Category: இந்திய செய்திகள்
-
சென்னை விமான நிலையத்தில் இயந்திர கோளாறால் இண்டிகோ விமானம் அவசர தரையிறக்கம்
கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு 222 பயணிகள், 7 விமான ஊழியர்கள் என 229 பேருடன் இண்டிகோ நிறுவனத்தின் 6இ-723 விமானம் வந்து கொண்டிருந்தது. விமானம் தரையிறக்க விமானி தயாரானபோது இடதுபுற என்ஜின் செயலிழந்திருப்பதை கண்டறிந்தார். அதனால் விமானத்தை தொடர்ந்து வானிலேயே வட்டமடிக்க முடிவு செய்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். விமானம் உடனடியாக தரை இறங்கவும் அனுமதி வழங்கப்பட்டது.…
-
இந்தியாவில் லஞ்சம் கொடுத்த விவகாரம் அதானிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: அமெரிக்க நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சோலார் மின்சக்தி திட்டத்திற்கு ஒப்புதல் பெற இந்திய அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,000 கோடி லஞ்சம் கொடுக்க ஒப்புக் கொண்டதாகவும், அதை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்களிடம் நிதி திரட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 2024ம் ஆண்டு நவம்பரில் குஜராத் தொழிலதிபர் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என அதானி குழுமம் மறுத்து வந்தது. இதற்கிடையே, அமெரிக்காவில் அதானி குழுமம் 10 பில்லியன் டாலர் முதலீடு…
-
அசாம் வெள்ளம்: வாழை மரப் படகில் தப்பிய 97 வயது மூதாட்டி
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது, நடக்க முடியாத நிலையில் இருந்த 97 வயது மூதாட்டி ஒருவர் வாழை மரக் கட்டைகளால் ஆன தற்காலிகப் படகில் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாமின் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள சரிங் கிராமத்தில் வெள்ள நீர் வேகமாகப் புகுந்தது. ஜூலை 19 நள்ளிரவில், 97 வயதான லோகதா துவாரா (Lokada Duarah) என்ற மூதாட்டியை அவரது மகனும் மருமகள் பொர்னாலி பாருவாவும் வாழை மரக் கட்டைகளால் படகு…
-
பெங்களூரு நட்சத்திர ஹோட்டலில் சடலமாக மீட்கப்பட்ட 2 சிறுமிகள்: தந்தை எடுத்த விபரீத முடிவு
பெங்களூருவில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் 2 குழந்தைகளை கொன்று விட்டு தந்தை தானும் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு நகரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் அறையில் இரண்டு சிறுமிகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதே அறையில் அந்த குழந்தைகளின் தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கொலை மற்றும் தன் உயிரை தானே மாய்த்துக் கொள்ளும் முயற்சியாக இருக்கலாம் என்று காவல்துறையினர்…
-
வெளியே வந்தால் உடல் எரியும் – மீன்களை போல் குளத்தில் வாழும் சிறுவன்
இளைஞர் ஒருவர் வெளியே வந்தால் உடல் எரியும் என்பதால் ஆண்டு கணக்கில் குளத்தின் உள்ளே வசித்து வருகிறார். மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பெல்டங்கா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த 16 வயது இளைஞர் இக்பால் ஷேக். இந்த இளைஞர் கிட்டதட்ட சில ஆண்டுகளாக தனது பெரும்பாலான நேரங்களில் அங்குள்ள குளத்திலே வசித்து வருகிறார். குளத்திலிருந்து வெளியே வந்தால் அவரது உடலில் கடும் எரிச்சல் ஏற்படுவதாகவும், குளத்தின் உள்ளே சென்றால் எரிச்சல் தணிவதாகவும் தெரிவித்துள்ளார்.…
-
இந்தியா – பாகிஸ்தான் பொருளாதாரம் 25 பைசாவும் 500 ரூபாயும் மாதிரி: ‘ஆபரேசன் சிந்தூர்’ புத்தகத்தை வெளியிட்ட அண்ணாமலை பேச்சு
கோவை பொள்ளாச்சி சாலை ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கல்லூரியில் சுதேசி மேளா நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் ‘வீ தி லீடர்ஸ்’ தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மேஜர் மதன்குமார் எழுதிய ‘ஆபரேசன் சிந்தூர்’ (Operation Sindoor) புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். நிகழ்வில் அண்ணாமலை பேசியதாவது: ”நாட்டுக்காக நமது இராணுவ வீரர்கள் எந்த அளவுக்கு தியாகங்களுடன் போராடுகிறார்கள் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, இந்த புத்தகத்தை அனைவரும் கட்டாயம் படிக்க…
-
கன்னட திரையுலக ரேணுகாசுவாமி மரண வழக்கில் பெரும் திருப்பம்!
கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரேணுகாசுவாமி மரண வழக்கில், 14-வது குற்றவாளியான பிரதோஷ் நீதிமன்றத்தில் மன்னிப்பு சாட்சியாக மாறுவதற்கும் சட்டப்பூர்வ மன்னிப்பு கோரியும் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் முதன்மை குற்றவாளியான பிரபல நடிகர் தர்ஷன் மற்றும் அவரது தோழி பவித்ரா கவுடா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதோஷ் தாக்கல் செய்துள்ள மனுவில் ரேணுகாசுவாமிக்கு நேர்ந்த கொடூரங்கள் மற்றும் மரணத்தை மறைக்க நடந்த சதித் திட்டங்கள் குறித்த புதிய…
-
பெயரால் வெறுப்பான பாக். வீரர்.. வாய்விட்டுச் சிரித்த பிரதமர் மோடி
2026 காமன்வெல்த் போட்டியில் (Glasgow CWG 2026) ஆடவர் +90 கிலோ குத்துச்சண்டை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற நரேந்தர் பெர்வால் (Narender Berwal), சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, அவரைச் சிரிக்கவைத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி மற்றும் ஒன்பது வெண்கலம் என 39 பதக்கங்களை வென்று 4ஆவது இடத்தைப் பிடித்தது. இதில், குத்துச்சண்டை வீரர்கள் மட்டும் 10…
-
ஜாமீன் பெற நீதிபதி படத்துடன் சுடுகாட்டில் மாந்திரீகம்.. சத்தீஸ்கரில் அதிர்ச்சி சம்பவம்!
சத்தீஸ்கரில் உறவினருக்கு ஜாமீன் பெற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் புகைப்படத்துடன் சுடுகாட்டில் மாந்திரீகத்தில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிலாஸ்பூர் அருகே தேவ்ரி கிராம சுடுகாட்டில் நள்ளிரவில் சிலர் மாந்திரீகத்தில் ஈடுபட்டதை அறிந்த கிராமத்தினர் அவர்களிடம் விசாரித்தபோது தப்பி ஓடினர். பிடிபட்ட நபரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், கத்திக்குத்து வழக்கில் கைது செய்யப்பட்ட தனது உறவினருக்கு ஜாமீன் பெற மாந்திரீகம் செய்ததாக கூறியுள்ளார். சுடுகாட்டில் எலுமிச்சம்பழம், குங்குமம் மற்றும்…
-
ஒரே வாரத்தில் 100 கோடி பார்வைகள்.. சாதனை படைத்த ’ராமாயணா’ ட்ரெய்லர்!
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடித்திருக்கும் ‘ராமாயணா: பகுதி 1’ படத்தின் பிரம்மாண்ட ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. ஏஆர் ரஹ்மான், ஹேன்ஸ் ஸிம்மர் இசையமைக்கும் இந்த இதிகாச படத்தில் சன்னி தியோல், ப்ரியாமணி, ரவி துபே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 2026 தீபாவளிக்கு வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. கடந்த ஜூலை 30ஆம் தேதி அதிகாலை 4.15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியானது. இந்த நிலையில்,…