Category: இலங்கை செய்திகள்

  • ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை வழங்குமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை!

    ஓகஸ்ட் 12ஆம் திகதி ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் தொகுக்கப்படாத முழுமையான வீடியோ பதிவை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி ஊடகப் பிரிவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஓகஸ்ட் 14ஆம் திகதியிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில், குறித்த கலந்துரையாடலின் வீடியோ பதிவின் ஒரு பகுதி மட்டுமே தற்போது தமக்குக் கிடைத்துள்ளதாகச் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. வழங்கப்பட்டுள்ள வீடியோவில் ஆரம்பக் கலந்துரையாடலின் ஒரு பகுதி மட்டுமே உள்ளதாகவும், சில பகுதிகளில் ஒலி தெளிவில்லாமல் இருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, கலந்துரையாடல் முழுவதும்…

  • பாட நூல்களை பழைய பொருட்கடைகளுக்கு விற்றவர் கைது

    கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் கிழக்கு மாகாண மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக வழங்கி வைக்கப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான பாடநூல்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பாடநூல் தொகுதியை ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி, அந்தப் புத்தகங்களை பழைய காகிதக் கடைக்காரர் ஒருவருக்கு விற்று 47,000 ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாக தலங்கம பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கிழக்கு மாகாண மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக வெளியிடப்பட்ட 19,892 பாடநூல்களை கொண்டு செல்வதற்காக கல்வி…

  • ஷிரான் பாசிக்கு 72 மணி நேர தடுப்புக் காவல்

    போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ‘ஷிரான் பாசிக்’ என்பவரை 72 மணி நேர தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (14) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதையடுத்து, அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

  • 22வது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டம் அடுத்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

    நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் சரத்துகளை உள்ளடக்கிய முன்மொழியப்பட்ட 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், எதிர்வரும் ஆகஸ்ட் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். அதே நாளில் நீதித்துறை (திருத்த) சட்டமூலமும் (Judicature Amendment Bill) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.  நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் இந்தத் திருத்தத்திற்கு மூன்று நிகாயாக்களின் மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), எதிர்க்கட்சிகள் மற்றும் சர்வதேச…

  • ஜனாதிபதி அநுரவின் சட்டத்தரணிகளுடனான சந்திப்பு

    ஒரு தீர்மானத்தை எடுக்கும் போது ஒரு கூட்டமே ஒன்று திரண்டு தனக்கு எதிராக சதி செய்யுமானால் அந்த தீர்மானம், வாய்ப்பு கை நழுவி போகாமல் அதனை கெட்டியாக பிடித்து தனக்கு சாதகமாக எப்படி மாற்றிக் கொள்ளலாம் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துகாட்டு. நீதிபதிகளின் ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் உயர்த்துவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) கடுமையாக எதிர்த்தது. ஆனால் ஜனாதிபதி அநுரவோ இன்றைய சந்திப்பிக்கு பிறகு முழு Debate இன் frame யே மாற்றிவிட்டார் என்று…

  • அம்பாறையில் தாவித்தாவி போதைப்பொருள் விற்ற ஸ்பைடர் வுமன்!

    அம்பாறை- சாய்ந்தமருதுப் பகுதியில் கட்டிடங்களின் மாடிகளுக்கு இடையே சிலந்தி போல் தாவித் தப்பிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததன் காரணமாக ஸ்பைடர் வுமன் என்றழைக்கப்பட்ட பெண் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 40 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார். அவர், நீண்டகாலமாக ‘ஐஸ்’ உள்ளிட்ட போதைப்பொருட்களை விநியோகித்து வருபவர் என பொலிஸார் கூறியுள்ளனர். அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, பெண் பொலிஸாரின் உதவியுடன் மாறுவேடத்தில் சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.…

  • 10 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை; தந்தையும் , தாத்தாவும் தலைமறைவு!

    அம்பாலாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமியிடம், தனது தந்தை மற்றும் தாத்தா முறைக்கேடாக நடந்துக்கொண்டதாக பொலிஸாரிடம் இரண்டு வெவ்வேறான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. குறித்த சிறுமி, கடந்த 9ஆம் திகதி பாடசாலை விளையாட்டுப் போட்டிக்காக காலி பகுதிக்குச் சென்றுள்ளார். அதன்பின்னர் மிரிஸ்ஸவில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்குச் சென்றபோது, தான் சந்தித்த துயரங்கள் குறித்து பாட்டியிடமும் உறவினர் ஒருவரிடமும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சிறுமியை அம்பாலாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பாட்டி முறைப்பாடு அளித்துள்ளார். சிறுமி அளித்த…

  • இலங்கையில் அதிகரிக்கும் வெப்பநிலை – பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

    மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை, நாட்டின் பல மாவட்டங்களில் இன்று கவனத்திற்கொள்ள வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இந்த நிலைமை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த மாவட்டங்களில் மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை, சுமார் 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பமான காலநிலை காரணமாக…

  • நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம் தொடர்பில் தாயும் அவரது காதலனும் கைது

    கண்டி – வத்தேகம பகுதியில் நேற்று (13) நான்கு வயது சிறுமி கைவிடப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கைதான பெண் சிறுமியின் தாய் எனவும், ஆண் தாயின் காதலன் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

  • கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய இளைஞன், பெந்தோட்டை கடலில் மூழ்கி உயிரிழப்பு

    இந்தியாவின் பெங்களூரிலிருந்து விடுமுறையைக் கழிப்பதற்காக நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐந்து இந்திய இளைஞர்களில் ஒருவர், கடலில் மூழ்கிக் காணாமல்போயிருந்த நிலையில் அவரது உடலம் மீட்கப்பட்டுள்ளது. காலி – பெந்தோட்டை உள்ள சுற்றுலா விடுதிக்கு அருகில் கடலில் நீராடிக்கொண்டிருந்த குறித்த இளைஞன் கடல் அலையில் அள்ளுண்டுச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக விடுதி நிர்வாகத்தினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், பெந்தோட்டை காவல்துறையினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது இளைஞனின் உடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர்…