Category: கனடா நிகழ்வுகள்

  • தமிழ் முழக்கம்: உலகத் தொல்காப்பியப் பெருவிழா!

    கனடா, மார்க்கம் நகரில் எதிர்வரும் செப்டம்பர் 19–20இ 2026 தேதிகளில் ‘2ஆவது உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு’ (Bill Hogarth Secondary School, Markham)) மிகப்பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. தொல்காப்பியம் வெறும் இலக்கண நூலன்று, அது பழந்தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியல் உளவியல் சான்று, தமிழனின் சிந்தனைப் பெருவெளியின் ஆதி அடையாளம். இத்தகைய மாபெரும் மாநாட்டினை நாம் வெற்றியடையச் செய்வதன் மூலம், நமது மூத்த தமிழின் வேர்களை உலகெங்கும் ஆழமாகப் பரப்ப முடியும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் உலகெங்கிலும்…

  • பிரபல பாடகி கோவை கமலாவின் கானங்கள்

    31.08.2026 திங்கட்கிழமை மாலை கனடாவின் Scarbarough, Event Centre, 5637 Finch Ave  E Unit 1 எனும் முகவரியில்  பிரபல பாடகி கோவை கமலா ராசகோபுரம் எங்கள் தலைவன் என்ற பாடலை பாடினார். குறித்த நிகழ்வானது வீடு விற்பனை முகவரும் வானொலி அறிவிப்பாளரும் ,(Ajaxward 02 ) நகரசபை வேட்பாளருமான ரஞ்சித் பரணிவாசகம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வினை கனடா ஈழநிலா ஏற்பாட்டுக்குழு ஒருங்கமைத்திருந்தது. இந்நிகழ்வில் கனேடியக் கலைஞர்கள், ஊடகத்தினர் எனப் பலர் கலந்து கொண்டதுடன், பாடகர்கள்…

  • திருச்செந்தூர் முருகன் அருளும் அனலைப்பொடியன்: புகழ்த்து பாடும் தெய்வப் பாடல்

    திருச்செந்தூர் முருகன் அருளும் அனலைப்பொடியன்: புகழ்த்து பாடும் தெய்வப் பாடல் இந்தக் காணொளி குறித்த அஞ்சல்கள் மற்றும் ஹேஷ்டாக்கள்: #முருகன், #analaipodiyan, #திருச்செந்தூர்முருகன், #tamilan ஆகியவை முக்கியத் தொடர்களாக உள்ளன. இவை யாருக்கும் தெரிந்தது போன்ற தலைப்பு மற்றும் பாடலுக்கான குறிப்பு வழங்குகின்றன. முகாமுக்குரை திருச்செந்தூர் முருகனைப் பற்றிய பக்தி பாடல்களில் ‘அனலைப்பொடியன்’ என்ற பாடல் குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் முருகன்பக்தியை, தெய்வீக அருளை மற்றும் தமிழின் ஆன்மீக பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது. முக்கிய அம்சங்கள் – பாடலின்…

  • செம்மணி புதைகுழி கவனயீர்ப்பு நிகழ்வு

    சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாளை முன்னிட்டும், செம்மணியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டியும், தாயக உறவுகளின் போராட்டங்களிற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும், நீதியின் ஓலம், செம்மணி புதைகுழி கவனயீர்ப்பு நிகழ்வு, எதிர்வரும் சனிக்கிழமை 29.08.2026 அன்று மாலை 6 மணிக்கு பிராம்ரன், சிங்கூசி பூங்கா தமிழின அழிப்பு நினைவனத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

  • கனடாவில் மகன்களைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை!

    கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்திலுள்ள செயிண்ட் ஜான் நகரில், தனது இரு மகன்களைக் கொடூரமாகக் கொலை செய்த 46 வயதான ரோமன் காமிஷ்னி என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் திகதி அதிகாலை, காமிஷ்னி தனது 10 மற்றும் 17 வயதுடைய இரு மகன்களையும் கத்தியால் குத்திக் கொலை செய்தார். பின்னர், ‘நெயில் கன்’ ஆணி அடிக்கும் கருவி மூலம் தனது தலையில் தானே அடித்துக்கொண்டு…

  • கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடாத்தும் ”நூல்களின் சங்கமம் நூல் கண்காட்சி 2026”

    கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடாத்தும் ”நூல்களின் சங்கமம் நூல் கண்காட்சி 2026″‘ ஆகஸ்ட் 16, 2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை, தமிழிசை கலாமன்ற மண்டபத்தில் இரண்டாவது தடவையாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல எழுத்தாளர்கள் தங்களது நூல்களை காட்சிப்படுத்தவும் விற்பனை செய்யவும் முன்வந்துள்ளார்கள். அத்துடன் சில புதிய நூல்களின் வெளியீடும் இடம்பெறவுள்ளதுடன் இளையோர் நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன. குறித்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

  • மார்க்கம் (Markham) நகரில் தமிழர் தெருவிழா 2026

    கனடா மார்க்கம் நகரில், ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் தமிழர் தெருவிழா 2026 நிகழ்வு நடைபெறவுள்ளது . பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் நேரடி இசை நிகழ்ச்சிகள், துடிப்பான பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள், சுவையான உணவு அங்காடிகள், குடும்பத்துடன் மகிழக்கூடிய பல்வேறு செயல்பாடுகள், குழந்தைகளுக்கான பிரத்யேக விளையாட்டுப் பகுதி, வணிகக் கடைகள் என இன்னும் பல சிறப்பம்சங்கள் மேந்கொள்ளப்பட்டுள்ளது. முற்றிலும் ,இலவச அனுமதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்ச்சி…

  • 50 ஆண்டுகளுக்குப் பின் ‘உலகத் தமிழாராய்ச்சி மாநாடு’ மீண்டும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது

    உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் அடுத்த மாநாடு வருகின்ற ஆண்டு இலங்கையில் -யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளது. உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர் அரசர் அருளாளர் ( ஐக்கிய அமெரிக்கா ) இந்த அறிவிப்பை விடுத்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும்,யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும், தமிழி அமைப்பும் இணைந்து இன்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கில் நடாத்திய தனிநாயகம் அடிகள் நினைவரங்கத்தில் கலந்து கொண்டு தொடக்கவுரை ஆற்றுகையிலேயே இந்த அறிவிப்பை அவர் விடுத்தார். முதலாவது தமிழாராய்ச்சி மாநாடு 1966ஆம் ஆண்டு கோலாலம்பூர்,…

  • கனடாவின் Toronto நகரில் தமிழர் நாள் கொண்டாட்டம்

    @mayuy2k கனடாவின் Toronto நகரில் தமிழர் நாள் கொண்டாட்டம் ♬ original sound – மயூரன் Mayuran – மயூரன் Mayuran