Category: இந்திய செய்திகள்

  • பெயரால் வெறுப்பான பாக். வீரர்.. வாய்விட்டுச் சிரித்த பிரதமர் மோடி

    2026 காமன்வெல்த் போட்டியில் (Glasgow CWG 2026) ஆடவர் +90 கிலோ குத்துச்சண்டை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நரேந்தர் பெர்வால் (Narender Berwal), சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, அவரைச் சிரிக்கவைத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி மற்றும் ஒன்பது வெண்கலம் என 39 பதக்கங்களை வென்று 4ஆவது இடத்தைப் பிடித்தது. இதில், குத்துச்சண்டை வீரர்கள் மட்டும் 10…

  • ஜாமீன் பெற நீதிபதி படத்துடன் சுடுகாட்டில் மாந்திரீகம்.. சத்தீஸ்கரில் அதிர்ச்சி சம்பவம்!

    சத்தீஸ்கரில் உறவினருக்கு ஜாமீன் பெற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் புகைப்படத்துடன் சுடுகாட்டில் மாந்திரீகத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிலாஸ்பூர் அருகே தேவ்ரி கிராம சுடுகாட்டில் நள்ளிரவில் ​​சிலர் மாந்திரீகத்தில் ஈடுபட்டதை அறிந்த கிராமத்தினர் அவர்களிடம் விசாரித்தபோது தப்பி ஓடினர். பிடிபட்ட நபரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கத்திக்குத்து வழக்கில் கைது செய்யப்பட்ட தனது உறவினருக்கு ஜாமீன் பெற மாந்திரீகம் செய்ததாக கூறியுள்ளார். சுடுகாட்டில் எலுமிச்சம்பழம், குங்குமம் மற்றும்…

  • ஒரே வாரத்தில் 100 கோடி பார்வைகள்.. சாதனை படைத்த ’ராமாயணா’ ட்ரெய்லர்!

    நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடித்திருக்கும் ‘ராமாயணா: பகுதி 1’ படத்தின் பிரம்மாண்ட ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. ஏஆர் ரஹ்மான், ஹேன்ஸ் ஸிம்மர் இசையமைக்கும் இந்த இதிகாச படத்தில் சன்னி தியோல், ப்ரியாமணி, ரவி துபே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 2026 தீபாவளிக்கு வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. கடந்த ஜூலை 30ஆம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியானது. இந்த நிலையில்,…

  • நாட்டாமை குடும்பம்” பச்சை குத்தினால் என்னை நேரடியாகச் சந்திக்கலாம்: சரத்குமார்

    “நாட்டாமை குடும்பம்” (Nattamai family) என்று பச்சை (Tattoo) குத்திக் கொண்டால், அதைத் தன்னை நேரடியாகச் சந்திப்பதற்கான ‘கிரீன் கார்ட்’ ஆகப் பயன்படுத்தலாம் என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இந்தியாவின் சென்னை எழும்பூரில் நடைபெற்ற ஆதரவாளர்களின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது யாருக்கும் கட்டாயமில்லை என்றும், தனக்கும் இந்தப் பச்சையைக் குத்திக் கொள்ளும் விருப்பம் இருப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பான நிழற்படங்கள் வெளியாகி இணையவாசிகளிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

  • திருட்டுக்கு பயந்து புதைத்த ரூ.5 இலட்சம் பணத்தை அரித்த கறையான்கள்!

    ராஜஸ்தான் மாநிலத்தில், திருட்டுக்கு பயந்து நிலத்தில் புதைத்து வைத்திருந்த இந்திய மதிப்பில் ரூ.5 இலட்சம் பணத்தை கறையான்கள் அரித்துச் சேதப்படுத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட விவசாயி, சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு தனது நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த ரூ.5 இலட்சம் பணத்தை, திருடர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக பொலித்தீன் பையில் வைத்து நிலத்தில் புதைத்துள்ளார். எனினும், காலப்போக்கில் பணத்தைப் புதைத்து வைத்திருந்த சரியான இடத்தை அவர் மறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அண்மையில் அந்த நிலத்தை உழுதபோது, புதைத்து…

  • இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் பயணித்த சிற்றூந்து விபத்து

    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் பயணித்த சிற்றூந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏ.ஆர்.அமீன், தனது நண்பருடன் சிற்றூந்தில் பயணித்தபோது, எதிரே வந்த மற்றொரு சிற்றூந்து மோதியதில் இந்த விபத்து நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் அனைவரும் சிறிய காயங்களுடன் தப்பியதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தவிபத்து குறித்து மாநிலப் போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • டேட்டிங் செயலியில் ஆசைகாட்டி ரூ.6 கோடி சுருட்டிய பெண்

    உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த பல்லவி சிங் ராஜ்புத் என்ற பெண், செல்போன் டேட்டிங் செயலிகள் மூலம் பல ஆண்களிடம் பழகி, ரூ.6 கோடிக்கும் மேல் பிளாக்மெயில் செய்து பணம் பறித்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டேட்டிங் செயலிகள் மூலம் ஆண்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொள்ளும் பல்லவி சிங், அவர்களுக்குத் தனது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்புவார். பின்னர் நேரில் சந்தித்து அந்தரங்கமாகப் படங்கள் எடுத்து, அவற்றைக் காட்டி மிரட்டி பணம் பறித்து…

  • கொண்டைக்கடலைக்கு தெளிக்கப்பட்ட பூச்சி கொல்லி வாயுவை சுவாசித்த இரு சிறுமிகள் உயிரிழப்பு

    இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில், பூச்சி கொல்லி தெளிக்கப்பட்ட கொண்டைக்கடலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவைச் சுவாசித்த இரு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. விவசாயியான மல்லேஷ், அறுவடை செய்து வீட்டிற்குள் வைத்திருந்த கொண்டைக்கடலையில் பூச்சிகள் வராமல் இருப்பதற்காகப் பகல் நேரத்தில் பூச்சி கொல்லி தெளித்துள்ளார். அன்று இரவு, வீட்டின் அறைக்குள் காற்று புக முடியாத சூழலில் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தபோது, கொண்டைக்கடலையில் தெளிக்கப்பட்ட பூச்சி கொல்லியிலிருந்து நச்சு வாயு மெதுவாக வெளியேறியுள்ளது. அறையிலிருந்த நச்சு வாயுவை…

  • மிக நீண்ட கூந்தல்: கின்னஸ் சாதனை படைத்த இந்திய பெண்!

    பொதுவாக இந்திய பெண்கள் தலைமுடியை நீளமாக வளர்ப்பதிலும், உடல் அழகை பேணுவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பல பெண்கள் வேலைக்கு சென்றாலும், தலைமுடியை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். பொதுவாக, ஒருவர் 6 அடி உயரம் வரை வளர்வார்கள். ஆனால், அதையும் தாண்டி தலைமுடியை வளர்த்து இந்திய பெண் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ரேணு தரியல் என்ற அந்தப் பெண் தனது தலைமுடியை 8 அடி 10 அங்குலம் (271.50…

  • அருணாச்சலப் பிரதேசத்தின் 27 முக்கிய இடங்கள் இந்திய வரைபடத்தில் பதிவு!

    அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்குப் பெயர் மாற்றம் செய்ய சீனா தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில், ‘சர்வே ஆஃப் இந்தியா வின் (Survey of India) அதிகாரப்பூர்வ வரைபடத்தில் அருணாச்சலப் பிரதேசத்தின் 27 இடங்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன . இதுகுறித்து உள்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், ‘ அருணாச்சலப் பிரதேச மாநில அரசுடன் கலந்தாலோசித்து, இந்திய அரசு, ‘சர்வே ஆஃப் இந்தியா’வின் அதிகாரப்பூர்வ வரைபடங்களில் அம்மாநிலத்தில் அமைந்துள்ள 27 இடங்கள் மற்றும் புவியியல் விவரங்கள் பதிவு…