர். இதில், டிரம்ப் அதிபராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அமெரிக்க சட்டப்படி, பதவி விலகிய துணை ஜனாதிபதிக்கு ஆறு மாதங்கள் வரை…
-

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்! சர்வதேச பத்திரிக்கையொன்றின் 5 ஊடகவியலாளர்கள் பலி
காசாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 5 சர்வதேச பத்திரிக்கையொன்றின் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தற்போது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. நேற்றையதினம்(10) அல் ஷிபா மருத்துவமனையின் பிரதான வாயிலுக்கு அருகே நடந்த தாக்குதலில் அல் ஜசீரா அரபு நிருபர் அனஸ் அல் ஷெரீப், நிருபர் முகமது ரைக் மற்றும் கேமரா ஆபரேட்டர்கள் இப்ராஹிம் ஜாஹிர், முகமது நௌபால் மற்றும் மோமின் அலிவா ஆகியோர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் முகவர்களுக்கு உதவ முயன்றபோது அல் ஷெரீஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் பத்திரிகையாளர்கள் கொலைக்கு…
-

லெபனானில் ஆயுதக் கிடங்கில் பயங்கர வெடி விபத்து : பலர் பலி
லெபனானில் ஆயுதக் கிடங்கில் இருந்த வெடிப்பொருட்களை அகற்றும் பணியில் இராணுவ வீரர்கள் மற்றும் நிபுணர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் 6 இராணுவ நிபுணர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பலர் காயம் அடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. 14 மாதங்களாக இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையில் மோதல் நடைபெற்று வந்த…
-

அமெரிக்கா உடன் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது ரஷ்யா!
அமெரிக்கா உடனான உறவில் பதற்றம் நிலவும் நேரத்தில், அந்நாட்டுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது தொடர்பாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தின் கீழ் எங்களுக்கு நாங்களே விதித்து கொண்ட சுயமான கட்டுப்பாடுகளுக்கு இனி நாங்கள் கட்டுப்பட மாட்டோம். அமெரிக்காவுக்கு எதிராக, குறுகிய தூரம் மற்றும் நீண்ட தூரம் செல்லும் அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைத்திருக்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்கிறோம். இவ்வாறு அந்த…