Category: இந்திய செய்திகள்

  • கொத்துக்கொத்தாக இறந்து மிதக்கும் மீன்கள்

    சென்னை எண்ணூர் கழிமுகம் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் இறந்து மிதப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலவகையான மீன்கள், இறால்கள் மற்றும் நண்டுகள் கொத்துக்கொத்தாக உயிரிழந்து நீரில் மிதப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் உயிரிழப்பால் அப்பகுதி கடற்றொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதுடன், கடல் மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர். தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் இரசாயனக் கழிவுகள் நீரில் கலந்ததே மீன்கள் உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் உயிரிழந்ததற்கு காரணமாக இருக்கலாம் என அப்பகுதி…

  • கஷ்டப்பட்டு ஆடினேன்” கருப்பு படத்தில் காட்சிகள் நீக்கம் – மன்சூர் அலிகான் ஆவேசம்!!

    ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்ய நடித்து கடந்த மே மாதம் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ’கருப்பு’. இந்த திரைப்படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் நடித்திருந்த நிலையில், அவர் நடித்த பல காட்சிகள் நீக்கப்பட்டதாகவும், யூடியூபில் வெளியிடுவதாக கூறி வெளியிடவில்லை எனவும் தற்போது குற்றஞ்சாட்டியிருக்கிறார். கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி சென்னை வடபழனி பிரசாத் லேபில் தர்ஷன் ஜெயபிரகாஷ் மற்றும் பிக்பாஸ் ஜனனி ஆகியோர் நடத்துள்ள “ஆல் பாஸ்” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு மற்றும்…

  • பூமிக்கு அடியில் இருந்து சீறிப்பாய்ந்த தீ.. ஜார்கண்டில் அதிர்ச்சி!!

    ஜார்க்கண்ட் மாநிலம் போகாரோ மாவட்டம், கோமியா ஒன்றியத்தில் பந்த் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் திறந்த வெளிப்பகுதியில் நேற்று, தரைக்கு அடியில் இருந்து கொதிக்கும் நீர்க்குமிழிகளுடன் திடீரென தீப்பிழம்புகள் வெளியேறத் தொடங்கின. மழை பெய்து கொண்டிருந்த நிலையிலும், நிலத்தில் தேங்கியிருந்த நீரில் குமிழ்கள் தோன்றி, தொடர்ந்து தீப்பிடித்து எரிந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சிய ஏற்படுத்தியிருந்தது. இதற்கு காரணமாக, இப்பகுதியில் நிலத்தடி மீத்தேன் வாயு அதிக அளவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், கோமியா பகுதியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின்…

  • மான் வேட்டையில் ஈடுபட்டதாக 3 தமிழர்களை சுட்டுக் கொன்ற கர்நாடக வனத்துறை

    கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜநகர் மாவட்டத்தில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் வேட்டையில் ஈடுபட்டதாகவும் அவர்கள் ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி  தெரிவித்தார். இதில், வனத்துறை அதிகாரி ஒருவர் படுகாயமடைந்ததாகவும் கர்நாடக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாஜிஸ்டிரேட் விசாரணைக்கு கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

  • 2047இல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் – பிரதமர் மோடி

    இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுடில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 2047ஆம் ஆண்டில் இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்கும் என தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி முதலில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செங்கோட்டைக்கு சென்ற அவரை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து பிரதமருக்கு பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.…

  • முதல்வர் விஜய்யின் முதல் கொடியேற்ற விழா – த்ரிஷா பங்கேற்பு

    சென்னை புனித ஜொர்ஜ் கோட்டையில் தமிழக முதல்வர் விஜய் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றிய சுதந்திர தின விழாவில், அவரது பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழகத்தில் த.வெ.க. அரசு அமைந்த பின்னர் நடைபெற்ற முதல் சுதந்திர தின விழா இன்று (15) நடைபெற்றுள்ளது. விழாவில் பங்கேற்பதற்காக நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட முதல்வர் விஜய், மெரீனா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகிலிருந்து காவல்துறையின் மோட்டார்…

  • செங்கோட்டையில் 13ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி

    இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டில்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (15) 13ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், டில்லி செங்கோட்டையில் நடைபெற்ற பிரதான விழாவில் மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் பங்கேற்க செங்கோட்டைக்கு வந்த பிரதமர் மோடிக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.…

  • முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றினார் தமிழக முதல்வர் விஜய்

    இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை புனித ஜொர்ஜ் கோட்டையில் தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் இன்று (15) காலை 8.45 மணியளவில் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. கூட்டணி ஆட்சி அமைத்து மூன்று மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், நாட்டின் 80ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட முதல்வர் விஜய், மெரீனா கடற்கரையில் உள்ள…

  • அந்த உணர்வு வந்தால் அந்த இடத்திலேயே நிற்க மாட்டேன் – திறந்த மனதுடன் பதிலளித்த அனிருத்!

    தமிழ் சினிமாவில் பல வெற்றிப் பாடல்களை வழங்கி முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், தமிழில் மட்டுமின்றி, இந்தியத் திரையுலகிலும் பிரபலமான இசையமைப்பாளராகத் திகழ்ந்து வருகிறார். தற்போது ஷாருக்கானின் ‘கிங்’, ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’, ‘தர்மன்’, அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம், நானியின் ‘தி பாரடைஸ்’, ‘AK 64’ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவரிடம், திரைப்படப் பணிகளில் எப்போதாவது…

  • வெளிநாட்டு அரிய வகை குரங்கு விவகாரம்: நடிகர் விக்ரமிடம் ஆவணங்களை கோரியது வனத்துறை!

    தென்னிந்திய திரைப்பட நடிகர் விக்ரம், அரிய வகை விலங்கான ‘லார் கிப்பன்’ (Lar Gibbon) குரங்குடன் கொஞ்சி விளையாடும் காணொளி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது தேசிய அளவில் பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விக்ரம் லார் கிப்பன் வகை குரங்குடன் விளையாடும் காணொளியை திங்கட்கிழமை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இது இணையத்தில் பரவியதை அடுத்து எழுந்த எதிர்ப்பையடுத்து, சில மணி நேரங்களிலேயே அந்த காணொளி அவரது கணக்கிலிருந்து நீக்கப்பட்டது. இந்த…