Category: உலக செய்திகள்

  • மீண்டும் இஸ்ரேலை நோக்கி ஈரானிய ஏவுகணைகள்!

    மீண்டும் இஸ்ரேலை நோக்கி ஈரானிய ஏவுகணைகள்!

    இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணைகளை ஏவியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானின் குறித்த தாக்குதலைத் தடுக்க இஸ்ரேலின் பாதுகாப்பு படைகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாக இஸ்ரேலிய இராணுவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அறிவிப்பு வரும் வரை குடிமக்கள் தங்குமிடங்களுக்குள் நுழைந்து அங்கேயே இருக்குமாறும் இஸ்ரேலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறிது நேரத்திற்கு முன்னர், ஈரானிய அரச ஊடகம் மீது இஸ்ரேல் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது. ஈரான் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதைத் தொடர்ந்து, ஹைஃபா பகுதியிலும் வடக்கு இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சமிக்ஞைகள் ஒலிப்பதாக…

  • எப்ஸ்டீன் சர்ச்சை, ஸ்பேஸ்எக்ஸ் முடக்கம்: முற்றுகிறது டிரம்ப் -மஸ்க் மோதல்! அமெரிக்க மல்யுத்தமா? அல்லது நாடகமா?

    எலான் மஸ்க் மற்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பல மாத கூட்டணி கிட்டத்தட்ட முறிந்தது. ஒரு காலத்தில் நெருங்கிய கூட்டாளிகளாக இருந்தவர்கள் இப்போது ஒரு சூடான பொது மோதலில் சிக்கியுள்ளனர். எலான் மஸ்க்கின் நிறுவனங்களுடன் இணைக்கப்பட்ட அரசாங்க ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக டிரம்ப் அச்சுறுத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்பேஸ்எக்ஸின் டிராகன் விண்கலத்தை ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மாறி மாறி குற்றசாட்டுகளை முன் வைத்து வரும் டிரம்ப், மஸ்க்…

  • தனிக்கட்சி தொடங்கும் முடிவில் எலான் மஸ்க்? எக்ஸ் தளத்தில் கருத்துக் கணிப்பை தொடங்கினர்! எலான் மஸ்க் – நீண்டகால அரசியல் அபிலாஷை?

    அமெரிக்காவின் எலான் மஸ்க், புதிய அரசியல் கட்சியை உருவாக்குவது குறித்து முன்மொழிவதன் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான தனது பொது மோதலை தீவிரப்படுத்தினார். வியாழக்கிழமை (ஜூன் 5) எக்ஸ் தளத்தில் புதுக் கட்சி தொடங்குவது குறித்து எலான் மஸ்க் ஒரு கருத்துக்கணிப்பைத் தொடங்கினார். அவரைப் பின்தொடர்பவர்களிடம், உண்மையில் 80% மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சியை நிறுவ வேண்டிய நேரம் இதுவா என்று கேட்டார். இந்த கருத்துக்கணிப்பு வைரலானது மற்றும் 4.1 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது.…

  • போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இடையே மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திய புடின்: அதிர்ச்சியான அமெரிக்கா

    போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இடையே ரஷ்யா, உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியதை தொடர்ந்து, அமெரிக்கா அதிபர் டிரம்ப் தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதோடு,”அவர் (புடின்) முழு உக்ரைனையும் விரும்பினால், அது ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்” என்று எச்சரித்து உள்ளார். ஞாயிற்றுக்கிழமை நியூ ஜெர்சியில் உள்ள மோரிஸ்டவுன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “புடினுடன் நான் மகிழ்ச்சியாக இல்லை” என்று கூறி புடினை விமர்சித்தார். “அவர் நிறைய பேரைக் கொல்கிறார். புடினுக்கு என்ன ஆயிற்று…

  • ஐரோப்பாவின் பாதுகாப்பு பரிதாபம், ரஷ்யாவின் தாக்குதல்கள்: உக்ரைனில் தீவிரமடையும் பதற்றம்!

    ஐரோப்பா தனது பாதுகாப்பு பேச்சை தீவிரமான நடவடிக்கைகளுடன் விரைவாக இணைக்காவிட்டால், அதன் வாக்குறுதிகளுக்கும் உக்ரைனின் போர்க்கள நிலைமைக்கும் இடையிலான இடைவெளி மேலும் அகலும். ஐரோப்பாவின் பாதுகாப்பு பரிதாபம் மற்றும் ரஷ்யாவின் தாக்குதல்கள்: உக்ரைனில் தீவிரமடையும் பதற்றம் புதிய மோதல் கட்டம். உக்ரைனில் தொடரும் போர், இப்போது ஆபத்தான மோதல் கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. ரஷ்யாவின் சமீபத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் இந்தப் போர் தொடங்கியதிலிருந்து மிகக் கொடூரமானவை எனக் கூறப்படுகிறது—கீவ் நகரில் 12 பேரைக் கொன்றது மற்றும்…

  • புதிய திருத்தந்தை பதின்நான்காம் லியோ (14ம் சிங்கராயர்).

    புதிய திருத்தந்தை பதின்நான்காம் லியோ (14ம் சிங்கராயர்).

    புதிய திருத்தந்தை பதின்நான்காம் லியோ அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் பிறந்து அகஸ்தீன் சபையில் சேர்ந்து …தென்னமெரிக்க ஆயர்களுடைய தலைமை ஆயராக பணியாற்றி, 2023 செப்டம்பர் மாதம் மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கர்தினாலாக தகுதி உயர்த்தப்பட்ட கருதினால் மேதகு ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் அவர்கள், திருத்தந்தை 14 ஆம் லியோ(14ம் சிங்கராயர்)என்ற பெயர் தேர்வோடு திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார் …புதிய திருத்தந்தைக்காக நாம் ஜெபிப்போம்.  

  • அமெரிக்காவையே அதிர வைத்த டீப் செக் செயற்கை நுண்ணறிவு

    சீனாவினால் அண்மையில் வெளியிட்டுள்ள டீப்சீக் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டீப்சீகின் வருகையானது, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சட் ஜிபிடி (ChatGPT) மற்றும் சீனாவின் டீப்சீக் (Deepseek) என இரண்டுமே நாம் அனுப்பும் தரவுகளை மனிதர்களை போல புரிந்து கொண்டு, அதற்கேற்ப பதிலளிக்கும். இவை சாதாரணமாக கட்டுரை எழுதுவது, ஆராய்ச்சி, கோடிங் என பல்வேறு பணிகளை இலகுவாக…

  • டிரம்பின் வரி மிரட்டலுக்கு பணிந்ததா கொலம்பியா?

    தென் அமெரிக்க நாடான கொலம்பியா இந்த நாடு கடத்தும் திட்டத்தை நிராகரித்தது. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், கொலம்பியா மீது வரி விதிப்பு, விசா ரத்து, பயணியர் வர தடை என, கெடுபிடிகளை விதித்தார். சட்டவிரோதமாக குடியேறிய கொலம்பியர்களை இரண்டு விமானங்களில் அமெரிக்க அரசு அனுப்பி வைத்தது. அந்த விமானங்கள் தரையிறங்க கொலம்பியா அனுமதிக்கவில்லை. இதனால், கொலம்பிய நாட்டு இறக்குமதிக்கான வரியை 25 சதவீதம் உயர்த்தினார் டிரம்ப். இது அடுத்த ஒரு வாரத்தில் 50 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும்…

  • பல உலக நாடுகளுக்கான நிதியுதவியை நிறுத்திய டிரம்ப்

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த 20 ஆம் திகதி பதவியேற்றுக்கொண்ட நிலையில் பல உலக நாடுகளுக்கான நிதியுதிவியை நிறுத்தியுள்ளார். அவர் பதவியேற்றதும் எரிசக்தி பயன்பாடு, குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம் என பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். மேலும், சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் எனவும் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகுவதாகவும் அறிவித்தார். இந்த நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு…