Category: இலங்கை செய்திகள்

  • வடக்கில் ஆளுணரால் இரண்டு திணைக்களங்களுக்கான புதிய அதிகாரிகள் நியமிப்பு

    வடக்கில் இரண்டு திணைக்களங்களுக்கான புதிய அதிகாரிகள் நியமிப்பு வடக்கு மாகாணத்திற்கான இரண்டு திணைக்களங்களின் ஆணையாளர் பதவிக்கும், மாகாண பிரதி பிரதம செயலாளர் பதவிக்கும், புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸினால் இந்த நியமனக் கடிதங்கள் இன்று (03) வழங்கி வைக்கப்பட்டன. வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் ஆணையாளராக சி.சுஜீவாவும், வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளராக கு.காஞ்சனாவும், வடக்கு மாகாண பிரதிப் பிரதம…

  • எட்டு ஜனாதிபதிகளை சம்பந்தன் நம்பி ஏமாந்தார்

    இலங்கையின் 09 ஆவது ஜனாதிபதியுடனும் கதைத்து ஏமாறுவதற்கு முன்பாகவே பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் அவர்கள் காலமாகிவிட்டதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். வடகிழக்கு இணைந்த சமஸ்டி தீர்வு தரப்படவேண்டும் என்பதில் இலங்கையின் எட்டு ஜனாதிபதிகளுடன் பேசி நம்பி ஏமாந்த தலைவராகவே நாங்கள் சம்பந்தன் ஐயாவினை பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார். மறைந்த தமிழ் தேசிய பெருந்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் ஐயா அவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி அஞ்சலி…

  • மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட மறைமாவட்ட ஆயர்

    மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இன்றைய தினம் புதன்கிழமை(03/07/2024 மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார். இதன்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா அவர்களை சந்தித்து வைத்தியசாலையின் தேவைகள் குறித்து கலந்துரையாடினார். மேலும் வைத்தியாசாலைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக வழங்கியதுடன் மன்னார் வைத்தியசாலையின் வசதிகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது

  • சம்பந்தனின் வெற்றிடத்துக்கு புதிய உறுப்பினர் தெரிவாம்

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் காலமானதையடுத்து நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் நேற்று (30.06.2024) இரவு 9:10 மணியளவில் கொழும்பில் காலமானார். உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து, நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை சண்முகம் குகதாசன் நிரப்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் இலங்கைத்…

  • தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தன் அதன் கட்சிக்கு பேரிழப்பு

    இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் நேற்று இரவு 9:10 மணியளவில் கொழும்பில் காலமானார். உடல் நலக்குறைவால் கொழும்பு லங்கா தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இரா.சம்பந்தன் தனது 91 ஆவது வயதில் காலமானார். இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த் தலைவரான இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்து வந்த இவர் திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட இவர் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி மொரட்டுவ புனித செபஸ்தியான் கல்லூரி ஆகியவற்றில் கல்வி…

  • இலங்கை இந்திய அரசின் அசமந்த போக்கு காரணமாக துன்பியல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது.

    இலங்கை இந்திய அரசின் அசமந்த போக்கு காரணமாக துன்பியல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம்.. இந்திய மீனவர்களின் அத்து மீறிய நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில் கலந்துரையாடல்கள் இடம் பெற்று சில இனக்கப்பாட்டிற்கு வந்தாலும் இலங்கை இந்திய அரசின் அசமந்த போக்கு காரணமாக துன்பியல் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார். வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயற்குழு கூட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை (29)…

  • வவுனியாவில் பெண்ணொருவரின் தங்க சங்கிலி கொள்ளை

    வவுனியாவில் வீதியால் சென்ற பெண்ணின் தங்க சங்கிலி மோட்டர் சைக்கிளில் வந்த இளைஞர்களால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் வவுனியா, கோயில்குளம் பகுதியில் இன்று (28.06.2024) இடம்பெற்றுள்ளது. வவுனியா, கோவில்குளம் பகுதியில் வீதியால் சென்ற பெண்ணை மோட்டர் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்ற இருவர் அவரது தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது, ஒரு பவுன் தங்க சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.…

  • உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கான (CTUR) உத்தேச சட்ட வரைவிற்கான ஆலோசனைகளை பெறுவதற்கான கலந்துரையாடல்

    உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கான (CTUR) உத்தேச சட்ட வரைவிற்கான ஆலோசனைகளை பெறுவதற்கான கலந்துரையாடல் Tavaseelan news reporter உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கான (CTUR) உத்தேச சட்ட வரைவிற்கான ஆலோசனைகளை பெறுவதற்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று (27) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கான இடைக்கால செயலகம் (ISTRM) மற்றும் உண்மை ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான உத்தேச ஆணையம்(CTUR) இலங்கையில் வடக்கு கிழக்கில் நிலவிய மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும்…

  • ஜனாதிபதி உரை பொய்களும் புனை கதைகளும் நிறைந்தது. வரிசைகளை நிறுத்தி தலைமேல் கடன் சுமை இது சாதனையா?. சுரேஷ் கேள்வி.

    ஜனாதிபதி உரை பொய்களும் புனை கதைகளும் நிறைந்தது. வரிசைகளை நிறுத்தி தலைமேல் கடன் சுமை இது சாதனையா?. சுரேஷ் கேள்வி. வங்குறோத்து நாட்டை நானே மீட்டவன் என எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியாக போட்டியிடும் கனவுடன் பொய்களையும் புனைகதைகளையும் புனைந்தவாறு ஜனாதிபதியின் உரை அமைந்ததாக ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்…

  • ஏ9 வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோரவிபத்தில் மூவர் உயிழப்பு! இருவர் காயம்.

    ஏ9 வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோரவிபத்தில் மூவர் உயிழப்பு! இருவர் காயம். மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ஏ9 வீதியின் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் இடம் பெற்ற கோர விபத்தில் மூவர் உடல்சிதறி உயிரிழந்ததோடு இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று பழுதடைந்ததன் காரணமாக ஏ9 வீதியில் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது இதன்…