Category: இலங்கை செய்திகள்
-
இலங்கையில் மதுபானத்தால் ஏற்படும் பொருளியல் இழப்பு, வரி வருவாயை விட அதிகம்: ADIC சுட்டிக்காட்டு!
இலங்கையில் மதுபானத்தால் ஏற்படும் பொருளியல் இழப்பு, மது வரி வருவாயை விடவும் அதிகமாகும் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் (Alcohol & Drug Information Center – ADIC) தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி, சுங்கத் திணைக்களம், சுகாதார அமைச்சு மற்றும் சர்வதேச நிறுவனங்களான MOVENDI International, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம், உலக சுகாதார அமைப்பு ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வுகளின் அறிக்கை தரவுகளை மேற்கோள் காட்டி இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி,…
-
கல்கிசையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு
கல்கிசை, ஹுலுதாகொட வீதியிலுள்ள வாகன பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
-
செம்மணி மனித புதைகுழி: மேலும் 8 எலும்புக்கூடுகள் அடையாளம்
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை 56 நாட்களுக்கு முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், 53 ஆவது நாளான இன்றைய தினம் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 10 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், செம்மணியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 107 நாள் அகழ்வுப் பணிகளின் போது, மொத்தமாக 562 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 557 எலும்புக்கூடுகள் இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
-
கடற்கொள்ளையர் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி – அமைச்சர் உறுதி
அம்பாறை மாவட்ட கடற்றொழில் துறையில் நிலவும் சவால்களுக்கு விரைவான தீர்வு காண்பதுடன், ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளித்துள்ளார். நேற்று (14) நடைபெற்ற மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார். அம்பாறை மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (14) அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கள விக்ரமாராச்சியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு…
-
விபத்துக்குள்ளான படகில் இருந்த 11 பேர் மீட்பு
அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகில் இருந்த 11 பேர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா (Dora) படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, அந்தப் படகில் உள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடற்படையினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, குறித்த படகில் உள்ளவர்களை மீட்பதற்காக இலங்கை விமானப்படையின் உதவியும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, விபத்துக்குள்ளான படகைக் கண்காணிப்பதற்காக விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ.…
-
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை வழங்குமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை!
ஓகஸ்ட் 12ஆம் திகதி ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் தொகுக்கப்படாத முழுமையான வீடியோ பதிவை வழங்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி ஊடகப் பிரிவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஓகஸ்ட் 14ஆம் திகதியிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில், குறித்த கலந்துரையாடலின் வீடியோ பதிவின் ஒரு பகுதி மட்டுமே தற்போது தமக்குக் கிடைத்துள்ளதாகச் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. வழங்கப்பட்டுள்ள வீடியோவில் ஆரம்பக் கலந்துரையாடலின் ஒரு பகுதி மட்டுமே உள்ளதாகவும், சில பகுதிகளில் ஒலி தெளிவில்லாமல் இருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, கலந்துரையாடல் முழுவதும்…
-
பாட நூல்களை பழைய பொருட்கடைகளுக்கு விற்றவர் கைது
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் கிழக்கு மாகாண மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக வழங்கி வைக்கப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான பாடநூல்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பாடநூல் தொகுதியை ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி, அந்தப் புத்தகங்களை பழைய காகிதக் கடைக்காரர் ஒருவருக்கு விற்று 47,000 ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளதாக தலங்கம பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கிழக்கு மாகாண மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக வெளியிடப்பட்ட 19,892 பாடநூல்களை கொண்டு செல்வதற்காக கல்வி…
-
ஷிரான் பாசிக்கு 72 மணி நேர தடுப்புக் காவல்
போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ‘ஷிரான் பாசிக்’ என்பவரை 72 மணி நேர தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நேற்று (14) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதையடுத்து, அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
-
22வது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டம் அடுத்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் சரத்துகளை உள்ளடக்கிய முன்மொழியப்பட்ட 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், எதிர்வரும் ஆகஸ்ட் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். அதே நாளில் நீதித்துறை (திருத்த) சட்டமூலமும் (Judicature Amendment Bill) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் இந்தத் திருத்தத்திற்கு மூன்று நிகாயாக்களின் மகாநாயக்க தேரர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL), எதிர்க்கட்சிகள் மற்றும் சர்வதேச…
-
ஜனாதிபதி அநுரவின் சட்டத்தரணிகளுடனான சந்திப்பு
ஒரு தீர்மானத்தை எடுக்கும் போது ஒரு கூட்டமே ஒன்று திரண்டு தனக்கு எதிராக சதி செய்யுமானால் அந்த தீர்மானம், வாய்ப்பு கை நழுவி போகாமல் அதனை கெட்டியாக பிடித்து தனக்கு சாதகமாக எப்படி மாற்றிக் கொள்ளலாம் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துகாட்டு. நீதிபதிகளின் ஓய்வு வயதை இரண்டு ஆண்டுகள் உயர்த்துவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) கடுமையாக எதிர்த்தது. ஆனால் ஜனாதிபதி அநுரவோ இன்றைய சந்திப்பிக்கு பிறகு முழு Debate இன் frame யே மாற்றிவிட்டார் என்று…