Category: இலங்கை செய்திகள்
-
செயலாளர் வெளியே வராவிட்டால் தீக்குளிப்பேன்! பருத்தித்துறை நகரசபை முன் பதற்றம்
வர்த்தகர்கள் விடாப்பிடியாக செயலாளர் வெளியே வரவில்லை எனில் தாம் நகரசபை வாயிலை விட்டு எழுந்திருக்கமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை மரக்கறி சந்தையை முன்னர் இயங்கிய இடத்திற்கு மாற்றக்கோரி பருதித்துறை வர்த்தக சமூகம் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று காலை முன்னெடுத்தனர். பருத்தித்துறை நவீன சந்தையிலிருந்து பருத்தித்துறை நகரசபை வரை சென்று அங்கு தவிசாளர் மற்றும் செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. பருத்தித்துறை நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் சில மணிநேரம் மூடப்பட்டே…
-

கொழும்பில் இரவு விடுதியில் ஏற்பட்ட குழப்ப நிலை – வெளிநாட்டவர் கைது
கொழும்பு கோட்டையில் உள்ள டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள ஒரு இரவு விடுதியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இதன் போது அங்கு ஒருவரை தாக்கியதற்காக இந்திய பிரஜை ஒருவரை கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று இரவு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, பாதிக்கப்பட்டவருக்கும் இந்தியருக்கும் இடையே ஏற்பட்ட பண விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய பிரஜை தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியரின் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர் வத்தளையை சேர்ந்தவர் என குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பாக கோட்டை பொலிஸாரிடம் பாதிக்கப்பட்ட…
-

மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு: இலங்கை வெளிநாட்டு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு
மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் குறித்த தகவல்களை, தமது சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு வழங்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்தகைய தகவல்களை சிறப்பு புலனாய்வுப் பிரிவில் நிறுவப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுக்கு 0112 882228 என்ற தொலைபேசி எண் மூலம் தெரிவிக்கலாம் என்று பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக பொலிஸ் பிரிவுக்கு ஏற்கனவே ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய புலனாய்வு அதிகாரிகள் விரிவான…
-

ஆசிரிய சேவைக்கு ஆட்சேர்ப்பு குறித்து வெளியான தகவல்
பாடசாலைகளில் பணிபுரியும் அபிவிருத்தி அதிகாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அறிவிப்பை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவின் கையொப்பத்துடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதி இடம்பெறவிருந்த பாடசாலை அபிவிருத்தி அதிகாரிகள் உள்ளிட்ட அரசுப் பணியில் உள்ள பட்டதாரி அதிகாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டி பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படும் பல வழக்கு நடவடிக்கைகள்…
-

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சருடன் அநுர சந்திப்பு!
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் டி.எம். நகதானியை சந்தித்துக் கலந்துரையாடினார். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்து இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது. பாதுகாப்பு விடயங்களில் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான தற்போதைய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து வெகுவாக ஆராயப்பட்டது. இந்தச் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட இலங்கைத் தூதுக் குழுவினர் கலந்துகொண்டனர்.
-

ஹம்பாந்தோட்டையில் அதிகூடிய உப்பு விளைச்சல்
ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள இலங்கை உப்புக் கூட்டுத்தாபனத்தின் உப்பளத்தில் இம்முறை அதிகூடிய உப்பு விளைச்சல் பெறப்பட்டுள்ளது. தற்போதைய பெரும்போக உப்பு விளைச்சலின்போது சுமார் நாற்பதினாயிரம் தொன் உப்பு ஹம்பாந்தோட்டை உப்பளத்தில் விளைவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக எதிர்வரும் நாட்களில் இன்னும் சில ஆயிரம் தொன்கள் உப்பு விளைச்சலைப் பெறமுடியும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அத்துடன், புத்தளம் உப்பளத்திலும் சிறந்த உப்பு விளைச்சல் பெறப்பட்டுள்ளதாக உப்புக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதன் மூலம் இலங்கைக்குத் தேவையான உப்பு இம்முறை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து கொள்ளப்பட்டுள்ளதுடன்,…
-

யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் அண்மைகாலமாக இலாபமடைந்துள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கடந்த மாதம் 85 மில்லியன் ரூபாய் என்ற அடிப்படையில் இலாபமடைந்துள்ளதாக பாராளுமன்றத்தில் நேற்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். நிபுணத்துவ திட்டமிடலுக்கு அமைய யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படுமே தவிர அரசியல்வாதிகளின் நோக்கங்களுக்காக அல்ல என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். யாழ்ப்பாணம்…
-

புதைகுழிகள் விடயத்தில் ஐக்கிய நாடுகளின் உதவியை எதிர்பார்க்கும் இலங்கை
மனித புதைகுழிகள் உட்பட்ட போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளின் போது, ஐக்கிய நாடுகளின் தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ள தயாராகவே இருப்பதாக இலங்கை மீண்டும் அறிவித்துள்ளது. ஏற்கனவே கூறியபடி, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மூலம் இந்த தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ள இலங்கை தயாராகவே உள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித் ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மனித புதைகுழிகளை அகழும் விடயத்துடன் தொடர்புடைய நீதித்துறை அதிகாரிகளின் கட்டளைகளுக்கு இணங்க இந்த உதவிகள் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அமைச்சர்…
-

போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை
போதைப்பொருளை பயன்படுத்திய நிலையில் வாகனம் செலுத்துவோரை தடுக்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடைமுறையின்படி, போதைப்பொருளை பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படுவோரை சோதனையிடுவதற்கும், வழக்குத் தொடருவதற்கும் பொலிஸார் மற்றும் மருத்துவ அதிகாரிகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான வர்த்தமானியும் 2025 செப்டம்பர் 4ஆம் திகதியன்று வெளியிடப்பட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ், வாகனத்தை செலுத்தும் ஒருவரின் இயல்பற்ற நடத்தை, உடலசைவில் மாற்றங்கள், அசாதாரண கண் பார்வை நிலை அல்லது அவரின் ஆடை உட்பட்ட விடயங்களை மையப்படுத்தி, போதைப்பொருள் உட்கொண்டதாக “நியாயமான…
-

தமது போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ள இலங்கை மின்சார சபை பணியாளர்கள்
இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் உட்பட பல இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள், இன்று(21) நள்ளிரவு முதல், முன்மொழியப்பட்ட மறுசீரமைப்புக்கு எதிரான தங்கள் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்துவதாக அறிவித்துள்ளன. கடந்த செப்டம்பர் 4 ஆம் திகதியன்று ‘விதிப்படி வேலை’ பிரசாரத்துடன் அவர்களின் போராட்டம் ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் சுகயீன விடுமுறை போராட்டமும் நடத்தப்பட்டது. கடந்த 17 நாட்கள் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கை இருந்தபோதிலும் பிரச்சினைக்கு தீர்வு…