Category: இலங்கை செய்திகள்
-
மன்னார் ஆயரை சந்தித்த எதிர்கட்சி தலைவர் சஜித்
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று மன்னார் மாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் மன்னாரில் நேற்று (03.09.2024) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதற்கு மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதே சஜித் பிரேமதாச மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்தித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மன்னார் பஜார் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.…
-
மன்னாரில் சஜித்தின். பிரச்சாரக்கூட்டம்
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் மன்னார் பஜார் பகுதியில் இன்று (3) செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணியளவில் இடம் பெற்றது. மன்னாரிற்கு இன்று (3) மதியம் வருகை தந்த ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களை சந்தித்து கலந்துரையாடிய தோடு, ஆயரிடம் ஆசி பெற்றார். அதனைத் தொடர்ந்து மன்னார்…
-
சஜித்தின் பிரசார கூட்டத்தை சர்வதேச கண்காணிப்பு குழு கண்காணிப்பு
வவுனியாவில் இடம்பெற்ற எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசார கூட்டத்தின் போது ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வைரவபுளியங்குளத்தில் இன்று (03.09.2024) இடம்பெற்ற பிரசார கூட்டத்தின் போது தேர்தல் பிரசார செயற்பாடுகள் மற்றும் கலந்து கொண்ட மக்களுடைய நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச கண்காணிப்பு குழு அவதானம் செலுத்தியுள்ளது. அத்துடன், இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களுடனும் கலந்துரையாடி கூட்டம் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் புகைப்படங்கள் எடுத்துக்…
-
சஜித் தொடர்பான அறிவிப்பு கட்சியின் முடிவல்ல: மாவை தெரிவித்துள்ளார் சேனாதிராஜா அதிரடி
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இலங்கை தமிழரசு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள நிலையில் இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் லங்காசிறி ஊடகத்திற்கு அவர் கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறினார். இதன்போது கட்சியின் நிலைஇதுவரை தனக்கு உத்தியோகபூர்வமான அறிவிப்புக்கள் எதுவும் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார் மேலும், இதனை தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வமான அறிவிப்பு என்று ஏற்றுக்கொள்ள…
-
தமிழர் பகுதிகளில் ரணில் முன்னிலையில் பரபரப்பு தகவல்
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்க பதுளை, நுவரெலிய, மாத்தளை, யாழ்ப்பாணம், கண்டி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் முன்னிலையில் இருக்கிறார் என்று அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார். எஹலியகொட பிரதேசத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், 30 வருட யுத்தத்திற்கு முடிவு கட்டி தேசிய பாதுகாப்பை உறுதி செய்தவர் மகிந்த ராஜபக்ச.அதேபோன்று நாட்டிற்கு பொருளாதார பாதுகாப்பும் உணவு…
-
வடமாகாணத்தில் இராண்டாம் இடம் பிடித்த பாடசாலை
வடமாகாணத்தில் இராண்டாம் இடம் பிடித்த பாடசாலை மன்னார் கல்வி வலயத்தின் மன் முருங்கன் மகாவித்தியாலயம் தேசிய பாடசாலை 2024ம் ஆண்டுக்காண விளையாட்டுப்போட்டிகளில் 13வலயங்கங்லோடு விளையாட்டில் பங்குபற்றி இரண்டாம் இடத்தினை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளது இதில் 18வயது பிரிவின் வலைப்பந்தாட்டம் மூன்றாம் இடம் 16 வயது பிரிவு வலைப்பந்தாட்டம் மூன்றாம் இடம் என சாதனை படைக்க இம்மாணவர்களை பயிற்று வித்த பொறுப்பாசிரியர்கள் திரு J .ஒகஸ்ரீன் திருமதி.கில்டா யூட்புனிதராஜா திரு. ஜெபகரன் ஆகியோர் உழைத்தனர் என்பதோடு இந்த…
-
மன்/தட்சணாமருதமடு மகா வித்தியாலய மாணவியின் மறுமொரு வரலாற்றுச் சாதனைகள்.
மன்/தட்சணாமருதமடு மகா வித்தியாலய மாணவியின் மறுமொரு வரலாற்றுச் சாதனைகள். (28-08-2028) 2024 ம் ஆண்டுக்கான மாகாண மட்ட மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியில் மன்/தட்சணா மருதமடு மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி யோகேஸ்வரன் சுடர்மதி இரண்டாவது வரலாற்று சாதனையினை நிகழ்த்தி மடு வலயத்திற்கு பெருமையினை பெற்று கொடுத்துள்ளார் கடந்த 20ம் திகதி தொடக்கம் 24ம் திகதி வரை இடம்பெற்ற மாகாணமட்ட திறனாய்வு போட்டியில் 18 வயதின் கீழ் பெண்களுக்கான 400M சட்டவேலி நிகழ்ச்சியில் கடந்த ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்டிருந்த 1:12:90…
-
எனது தமிழ் ஆசானை போல ஒருவர் சஜித்துக்கு கிடைக்கவில்லை: ரணில் பெருமிதம்
கொழும்பு றோயல் கல்லூரியில் எனக்கு கற்பித்த ஆசிரியரை போல ஒரு ஆசிரியர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு கிடைக்கவில்லை என்பதாலேயே அவர் நாட்டை பொறுப்பேற்காமல் ஓடியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரசார கூட்டத்தில் மேடையேறிய அவருக்கு கற்பித்த ஆசிரியர் வி.சிவலிங்கம் தொடர்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “வி.சிவலிங்கம் ஆசிரியரிடம் நாம் கொழும்பு றோயல் கல்லூரியில் 1961 மற்றும் 1962ஆம்…
-
நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் பிரதமரின் முக்கிய அறிவிப்பு
மீண்டும் ஜனாதிபதியாக ரணில் தெரிவு செய்யப்பட்டால் அடுத்த பிரதமர் தொடர்பில் அவர் தான் தீர்மானிக்க வேண்டும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் இதன்போது, “அடுத்து இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றால் நாடாளுமன்றம் கலைக்கப்படுமா..” என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பிரதமர் தினேஷ் குணவர்தன, அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை ஆயுளை கொண்டுள்ள நாடாளுமன்றம் ஜனாதிபதியிடம் உள்ளது. அவர்…
-
712,319 பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி!
2024 ஜனாதிபதி தேர்தலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தபால் மூல வாக்கு விண்ணப்பங்களின் விபரங்களை தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது. இதற்கமைய, 712,319 பேர் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது