கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடாத்தும் ”நூல்களின் சங்கமம் நூல் கண்காட்சி 2026”

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடாத்தும் ”நூல்களின் சங்கமம் நூல் கண்காட்சி 2026″‘ ஆகஸ்ட் 16, 2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை, தமிழிசை கலாமன்ற மண்டபத்தில் இரண்டாவது தடவையாக நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பல எழுத்தாளர்கள் தங்களது நூல்களை காட்சிப்படுத்தவும் விற்பனை செய்யவும் முன்வந்துள்ளார்கள்.

அத்துடன் சில புதிய நூல்களின் வெளியீடும் இடம்பெறவுள்ளதுடன் இளையோர் நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

குறித்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.