Category: இலங்கை செய்திகள்
-

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து விபத்து – மூவர் உயிரிழப்பு!
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற சொகுசு பேருந்து மாங்குளம் பகுதியில் விபத்துக்கு உள்ளானதில் பேருந்து சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து , மாங்குளம் பகுதியில் இயந்திர கோளாறு காரணமாக பழுதடைந்த நிலையில் , யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டு , சாரதி , நடத்துனர் உள்ளிட்டோர் திருத்த…
-

நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்கள் மீது படகினை ஆபத்தான முறையில் செலுத்தி மரணத்தை ஏற்படுத்திய உள்ளிட்ட குற்றச்சாட்டு!
நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மீது , ஆபத்தான முறையில் படகினை செலுத்தி , கடற்படை மாலுமிக்கு மரணத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு , மன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களை எதிர்வரும் 08ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து, நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய படகொன்றினை வழிமறித்து , படகில் இருந்தவர்களை கடற்படையினர் கைது செய்ய முற்பட்ட…
-

சிறுமி துஸ்பிரயோகம் – சிறுவன் விளக்கமறியலில்!
யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 17 வயதான சிறுவன் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயதான சிறுமியை 17 வயதான சிறுவன் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சிறுமியை மீட்டு . பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சிறுவன் தொடர்பான தகவல்களை பெற்ற பொலிஸார் சிறுவனை கைது செய்து பருத்தித்துறை…
-

புடவைக்கடை மீது பெற்றோல் குண்டு வீச்சு!
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள புடவைக்கடை ஒன்றின் மீது, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இனம் தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் , புடவைக்கடைக்கு பின் புறமாக வந்து பெற்றோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர். அதனை அவதானித்த கடை ஊழியர்கள் அப்பகுதியில் நின்றவர்கள் பெற்றோல் குண்டை வீசியவர்களை துரத்தி சென்ற போதிலும் , அவர்கள் தப்பியோடி விட்டனர். சம்பவம் தொடர்பில்…
-

யாழில். ஆலயத்தில் இருந்த நகைகள், பணம் திருட்டு!
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் இருந்து 64 பவுண் தங்கநகைகள் மற்றும் சுமார் 08 இலட்ச ரூபாய் ரொக்க பணம் என்பவை திருடப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில்லையே இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றது. ஆலயத்தினுள் பாதுகாப்பாக பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் பணமே திருட்டு போயுள்ளது. போலி திறப்புக்களை பயன்படுத்தி பூட்டை திறந்து நகைகள் பணம் திருடப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள…
-

குளவி கொட்டு – 30 மாணவர்கள் வைத்தியசாலையில்!
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஒன்றின் 30 மாணவர்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் சிலர் பாடசாலையில் மேலதிக வகுப்பில் கலந்துகொண்ட போதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பாடசாலையை அண்மித்த பகுதியில் உள்ள வீட்டில் இருந்த குளவி கூட்டில் இருந்த குளவிகளே இவ்வாறு மாணவர்கள் மற்றும் ஆசிரியரை கொட்டியுள்ளது. இந்த அசம்பாவிதத்தில் பாதிக்கப்பட்ட 22 மாணவர்களும் 8 மாணவிகளும், ஆசிரியரும் மூதூர்…
-

யாழில். மாணவிக்கு மோட்டார் சைக்கிள் கற்றுக்கொடுப்பதாக சேட்டை புரிந்தவர் கைது!
பாடசாலை மாணவிக்கு மோட்டார் சைக்கிள் ஓட கற்றுதருவதாக கூறி பாலியல் சேட்டை புரிந்த 44 வயதான, முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவி ஒருவரை அவரது கல்வி நடவடிக்கைக்காக ஏற்றி இறக்கும் சேவைக்காக முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை மாணவியின் பெற்றோர் வாடகைக்கு அமர்த்தி இருந்தனர். அந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை , தனது முச்சக்கர வண்டி திடீரென பழுதடைந்து விட்டதாகவும் , அதனால் தனது மோட்டார் சைக்கிளில் மாணவியை…
-

யாழில். வீடுடைத்து நகைகள் கொள்ளை!
யாழ்ப்பாணத்தில் வீடுடைத்து 09 பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றில் வசிக்கும் வீட்டார் , வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற சமயம் , வீட்டின் கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 09 பவுண் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். வீட்டார் வீடு திரும்பிய போதே , வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விடயம் தெரிய வந்துள்ளது. அது தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த…
-

யாழில். மிக்சருக்குள் பொரித்த பல்லி!
யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸருக்கு பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. சந்நிதி ஆலயத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு , ஆனிப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதன் போது ஆலயத்திற்கு பெருமளவான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். அந்நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த ஒருவர் , ஆலய சூழலில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் மிக்ஸரை வாங்கிய போது , அதனுள் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. அது…
-

நெடுந்தீவில் இளைஞன் படுகொலை!
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு ஏழாம் வட்டார பகுதியில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவு 07 வட்டாரத்தைச் சமக்கீன் தேவராஜ் அருள்ராஜ் என்ற 23 வயதானவரே கொலை செய்யப்பட்டார். இருவருக்கிடையே காணப்பட்ட முற்பகை காரணமாக நேற்றைய தினம் புதன்கிழமை இரவு மது போதையில் வாய்தர்க்கம் இடம் பெற்றதாகவும் அதன் பின்னர் குறித்த கொலை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக நெடுந்தீவு வைத்தியசாலையில், ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் சந்தேக…