Category: பிரதான செய்தி

  • அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் தேர்தல் நிறுத்தப்படும்! தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை

    ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பின் போது அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் தேர்த்தல் முடிவுகள் அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பின் போது வாக்களிப்பு நிலையத்தில் ஏதேனும் அசம்பாவித நிலைமை ஏற்படுமாக இருந்தால் அந்த வாக்களிப்பு நிலையத்தின் வாக்குகளை சூனியமாக்கப்படும். அந்தத் தொகுதிகளில் மீண்டும் வாக்கெடுப்பை நடத்தும் வரையில் நாடாளவிய ரீதியிலான இறுதித் தேர்தல் முடிவுகளை அறிவிக்க முடியாத நிலைமை ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் நடவடிக்கைக்கு பாதிப்பை…

  • பதற்றமடைய வேண்டாம் : நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரை!!

    ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்பிற்கு பின்னரான வன்முறைகள் குறித்து பதற்றமடைவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் காலத்தில் சமூக அமைதியை பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அவர் ஐக்கியத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மதத்தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், அரசியல் செயற்பாட்டாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார். நாங்கள் அனைவரையும் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டு அமைதியான சூழலிற்கு பங்களிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றம். அனைத்து பிரஜைகளும்…

  • இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து ஆதிக்கம்

    இங்கிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்தது 236 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 74 ஓட்டங்களையும் அறிமுக வீரர் மிலன் ரத்நாயக்கா 72 ஓட்டங்களையும் அணிக்காக பெற்றுக்கொடுத்தனர். இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவின்போது, விக்கட்…

  • இலங்கையில் வீதி விபத்துகளில் 1,417 பேர் உயிரிழப்பு

    இந்த வருடத்தில் இதுவரை 1,417 பேர் வீதி விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வருடாந்தம் சுமார் 1000 பேர் மோட்டார் சைக்கிள் விபத்துக்களால் உயிரிழப்பதாக போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார். இந்திக்க ஹப்புகொட மேலும் கருத்து தெரிவிக்கையில், ”3,000 க்கும் மேற்பட்ட வீதி விபத்துகள் நடக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறும் விபத்துகளில் மூன்றில் ஒன்று மோட்டார் சைக்கிள் விபத்து. 2023 இல் வீதி விபத்துகள் குறைந்துள்ளன. 2024 ஜனவரி…

  • மகிந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க, பிரதமர் நாமல்

    ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP), தனது ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை எதிர்வரும் திங்கட்கிழமையன்று பரிந்துரைக்கும் என ராஜபக்சவின் விசுவாசியும், முன்னாள் இராஜதந்திரியுமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில், கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார். எனினும், இது தொடர்பாக கட்சியின் உத்தியோகபூர்வ தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை. 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் திகதி இலங்கையில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான…

  • இலங்கையில் முடங்கிய விமான சேவைகள் – ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விடுத்துள்ள அறிவிப்பு

    ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் ஒன்லைன் முன்பதிவு சேவைகள் முழுமையாக வழமைக்கு திரும்பியுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் இணைய சேவைகள் இன்று பிற்பகல் 2:00 மணியளவில் சீரமைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களின் உலகளாவிய செயலிழப்பு காரணமாக விமானத்தின் ஒன்லைன் முன்பதிவு சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன. விமான சேவைகள் உலகளாவிய தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக, உலகம் முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள 0094 19733 1979…

  • அரசியல் களத்தை தீவிரமாக்கும் 22ஆம் திருத்த சட்டமூலம்..!

    நாடாளுமன்றத்தில், எதிர்வரும் வாரங்களில் 22ஆம் திருத்தச்சட்டமூலம் கொண்டு வரப்படமாட்டாது என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கு பின்னர், 22ஆம் திருத்த சட்டமூலம் முன்வைக்கப்படும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் 22ம் திருத்த சட்டத்திற்கு நாடாளுமன்றில் ஆதரவு கிடைக்காவிட்டால் அன்றைய தினமே நாடாளுமன்றை கலைப்பதற்கு வர்த்தமானி அறிவித்தல் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட…

  • தேரரை விடுதலை செய்வதயின் பல இலட்சம் முஸ்லிம் சமூகத்தினரின் கையில்! எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

    ஞானசார தேரருக்கு மன்னிப்புக் கொடுக்கும் விவகாரமானது நாட்டின் சட்டத்தோடும் உயர் நீதிமன்றத்தோடும் நேரடியாக தொடர்பட்டிருக்கும் நிலையில் முஸ்லிம் சமூகத்திடம் தொடர்புடையது என தெரிவிக்கப்படுகிறது எனவே நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம்களிடம் கருத்தைப் பெறாமல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவோ, முஸ்லிம் சிவில் அமைப்புக்களோ, அரசியல் பிரமுகர்களோ இது தொடர்பில் எந்தவித நிலைப்பாடுகளையும் எடுக்க முடியாது என்று அறியப்படுகிறது இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், சட்டத்துறை வல்லுநர்கள், அரசியல்…

  • இலங்கையில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்

    அம்பலாங்கொட, கந்த மாவத்தை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். 2022ஆம் ஆண்டு இலங்கை 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அணியின் தலைவராக இருந்த தம்மிக்க நிரோஷன என்பவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இவர் தற்போது வெளிநாட்டில் வசிக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினர் சுரங்க மானவடுவின் உதவியாளர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தம்மிக்க நிரோஷன வீட்டின் முன் நின்று கொண்டிருந்த போது…

  • அனுராதபுரத்தில் நிலநடுக்கம்!

    அனுராதபுரம் மற்றும் கந்தளாய்க்கு இடைப்பட்ட பகுதியில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 2.7 ஆக பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது