Category: உலக செய்திகள்

  • அமெரிக்காவையே அதிர வைத்த டீப் செக் செயற்கை நுண்ணறிவு

    சீனாவினால் அண்மையில் வெளியிட்டுள்ள டீப்சீக் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டீப்சீகின் வருகையானது, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சட் ஜிபிடி (ChatGPT) மற்றும் சீனாவின் டீப்சீக் (Deepseek) என இரண்டுமே நாம் அனுப்பும் தரவுகளை மனிதர்களை போல புரிந்து கொண்டு, அதற்கேற்ப பதிலளிக்கும். இவை சாதாரணமாக கட்டுரை எழுதுவது, ஆராய்ச்சி, கோடிங் என பல்வேறு பணிகளை இலகுவாக…

  • டிரம்பின் வரி மிரட்டலுக்கு பணிந்ததா கொலம்பியா?

    தென் அமெரிக்க நாடான கொலம்பியா இந்த நாடு கடத்தும் திட்டத்தை நிராகரித்தது. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், கொலம்பியா மீது வரி விதிப்பு, விசா ரத்து, பயணியர் வர தடை என, கெடுபிடிகளை விதித்தார். சட்டவிரோதமாக குடியேறிய கொலம்பியர்களை இரண்டு விமானங்களில் அமெரிக்க அரசு அனுப்பி வைத்தது. அந்த விமானங்கள் தரையிறங்க கொலம்பியா அனுமதிக்கவில்லை. இதனால், கொலம்பிய நாட்டு இறக்குமதிக்கான வரியை 25 சதவீதம் உயர்த்தினார் டிரம்ப். இது அடுத்த ஒரு வாரத்தில் 50 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும்…

  • பல உலக நாடுகளுக்கான நிதியுதவியை நிறுத்திய டிரம்ப்

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த 20 ஆம் திகதி பதவியேற்றுக்கொண்ட நிலையில் பல உலக நாடுகளுக்கான நிதியுதிவியை நிறுத்தியுள்ளார். அவர் பதவியேற்றதும் எரிசக்தி பயன்பாடு, குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம் என பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். மேலும், சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் எனவும் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதாகவும் அறிவித்தார். இந்த நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு…

  • அநுரவின் அச்சத்தால் டொனால்ட் ட்ரம்பை நெருங்கும் மோடி..!

    அநுரவின் அச்சத்தால் டொனால்ட் ட்ரம்பை நெருங்கும் மோடி..! டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக நேற்று முன்தினம் பதவியேற்ற நிலையில், பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில், நேற்றைய தினம், இந்தியாவின் 18000க்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகளை நாடுகடத்த போவதாக ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், அதனை தாம் ஏற்பதாகவும் இந்தியா தெரிவித்திருந்தது. இதற்கான, காரணமாக இந்திய – அமெரிக்க உறவுகளை பேணுவதையும் வர்த்தகப் போரைத் தவிர்ப்பதையும் இந்தியா சுட்டிக்காட்டியிருந்தது. இருப்பினும், இந்திய பிரதமர் மோடியின் இந்த தீர்மானத்தின் பின்னணியில்…

  • 3ம் உலகப்போர் தொடங்கி விட்டது.. முட்டிமோதும் வல்லரசுகள்.. உடைத்து பேசிய உக்ரைனின் மாஜி படை தளபதி

    3ம் உலகப்போர் தொடங்கி விட்டது.. முட்டிமோதும் வல்லரசுகள்.. உடைத்து பேசிய உக்ரைனின் மாஜி படை தளபதி மூன்றாம் உலகப்போர் அதிகாரப்பூர்வமாக தொடங்கிவிட்டது என்று உக்ரைனின் முன்னாள் ராணுவ தளபதி வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுக்கு பிறகு அமெரிக்கா, வட கொரியா, ஈரான், சீனா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டை சுட்டிக்காட்டி பரபரப்பை பற்றவைத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் நடவடிக்கையை தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வந்தால்…

  • உக்ரைன் மீது பயங்கர தாக்குதல்! வெகுநாட்களுக்கு பின் மீண்டும் தோன்றிய புடின்

    ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடிய ஏவுகணையை கொண்டு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்ய ஜனதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். புடின் வெகுநாட்களாக பொதுவெளிகளில் தென்படவில்லை என்ற கருத்து பரவி வந்த நிலையில், நேற்றயதினம் (21.11.2024) உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக அவரே கூறியுள்ளார். மேற்கத்தைய நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட ஏவுகணைகளை ரஷ்யா மீது உக்ரைன் பயன்படுத்தியதையடுத்தே, இந்த தாக்குதலை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் மேற்கத்தைய நாடுகளையும்…

  • நீரை சேமித்து வையுங்கள்! மூன்றாம் உலகப்போர் எச்சரிக்கையை விடுத்த ஐரோப்பிய நாடு

    மூன்றாம் உலகப்போர் அச்சம் உருவாகியுள்ளதால் உணவுப்பொருட்கள் மற்றும் தண்ணீரை சேமித்துவைக்குமாறு சுவீடன் அரசாங்கம் அந்நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் அணு ஆயுதத்தை பயன்படுத்த அந்நாட்டு இராணுவத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் தங்களின் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கைகளை விடுத்து வருகின்றன. அந்தவகையில், சுவீடன் நாடு விடுத்துள்ள எச்சரிக்கையானது சர்வதேச ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, ஐரோப்பாவின் முக்கியமான மற்றும் ஏழாவது பெரிய நாடாக கருதப்படும் ஜெர்மனி நாட்டின் அரசாங்கமும்…

  • இலங்கைக்கு வருவதற்கு விமான நிலையத்தில் காத்திருந்த பெண் மரணம்

    நாட்டுக்கு திரும்புவதற்காக குவைத் விமான நிலையத்தில் காத்திருந்த இலங்கை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான நிரோஷா தமயந்தி என்ற 48 வயதான மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றின் ஊடாக கடந்த 9ஆம் திகதி குவைத் சென்றிருந்த நிலையில், அவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். உடல்நல குறைவால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மரணம் குறித்து உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். தமது தாயார் நோயின்றி மகிழ்ச்சியாக…

  • நிதிநெருக்கடியை ஏற்பட்டுத்த திட்டம்; ஹெஸ்புல்லா வங்கிகளை இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதல்!

    லெபனான் தலைநகரில் ஹெஸ்புல்லா அமைப்பு பயன்படுத்தும் வங்கிககளை இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. பெய்ரூட்டின் தெற்குபுறநகர் பகுதிகளில் உள்ள அல் ஹார்ட் அல் ஹசன் வங்கியின் கிளைகளை இஸ்ரேல் தாக்கியுள்ளது . பெய்ரூட்டின் சர்வதேச விமானநிலையத்திற்கு அருகில் உள்ள வங்கி கிளைகளையும் இஸ்ரேல் தாக்கியுள்ளது. விமானநிலையத்தி;ற்கு அருகில் உள்ள கட்டிடமொன்றை இஸ்ரேலின் விமானங்கள் தாக்குவதையும் அந்த கட்டிடம் இடிந்து விழுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. பெய்ரூட்டின் தென்பகுதியில் பொதுமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் அல் ஹார்ட் அல்…