Category: இந்திய செய்திகள்

  • திருவண்ணாமலை கோயிலில் அமித் ஷா தரிசனம்: வரவேற்கக் காத்திருந்த நித்தியானந்தா சீடர்கள் வெளியேற்றம்

    தமிழக அரசியலில் பல்வேறு பரபரப்பான சுழற்சிகள் நிலவி வரும் சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரு நாள் பயணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வந்துள்ளார். மகாராஷ்டிராவில் தனது அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட அமித் ஷா, இந்திய விமானப்படைக்குச் சொந்தமான தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்குக் கட்சி பாகுபாடின்றி பல முக்கிய அரசியல் தலைவர்கள் நேரில் சென்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, பாஜக…

  • அல்காரிதம் குறைபாடு.. மெட்டாவுக்கு ஒன்றிய அரசு உத்தரவு!

    ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் நடைபெற்ற தொழில்நுட்பக் கூட்டத்தில், தனது அல்காரிதம் அமைப்பில் குறைபாடுகள் இருப்பதை மெட்டா நிறுவனம் ஒப்புக்கொண்டது. இந்தியாவில் செயல்படும் அனைத்து டிஜிட்டல் தளங்களும் இந்திய சட்டங்களுக்கு முழுமையாக இணங்க வேண்டும் என வலியுறுத்திய மத்திய அரசு, குறைபாடுகளைச் சரிசெய்ய விரிவான செயல் திட்டத்தை சமர்ப்பிக்குமாறும் மெட்டாவுக்கு உத்தரவிட்டுள்ளது.

  • விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் சங்கீதா

    தமிழக முதல்-அமைச்சரும், தனது கணவருமான விஜய்யிடம் விவாகரத்து கோரி தாக்கல் செய்திருந்த மனுவை சங்கீதா வாபஸ் பெற்றுள்ளார். லண்டனில் இருந்து இணையவழி மூலம் செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் ஆஜரான அவர், வழக்கை தொடர விருப்பமில்லை என்று தெரிவித்ததை தொடர்ந்து, நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. விவாகரத்து வழக்கின் பின்னணி விஜய் மற்றும் சங்கீதாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.…

  • 2021 முதல் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ரூ.557 கோடி செலவு: வெளியுறவுத் துறை தகவல்

    2021-ஆம் ஆண்டிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்காக அரசு கருவூலத்திலிருந்து குறைந்தபட்சம் ரூ.557.51 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சகம் (MEA) சமர்ப்பித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவை உறுப்பினர்களான சஞ்சய் சிங் மற்றும் டாக்டர் வி. சிவவாசன் ஆகியோர் எழுப்பிய வினாவுக்கு வெளியுறவு அமைச்சகம் இந்த எழுத்துப்பூர்வ பதிலை வழங்கியுள்ளது. பிரதமரின் வெளிநாட்டுப் பயண விவரங்கள், ஒவ்வொரு பயணத்திற்கும் ஆன செலவுத் தொகை, இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் முதலீட்டு உறுதிமொழிகள் பற்றிய தகவல்கள் இதில் கோரப்பட்டிருந்தன. இந்த…

  • குஜராத்தில் அசையும் கிணறு

    இந்தியாவின் குஜராத்தில் கிணறு ஒன்றில் தொடர்ந்து நீர் பயங்கரமாக அசைந்துகொண்டிருக்கும் விடயம் ஏராளமானோரின் கவனத்தை ஈர்த்துவருகிறது. இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள வீரபத்ரா கிராமத்தில், மூன்று மாதங்களுக்கு முன், தன் நிலத்தில் பிரம்மாண்ட கிணறு ஒன்றைத் தோண்டியுள்ளார் ப்ரன் ஜீவன் சதாரியா என்னும் விவசாயி. இம்மாதம், அதாவது, ஆகத்து மாதம் 2ஆம் திகதி, கிணற்றுக்குச் சென்ற சதாரியா, வித்தியாசமான காட்சி ஒன்றைக் கண்டுள்ளார். வாளியை அசைக்கும்போது அதிலுள்ள தண்ணீர் அசைவதைப் போல, அந்தக் கிணற்றிலுள்ள நீர் பயங்கரமாக அசைந்துகொண்டே…

  • விஜய் – சங்கீதா வழக்கில் பரபரப்பு: தொடர்பில்லாத நபர்கள் வெளியேற்றம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

    தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்பான விசாரணையை இன்று பிற்பகல் எடுத்துக்கொள்ள செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமன்ற அமர்வு நடைபெற்று வருவதைச் சுட்டிக்காட்டிய விஜய் தரப்பு, வழக்கின் விசாரணையை வேறு ஒரு திகதிக்கு ஒத்திவைக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. எனினும், சங்கீதா காணொளி அழைப்பு ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலையானார். வழக்கின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, வழக்குடன் தொடர்பில்லாத நபர்கள் அனைவரும் நீதிமன்ற அறையிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர்…

  • அருணாசல பிரதேசத்தில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்

    இந்தியாவின் மாநிலமான அருணாசல பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்தில் நேற்று காலை(05.08.2026) 5.45 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி இருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து சுமார் 11 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிச்டர் 5.1 அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்திற்கு முன்பாக, …

  • தமிழக முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு: நாளை மீண்டும் விசாரணை

    தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மனைவி சங்கீதா தாக்கல் செய்துள்ள விவாகரத்து மற்றும் குடியிருப்பு உரிமை தொடர்பான வழக்கு, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நாளை (07) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தனிப்பட்ட காரணங்களால் இருவரும் தனித்தனியாக வசித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சங்கீதா, செங்கல்பட்டு…

  • தாய்மொழி தெரியாது என கூறுவது அவமானம்.. தமிழ் படியுங்கள்.. தனுஷ் பேச்சு..

    சென்னையில் உள்ள தான் படித்த ‘தாய் சத்யா மெட்ரிகுலேஷன்’ பள்ளியின் புதிய கட்டிடத் திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் தனுஷ், தாய்மொழி குறித்துப் பேசியது தமிழகத்தில் மீண்டும் மொழி விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், “நான் படித்த காலத்தில் எனக்குச் சரியாக ஆங்கிலம் பேச வராது. ஆனால் தமிழ் நன்றாகத் தெரியும். இப்போதோ நான் சந்திக்கும் 10 பேரில் 8 பேருக்குத் தமிழைப் படிக்கவோ எழுதவோ தெரியவில்லை. தாய்மொழி தெரியாது என்பதை பெருமையாகச் சொல்வது…

  • வீட்டு கனவுக்கு வித்திட்டது தமிழக அரசு – பாதீட்டில் மாபெரும் திட்டம் அறிவிப்பு

    தமிழ்நாடு அரசின் 2026–2027ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் , பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான வீடுகளை வழங்கும் நோக்கில் “அனைவருக்கும் தரமான வீடு” திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக 1,253 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் மூலம், 24,313 அடுக்குமாடி குடியிருப்புகள் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினரின் நலனைக் கருத்தில் கொண்டு, 14,194 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…