Category: இலங்கை செய்திகள்
-
இலங்கையில் தீவிரமடையும் வானிலை! ஆயிரக்கணக்கானோருக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை
நாட்டில் நிலவும் மோசமான வானிலையால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த 13ஆம் திகதி முதல் நிலவும் மோசமான வானிலையால் 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், மோசமான வானிலை காரணமாக 319 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. நேற்றைய (25) நிலவரப்படி, சில மாகாணங்களில் 142 குடும்பங்களைச் சேர்ந்த 438 பேர் பாதுகாப்பான இடங்களில் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மையம் மேலும் தெரிவித்துள்ளது. மேல் மாகாணம் தவிர ஏனைய அனைத்து…
-
பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல் – சிக்கப் போகும் பல முக்கிய பிரபலங்கள்
தென்னிலங்கையில் அடுத்து வரும் நாட்கள் மிகுந்த பரபரப்பானதாக இருக்கும் என அரசியல் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த அரசாங்கங்களின் ஆட்சியின் போது நடந்த மோசடி, ஊழல், கொலை மற்றும் சட்டவிரோதமாக சொத்து சேர்த்தமை உள்ளிட்ட கடுமையான குற்றங்கள் தொடர்பாக 11 வழக்குகளை தாக்கல் செய்யத் தேவையான கோப்புகளை இலங்கை பொலிஸார், சட்டமா அதிபருக்கு அனுப்பியுள்ளனர். இந்த வழக்குகளில் பல சிரேஷ்ட அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் அரசாங்கங்களின் மூத்த அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் கோப்புகளிலிருந்து முழு…
-
கைது செய்யப்பட்ட மகிந்தவின் மகனுக்கு விசேட சலுகை! தேடப்படும் புகைப்படத்தின் பின்னணி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு விசேட சலுகை வழங்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கட்டடம் ஒன்றிற்குள் இருந்து விரல்களைக் கொண்டு அமைதிச் சின்னத்தைக் காண்பிக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலோ அல்லது தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த சந்திப்பிலோ இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டதா என்பது குறித்தோ…
-
வீட்டில் இருந்து வெளியேறத் தயார்! அறிவித்தார் மகிந்த
வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தவுடன் அதை விட்டு வெளியேறுவேன் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பகிரங்கமாக அறிவித்துள்ளார். உத்தியோகபூர்வ இல்லம் தொடர்பாக இடம்பெற்று வரும் விவாதம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்த நாட்டின் குடிமகனாக, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ இல்லங்கள் அல்லது வசதிகள் தொடர்பாக தற்போதைய அரசாங்கம் எடுக்கும் எந்தவொரு முடிவையும் ஏற்றுக்கொள்வது எனது பொறுப்பு. இந்த…
-
ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 19 ஆவது ஆண்டு நினைவு நாள் திருகோணமலையில் இடம் பெற்றது..
திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 19 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு வெள்ளிக்கிழமை (24) திருகோணமலை உவர்மலை லோவர் வீதியில் (ஆளுநர் செயலக வீதி) உள்ள உவர்மலை பூங்காவில் மதியம் 2.40 மணியளவில் இடம் பெற்றது. கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் இலங்கை தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டிலும், அகம் மனிதாபிமான வள நிலையத்தின் ஒத்துழைப்புடனும் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள ஊடகவியலாளர்கள்,…
-
புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு
2024ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் இணையத்தில் வெளியாகின. பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது. இதன்படி, இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளமான https://www.doenets.lk/ இணையத்தளத்தில் பெறுபேறுகளைப் பார்வையிட முடியும். இதேவேளை, 2024ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்றது. இதில் 244,092 மாணவர்கள் சிங்கள மொழி மூலமும், 79,787 மாணவர்கள் தமிழ் மொழி மூலமும் என மொத்தம் 323,879…
-
என்னை சுட்டு வீழ்த்துங்கள்! சபையில் அர்ச்சுனா எம்.பி இன்றும் ஆவேசப் பேச்சு
என்னை சுட்டு வீழ்த்துங்கள்! சபையில் அர்ச்சுனா எம்.பி இன்றும் ஆவேசப் பேச்சு என்னை இந்த அரசாங்கம் புலி, புலி என்று அடையாளப்படுத்துகின்றது. இப்படி கூறி ஏன் மன உளைச்சலுக்கு என்னை உள்ளாக்குகின்றீர்கள். என்னை விடுதலைப் புலியாக கருதினால் என்னை கைது செய்யுங்கள். இல்லையென்றால் சுட்டு வீழ்த்துங்கள். இந்த அரசாங்கம் படுகொலைகளை செய்துள்ளது. படுகொலை செய்து வந்த அரசாங்கம் தான் இது என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். 1980ஆம் ஆண்டுகளில் எவ்வளவு மக்களை ஆட்சிக்கு வந்துள்ள…
-
பாடசாலை மாணவிகள் தொடர்பில் பிரதமர் எடுத்துள்ள நடவடிக்கை!
நாட்டிலுள்ள பாடசாலைகளில் 6ஆம் தரத்திற்கு மேற்பட்ட மாணவிகளின் சுகாதார பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்கிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கல்வி அமைச்சின் இந்த கலந்துரையாடல், நேற்று (22) கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் கல்வி அமைச்சு வளாகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில், சுகாதாரத் துவாய் உற்பத்திக்காக இலங்கையில் தர நிர்ணயக் கட்டளைகள் நிறுவனத்தின் சான்றிதழ் பெற்ற பிரதான 4 கம்பனிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர். இதேவேளை, கல்வி அமைச்சின் சுகாதார மற்றும் போஷாக்கு பிரிவின்…
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து விழுந்த அதிகாரி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து இறங்கும் போது, இராஜதந்திரி ஒருவர் நடமாடும் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்த நிலையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த அதிகாரிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேற்கொண்ட விசாரணைக்கு அமைய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயன்படுத்தும் இந்த நடமாடும் படிக்கட்டுகள் 20 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையானவை தெரியவந்துள்ளது. பழைய படிக்கட்டு அதற்கமைய, நீண்ட காலமாக இந்த இயந்திரங்களை புதிதாக கொள்வனவு செய்யவில்லை எனவும் பழைய…
-
அநுரவின் அச்சத்தால் டொனால்ட் ட்ரம்பை நெருங்கும் மோடி..!
அநுரவின் அச்சத்தால் டொனால்ட் ட்ரம்பை நெருங்கும் மோடி..! டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக நேற்று முன்தினம் பதவியேற்ற நிலையில், பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில், நேற்றைய தினம், இந்தியாவின் 18000க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகளை நாடுகடத்த போவதாக ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், அதனை தாம் ஏற்பதாகவும் இந்தியா தெரிவித்திருந்தது. இதற்கான, காரணமாக இந்திய – அமெரிக்க உறவுகளை பேணுவதையும் வர்த்தகப் போரைத் தவிர்ப்பதையும் இந்தியா சுட்டிக்காட்டியிருந்தது. இருப்பினும், இந்திய பிரதமர் மோடியின் இந்த தீர்மானத்தின் பின்னணியில்…