Category: இந்திய செய்திகள்
-
கிறிஸ்டோபர் நோலன் படத்திற்கு இசையமைக்க வேண்டும்! – சாய் அபயங்கர்
சினிமா இசை மற்றும் இன்டி இசை இரண்டிலும் அசத்தி வருபவர் சாய் அபயங்கர். அடுத்தாக தனுஷ் நடிக்கும் ஓம், அல்லு அர்ஜுனின் `ராக்கா’, கார்த்தியின் மார்ஷல், சூர்யாவின் 48வது படம் என பல படங்களில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவர் கலந்து கொண்ட ஒரு உரையாடலின் போது யாருடைய படத்தில் பணியாற்ற ஆசை என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன சாய் “2024ல் என் முதல் பாடல் வெளியான போது நான் இதனை நினைத்துக் கூட…
-
மோகன்லால் படப்பிடிப்புக்கு அனுமதி மறுத்த நீதிமன்றம்.. சபரிமலையில் படம்பிடிக்கத் தடை!
மோகன்லாலில் 366வது திரைப்படமாக உருவாகிவரும் படம் ‘அதிமனோஹரம்’. இப்படத்தை ரதீஷ் ரவி எழுதி, தருண் மூர்த்தி இயக்குகிறார். இப்படத்தில் மோகன்லால் சப் இன்ஸ்பெக்டர் டிஎஸ் லவ்லாஜனாக நடிக்கிறார், மீரா ஜாஸ்மின் நைசியாக நடித்துள்ளார். இதன் திரையரங்கு வெளியீட்டை 2026 டிசம்பர் 24 அன்று படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தசூழலில் இப்படத்திற்காக பம்பா மற்றும் நிலக்கலில் படப்பிடிப்பு நடத்துவதற்குத் தயாரிப்பு நிறுவனம் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்திடம் அனுமதி பெற்றிருந்தது. இருப்பினும், வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த அந்தக்…
-
கொல்கத்தாவில் தீ விபத்து – ஒரு குழந்தை உட்பட 9 பேர் உயிரிழப்பு
கொல்கத்தாவில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள மிர்சா காலிப் தெருவில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி ஒரு குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் பங்களாதேஷ் நாட்டினர் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருகை…
-
16 வயதில் CA பட்டம் பெற்று கின்னஸ் சாதனை படைத்த தமிழ் வம்சாவளி
தமிழ் வம்சாவளியான லக்ஷ்மணன் மெய்யப்பன் 16 வயதில் CA பட்டம் பெற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்தியாவை சேர்ந்த தமிழ் வம்சாவளியான லக்ஷ்மணன் மெய்யப்பன்(lakshmanan meyyappan) என்பவர் தனது குடும்பத்துடன் துபாயில் வசித்து வருகிறார். தனது 10 ஆம் வகுப்பு பள்ளி விடுமுறையின் போது, ஏசிசிஏ பட்டம் பெற்ற அவரது தாயார், அடிப்படை கணக்கியல் கருத்துக்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் மூலம், கணக்கியல் மீது ஆர்வம் கொண்ட உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கணக்கியல் சான்றிதழான ACCA தகுதியைப் பெற முடிவு…
-
India Model-ஐ follow செய்யும் டிரம்ப்!
அமெரிக்காவில் தேர்தலின்போது வாக்காளர் அடையாள அட்டையை கட்டாயமாக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் தேர்தல் முறையை உதாரணமாக சுட்டிக்காட்டியுள்ளார். தனது ‘Truth Social’ பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், அமெரிக்காவில் செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டை இல்லாமலேயே தேர்தல் நடத்தப்படுவது குறித்து அமெரிக்க நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியதாகக் குறிப்பிட்டார். மேலும், தேர்தல் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் அமெரிக்காவில் அனைத்து வாக்காளர்களுக்கும் கட்டாய…
-
நாசா வரை எதிரொலித்த ‘முதலமைச்சர் விஜய்யின் கை சைகை’
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் சிறப்பு விழா நடைபெற்றது. இதில் நாசா (NASA) விண்வெளி நிலையத்தின் பிரபல விஞ்ஞானி மருத்துவர் டோன் தோமஸ் கலந்துகொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வின் போது, நாசா விண்வெளி நிலையத்தின் சென்னை கிளை பிரதம நிறைவேற்று அதிகாரி காயம்பு இராமலிங்கம், தமிழக முதல்வர் விஜய் குறித்து மருத்துவர் டோன் தோமஸிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த மருத்துவர் டோன் தோமஸ், தான் தமிழக முதல்வர் விஜய்யின்…
-
தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய அறிவிப்பு
கூட்டுறவு வங்கிகளில் ரூ 75,000 ரூபாய் வரையிலான விவசாயிகளின் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாகவும், ஒரு லட்சம் வரை பயிர் கடன் பெற்றவர்களுக்கு 75,000 ரூபாய் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருக்கிறார். தமிழக சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை தொடர்பான கூட்டத்தொடர் நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் நடைபெற்றது. இதில் பேரவை விதி எண் 110 கீழ் தமிழக முதலமைச்சர் விஜய் பயிர் கடன் தள்ளுபடி குறித்து தெரிவித்ததாவது, ”மக்கள்…
-
மறைமுக விளம்பரங்களில் நடிப்பதை நிறுத்துமாறு ஷாருக் கான் உள்ளிட்ட பொலிவூட் பிரபலங்களுக்கு மஹாராஷ்டிர அரசு எச்சரிக்கை!
தடைசெய்யப்பட்ட பாக்கு (Pan Masala) உற்பத்தி நிறுவனங்களின் மறைமுக விளம்பரங்களில் நடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என முன்னணி பொலிவூட் நடிகர்களான ஷாருக் கான், அஜய் தேவ்கன் மற்றும் டைகர் ஷெரொஃப் ஆகியோருக்கு, மஹாராஷ்டிர மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பிட்ட நடிகர்கள் ‘விமல்’ (Vimal) நிறுவனத்தின் ஏலக்காய் தயாரிப்பை விளம்பரப்படுத்துவது போல் நடித்திருந்தாலும், அந்த வர்த்தகநாமம் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பாக்கு தயாரிப்புகளுக்கே பெரிதும் அடையாளப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 3.50 விலையில் விற்பனை செய்யப்படும் இந்த பாக்குகள்…
-
“உங்கள் தலைவரின் பெயரைக் குறிப்பிட்டது தவறுதான்”: சட்டப்பேரவையில் மன்னிப்பு கோரிய முதலமைச்சர் விஜய்!
தமிழ்நாடு சட்டமன்றம் சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் விவாதமாக மாறி வருகின்றது. இந்தநிலையில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமாரின் சார்பாக அவையில் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளமை அனைவரிடமும் கவனத்தை ஈர்த்துள்ளது. சட்டப்பேரவையில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் பேசும்போது முன்னாள் முதல்வர் என்று குறிப்பிடாமல் கருணாநிதியின் பெயரைக் கூறினார். அவர் பேசுகையில், “திருமங்கலம் பார்முலா முதல் 2026 வரை ஓட்டுக்கு பணம் கொடுக்கும் திட்டம் வரை கருணாநிதி, முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி…
-
இந்தியாவில் சோகம்: பீஹார் அசோக்தாம் கோவிலில் கூட்ட நெரிசல்; 07 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் பீஹார் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அசோக்தாம் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 07 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திங்கட்கிழமையான இன்று (17) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. புனித ஸ்ராவன் மாதத்தில் மூன்றாம் திங்கட்கிழமை என்பதால் அசோக்தாம் சிவன் கோவிலில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டுக்காகத் திரண்டிருந்துள்ளனர். இதன்போது, மின்சார வயர் ஒன்று திடீரென அறுந்து விழுந்து மக்கள் நாலாபுறமும் அலறி ஓடியதால் ஏற்பட்ட கடும் கூட்ட…