Category: இலங்கை செய்திகள்
-

செம்மணியில் எலும்பு எச்சங்கள் காணப்பட்டதையடுத்து கால்வாய் அமைக்கும் நடவடிக்கை நிறுத்தம்
செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வு இடம்பெறும் பகுதியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுகிழமை ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் தற்காலிக கால்வாய் அமைக்கும் பணிகள் இடம்பெற்ற நிலையில் மூன்று இடங்களில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து கால்வாய் அமைக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. புதிய புதைகுழி இருக்கலாம் எனச் சந்தேகத்தின் அடிப்படையில் தோண்டப்பட்ட குழிகளிலும் மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இரண்டாம்கட்ட அகழ்வுப் பணிகளின் 11 ஆம் நாள் அகழ்வு நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இதன்போது மனிதப்…
-

இன பிரச்சினைகளை தீர்க்க கடினமாக உழைத்தவர் சம்பந்தன்! குகதாசன் எம்.பி தெரிவிப்பு
இலங்கையில் இனப் பிரச்சினைகளை தீர்க்க கடினமாக பாடுபட்டு உழைத்தவரே மறைந்த தலைவர் அமரர் இராஜவரோதயம் சம்பந்தன் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார். மறைந்த பெருந் தலைவர் இரா.சம்பந்தனின் முதலாவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இன்று (06)இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், ”1976ம் ஆண்டு முதல் 2023 வரை மிகவும் நெருக்கமாக அவருடன் பணியாற்றியுள்ளேன்.…
-

ட்ரம்பின் வரி விதிப்பு பேச்சுவார்த்தையில் ஒரே ஆசிய நாடாக இலங்கை
உலகளாவிய கட்டணங்கள் தொடர்பாக அமெரிக்காவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள ஒரே ஆசிய நாடு இலங்கை என்று பொருளாதார மேம்பாட்டு துணை அமைச்சர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் நிதி மூலோபாயம் குறித்த நாடாளுமன்ற விவாதத்தின் போது உரையாற்றிய அவர், இந்த ஆண்டு தொடக்கத்தில் விதிக்கப்பட்ட 44வீத வரி தொடர்பாக அமெரிக்காவுடன் மிகவும் சாதகமான ஒப்பந்தத்தைப் பெற அரசாங்கம் நம்புகிறது என குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் அழைப்பைத் தொடர்ந்து, இலங்கை தூதுக்குழு கடந்த மாதம் வாஷிங்டன் – டி.சி.க்கு…
-

ஷிரந்தி ராஜபக்சவின் சகோதரருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கலை விளக்க மறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிஷாந்த, விமானங்கள் கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நடந்து வரும் விசாரணை சம்பந்தமாக, ஊழல் அல்லது மோசடிகள் குறித்த முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரை கொழும்பு முதன்மை நீதிவான் தனுஜா லக்மலி ஜயதுங்கா முன்னிலையில் முன்னிலைப்படுத்திய நீதிமன்றம், எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.…
-

கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் ஒரு பார்சலிலிருந்து துப்பாக்கி
கொழும்பு மத்திய தபால் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு பொதியில் தானியங்கி துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்கள் அடங்கிய பொருட்களை கைப்பற்றியுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸார் இன்று (01.07.2025) நீதவான் நிலுபுலி லங்காபுரவிடம் தெரிவித்துள்ளனர். இதற்கமைய டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் உள்ள மத்திய தபால் நிலையத்தில் வைத்து சந்தேகத்திற்கிடமான பொதியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன்படி கடந்த மார்ச் 19 ஆம் திகதி கட்டுநாயக்க விமான…
-

யாழில் கசிப்புடன் இளைஞர் கைது
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் 19 வயதுடைய இளைஞர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் 25 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுன்னாகம் பொலிஸார் இன்றையதினம்(29.06.2025) மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-

இலங்கையின் எல்லைக்குள் கால் வைத்தால் கைது செய்யப்படுவீர்கள்! எச்சரிக்கை விடுத்த சந்திரசேகர்
இலங்கையின் எல்லைக்குள் கால் வைத்தால் கைது செய்யப்படுவீர்கள் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக வங்கிக் குழுவினர் மற்றும் அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, சுனில் ஹந்துன் நெத்தி, சந்திரசேகரன் ஆகியோருடன் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பங்கேற்ற கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (29.06.2025) இடம்பெற்றது. இதற்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் சந்திரசேகர் இலங்கையின் எல்லைக்குள் சட்டவிரோத கடற்றொழில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்துள்ளார். “அத்துடன், அவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக…
-

சிறை வாழ்க்கைக்கு எம் குடும்பம் அஞ்சவில்லை! கெஹலிய ரம்புக்வெல
என்னையும் என் குடும்பத்தையும் சிறையில் அடைக்க இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குற்றஞ்சாட்டியுள்ளார். கெஹலிய ரம்புக்வெல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஐந்து பேருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் ஆணையம் நேற்று முன்தினம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கெஹலிய ரம்புக்வெல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மருமகன் மீது…
-

இந்தியாவில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட பெருமளவான கஞ்சா! மூவர் கைது
இந்தியாவில் இருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 250 கிலோகிராம் கேரள கஞ்சா யாழ்.காரைநகர் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கேரள கஞ்சா கடத்தி வரப்படுவதாகக் கடற்படையினருக்குக் கிடைத்த தகவலின் பெயரில் சந்தேகத்துக்கிடமான படகைக் கடற்படையினர் மறித்து சோதனையிட்டனர். இதன்போதே அந்தப் படகில் இருந்து 250 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதையடுத்துப் படகில் இருந்த மூவரையும் படகுடன் கடற்படையினர் கைது செய்துள்ளதுடன் படகையும் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் படகுடன் சந்தேகநபர்கள் மூவரும் சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்றுறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
-

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: பாதுகாப்பு பிரதி அமைச்சர் வழங்கியுள்ள உறுதிமொழி
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் நிச்சயம் நீதி நிலைநாட்டப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வடகல தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விசாரணை தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரும், சட்டமா அதிபர் திணைக்களத்தினரும் கூட்டாகச் செயற்பட்டு வருகின்றனர். பிரதான சூத்திரதாரி யார் என்பது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில்…