Category: உலக செய்திகள்

  • புகழ்பெற்ற மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்

    புகழ்பெற்ற மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்

    பிரபல WWE மல்யுத்த வீரர் மற்றும் நடிகராக பலரின் சிறுவயதில் மனதை கொள்ளை கொண்ட ஹல்க் ஹோகன் 71வது வயதில் இன்று காலமாகியுள்ளார். இன்று WWE தங்களது X பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், ஹோகன் மரணித்ததாக அறிவித்துள்ளது. “WWE மிகவும் வருத்தத்துடன் WWE ஹால் ஆஃப் ஃபேம் வீரர் ஹல்க் ஹோகன் மறைந்ததை தெரிவித்துக் கொள்கிறது. “பொப் கலாச்சாரத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க நபர்களில் ஒருவரான ஹோகன், 1980களில் WWEயை உலகளாவிய புகழுக்கு கொண்டு செல்ல உதவியவராவார். ”…

  • பிரித்தானியாவிற்கு செல்ல இலவச வாய்ப்பு பெறும் இந்தியர்கள்

    பிரித்தானியாவிற்கு செல்ல இலவச வாய்ப்பு பெறும் இந்தியர்கள்

    இந்தியர்கள் பிரித்தானியா செல்வதற்கான இலவச விசா வாய்ப்பு ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்தோடு, இதற்கான விண்ணப்பப்படிவத்தை இன்று(22) மதியம் 1.30 முதல் நாளை மறுதினம் (24) வரை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் 18- 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அத்தோடு,குறித்த நபர்களின் வங்கிக் கணக்கில் இரண்டு இலட்சம் ரூபாய் பணம் வைப்பிலிடப்பட்டு இருக்க வேண்டும். மேலும், ஏதாவது ஒரு கற்கை நெறியில் பட்டம் பெற்று இருக்க வேண்டும் எனவும்…

  • அரச ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்த ட்ரம்ப்

    அரச ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்த ட்ரம்ப்

    அமெரிக்க அரச ஊழியர்களில் 1,300 பேரை பணி நீக்கம் செய்ய ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதியாக, கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் முறையாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றது முதல் பல்வேறு நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறையில் உள்ள 1,300 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அமெரிக்காவில் உள்நாட்டு பணிகளில் ஈடுபட்டு வந்த 1,107 பணியாளர்கள், வெளிநாட்டு பணிகளை…

  • அமெரிக்காவை முழுதாக புறக்கணித்து வரும் கனேடியர்கள்

    அமெரிக்காவை முழுதாக புறக்கணித்து வரும் கனேடியர்கள்

    கனேடியர்கள் அமெரிக்க சுற்றுலாவை புறக்கணித்து வருவதால் அமெரிக்க பொருளாதாரத்தில் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. Vancity என்னும் ஆய்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்காவுக்கு கனேடிய சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவால் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில், வாஷிங்டனில் கனேடியர்களால் பெறப்படும் வருவாய் 47 சதவீதமும், மொத்த அமெரிக்காவில் 33 சதவீதமும் குறைந்துள்ளது. மேலும், அமெரிக்க இணையத்தள வர்த்தக நிறுவனங்களில் பொருட்கள் கொள்வனவு செய்யும் கனேடியர்களின் எண்ணிக்கை 14 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில்…

  • இந்தியப் பெருங்கடலில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் உத்தி: 2025-ல் உலக சக்தியை மறுவடிவமைக்கும் கடல் அச்சு

    இந்தியப் பெருங்கடலில் சீனாவின் பெல்ட் அண்ட் ரோட் உத்தி: 2025-ல் உலக சக்தியை மறுவடிவமைக்கும் கடல் அச்சு

    ✧.முன்னுரை உலக நாடுகள் அமெரிக்காவின் மேற்கு ஆசியத் தலையீடுகள், உக்ரைனில் நடைபெறும் போர் மற்றும் கிழக்கு ஆசியக் கிளர்ச்சிகளை கவனிக்கின்ற நிலையில், சீனா மெதுவாகவும் வியூகமாகவும் ஒரு பெரும் மாற்றத்தை இந்தியப் பெருங்கடலில் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. பெல்ட் அண்ட் ரோட் திட்டத்தின் (BRI) ஊடாக, சீனா உலக வர்த்தக மற்றும் பாதுகாப்பு வழித்தடங்களில் தனது பாதிப்பை நிலைநாட்டிக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் பொருளாதார மேம்பாட்டு முயற்சியாக தோன்றிய இது, தற்போது ஒரு வலிமையான புவியியல் சக்தியாக விரிவடைந்துள்ளது. இந்தியப் பெருங்கடல் இப்போது…

  • சீனாவின் 6G மின்னியல் போர் அமைப்பு: எதிர்கால இராணுவ ஆதிக்கத்தின் தொடக்கம்

    சீனாவின் 6G மின்னியல் போர் அமைப்பு: எதிர்கால இராணுவ ஆதிக்கத்தின் தொடக்கம்

    அறிமுகம் போர்க்களத்தின் விதிகளை இன்று மாற்றிக்கொண்டும், எதிர்காலத்தை வடிவமைக்கவும் சீனா தங்கள் மின்னியல் போர் (Electronic Warfare – EW) முயற்சியில் ஒரு புரட்சிகரமான கட்டத்தை அடைந்திருக்கிறது. 6G தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இவ்வமைப்பு, அமெரிக்காவின் 5ஆம் தலைமுறை ஸ்டெல்த் போர்விமானமான F-35 ஐ கூட ஏமாற்றும் ஆற்றலுக்குரியது. இது சாதாரண தொழில்நுட்ப மேம்பாட்டல்ல; இது ஒரு புதிய போர் யுகத்தின் பிறப்பாக இருக்கிறது. ✦. புதிய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட மின்னியல் போர் சீனாவின் புதிய மின்னியல் போர்…

  • பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்!

    பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்!

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஸ்வாட் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களில் 4 பேர் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பக்துன்க்வா மாகாணத்திற்கு சுற்றுலா வந்த குழுவின் ஒரு பகுதியினர் (ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர்), ஸ்வாட் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதன்படி கனமழை காரணமாக வெள்ளம்…

  • இஸ்ரேல் தாக்குதல்களில் ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை

    இஸ்ரேல் தாக்குதல்களில் ஈரானில் உயிரிழந்தோர் எண்ணிக்கை

    இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட தாக்குதல்களின் காரணமாக ஈரானில் சுமார் 610 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈரான் சுகாதார அமைச்சு இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 13ம் திகதி முதல் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த தாக்குதல்களின் காரணமாக 610 பேர் கொல்லப்பட்டதாகவும் இதில் 49 பெண்களும், 13 சிறுவர்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதல்களில் 4746 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் இதில் 185 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல் தாக்குதல்களில் 5 சுகாதாரப்…

  • உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஈரானின் அதிரடி முடிவு!

    உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஈரானின் அதிரடி முடிவு!

    உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய பங்காக உள்ள ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் நாடாளுமன்றமும் அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதுக்குமான 20% கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியேதான் பல்வேறு பகுதிகளுக்கு கப்பலில் கொண்டு செல்லப்படுவதால், கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் பெட்ரோல், டீசல், விலைகளும் உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக ஈரான் –…

  • மத்திய கிழக்கில் ஏற்படவுள்ள பேரழிவு- இஸ்ரேலின் அதிரடி திட்டம் குறித்து எச்சரிக்கை

    மத்திய கிழக்கில் ஏற்படவுள்ள பேரழிவு- இஸ்ரேலின் அதிரடி திட்டம் குறித்து எச்சரிக்கை

    ஈரானின் புஷேர் அணுமின் நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் அது பேரழிவை ஏற்படுத்தும் என்று உலகளாவிய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. புஷேர் அணுமின் நிலையத்தின் மீதான நேரடித் தாக்குதல், “மிக அதிக கதிரியக்க வெளியீட்டை” ஏற்படுத்தும் என்றும், இது ஆலையிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களுக்குள் உள்ள மக்களைப் பாதிக்கும் என்றும் அணுசக்திக்கான சர்வதேச அமைப்பின் இயக்குனர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், புஷேர், ஈரானில் உள்ள அணுசக்தி தளம், அங்கு தாக்குதலின் விளைவுகள் மிகவும் தீவிரமாக இருக்கும். ஒரு…