Author: Yalarasan

  • புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள முக்கிய முடிவு

    அண்மையில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வினாத்தாள்கள் தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு இறுதி தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது. இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் போது முன்கூட்டியே பகிரப்பட்டதாகக் கூறப்படும் வினாத்தாளில், சம்பந்தப்பட்ட மூன்று கேள்விகளுக்கு மாத்திரம் , அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்க நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பரீட்சையை மீண்டும் நடத்துவது 10 வயதேயான பிள்ளைகளின் மன நிலையில்…

  • நீதிக்காகவும் மக்களின் நல்வாழ்வுக்காகவும் துணிந்து குரல் கொடுத்தவர் குமார வெல்கம: ரிஷாட் பதியுதீன்

    நீதிக்காகவும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் என்றும் துணிந்து குரல் கொடுத்த ஒரு அரசியல்வாதி குமார வெல்கம என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் குமார வெல்கமவின் இழப்பு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். குமார வெல்கம மேலும் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது, “இலங்கை அரசியலில் துணிந்து, கருத்துக்களால் எதனையும் எதிர்கொள்ளக்கூடிய அரசியல்வாதியான குமார வெல்கமவின் இழப்பு குறித்து எனது ஆழ்ந்த அனுதாபத்தினை…

  • கனடாவில் ஆசிரியர் ஒருவரின் தகாத செயல்!

    கனடாவின் யோர்க் பிராந்தியத்தில் ஆசிரியர் ஒருவர் தகாத செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 22 ஆண்டுகளாக உயர்நிலைப் பள்ளிகளில் ஆசிரியராக கடமையாற்றி வரும் 47 வயதான ஆசிரியர் ஒருவரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். பதின்ம வயதுடைய மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 5ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எந்த பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றது என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை. எவ்வாறு எனினும் டொரண்டோவை…

  • உடன் நடைமுறைக்கு வரும் வகையில் யுக்திய கடமைகளில் இருந்து விடுவிக்கப்படும் பொலிஸார்

    யுக்திய நடவடிக்கைகளுக்காக விசேட கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிசார் அனைவரையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கடமைகளில் இருந்து விடுவிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார். மேலும், யுக்திய விசேட நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை அவதானித்து, அவற்றை சரிசெய்து, சட்டத்தின் மூலம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக பொலிஸார் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், ஏனைய பணிகளில் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளை வழிநடத்துவதன்…

  • அனைத்து பாடசாலைகளுக்குமான சுற்றறிக்கை வௌியானது

    பாடசாலைகளில் நடத்தப்படும் பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோரிடம் பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் தெரிவிக்கும் வகையில், கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர சுற்றறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். உலக சிறுவர் தினம், ஆசிரியர் தினம் போன்ற பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோரிடம் பணம் வசூலிப்பது தொடர்பாக அமைச்சுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறான சம்பவங்களினால் பெற்றோர்களும் மாணவர்களும் பாதிக்கப்படுவதுடன் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக…

  • புதிய அரசாங்கம் மீது முன்வைக்கப்பட்டுள்ள பகிரங்க குற்றச்சாட்டு ஜோசப் ஸ்டாலின்

    ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் திறமை இல்லாதவர்களுக்கு பதவி வழங்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு வாக்களித்த ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவதற்கு தயங்க போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் அமைச்சு செயலாளர்களை நியமிக்கும் போது திறமையற்றவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். குறிப்பாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட…

  • ஜனாதிபதியால் புதிய ஆளுநர்கள் நியமனம்

    ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் புதிய அளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி வட மாகாண ஆளுநராக யாழ் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய மாகாண ஆளுநராக பேராதனைப் பல்கலைக்கழத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சரத் ​​அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளார். சப்ரகமுவ மாகாண ஆளுநராக சம்பா ஜானகி நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் தென் மாகாண ஆளுநராக முன்னாள் மூத்த நிர்வாக அதிகாரி பந்துல ஹரிச்சந்திர நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்…

  • ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரை!

    ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (25) நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இந்த விசேட உரையானது நாளை இரவு 7.30 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

  • கனடா அமைச்சரவையில் இடம்பிடித்த இரு தமிழர்கள்!

    கனடா அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இரு தமிழர்கள் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளனர். அந்தவகையில் , போக்குவரத்து துறை அமைச்சராக அனிதா ஆனந்தும் , போக்குவரத்து துணை அமைச்சராக அருண் தங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் நாயகத்தின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் அனிதா ஆனந்த் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ளார். அதேவேளை அமைச்சரவையில் இருந்து போக்குவரத்து அமைச்சர் Pablo Rodriguez விலகிய நிலையில் புதிய அமைச்சராக அனிதா ஆனந்த் பதவியேற்றுள்ளார். திறைசேரி வாரியத் தலைவராக இருந்த அனிதா ஆனந்திற்கு போக்குவரத்து அமைச்சு…

  • 65 கோடி மோசடியில் நடக்கப்போகும் அதிரடி கைது

    65 கோடி மோசடியில் நடக்கப்போகும் அதிரடி கைது அநுரவின் புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில் ஊழல் தொடர்பான கைது நடவடிக்கைகளை மத்திய வங்கி விடயத்தில் இருந்து ஆரம்பிக்க போகின்றாரா அல்லது மகிந்தவில் இருந்து ஆரம்பிக்க போகின்றாரா என்பது தெரியவில்லை என புலனாய்வுச் செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்தார் ஊடக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஆனால், முன்னாள் ஜனாதிபதிகள் என்ற விடயத்தைக் கொண்டு ரணில், மகிந்த, கோட்டாபயவை தவிர்த்து அதற்கு அடுத்து…