Author: yalarasan canada
-

முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வவுனியாவில் விபத்தில் பலி !
முல்லைத்தீவில் இருந்து வவுனியா நோக்கிபயணித்துக்கொண்டிருந்த வைத்திய அதிகாரியின் வாகனம் ஓமந்தை பகுதியில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன் மோதியதில் விபத்து இடம்பெற்றது. விபத்தில் வைத்தியர் பயணித்த வாகனம் கடும் சேதமடைந்ததுடன் அதனைச்செலுத்திச்சென்ற வைத்தியர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்றிரவு 07 மணியளவில் மரணமடைந்தார். சம்பவத்தில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளரும் முன்னாள் வவுனியா வைத்தியசாலை பணிப்பாளருமான வைத்தியர் கு.அகிலேந்திரன்…
-

ஜனாதிபதி ரணிலின் பதவிக்காலம் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் – அனுர !
தேர்தல் நடத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலம் முடிவுக்கு வர வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். கனடாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய திஸாநாயக்க, நாட்டை தற்போதைய பாதையில் இருந்து விடுவிப்பதற்கான அரசியல் மாற்றத்தின் அவசியத்தை குறிப்பிட்டுள்ளார். கடந்த ஐந்து வருடங்களாக மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதோடு உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக தாமதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலை…
-

உயிர்த்த ஞாயிறை முன்னிட்டு தேவாலயங்களுக்கு விசேட அறிவித்தல் !
தேவாலயங்களுக்கு வரும் அடையாளம் தெரியாத நபர்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர். தவக்காலத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு கத்தோலிக்க தேவாலயங்களிலும் தற்பொழுது பல ஆராதனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு நடைபெறும் ஆராதனைகளில் பங்கேற்க வரும் புதியவர்கள் அல்லது அடையாளம் தெரியாதவர்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமானவர்கள் தொடர்பில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு தேவாலயங்களில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-

மீண்டும் தமிழ் இளைஞர்களை துரத்தும் சி.ஐ.டி !
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் அரச ஊழியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட தமிழ் இளைஞர்கள், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு தொடர்ச்சியாக அழைக்கப்படுவதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். வவுனியா, ஓமந்த பிரதேசத்தில் வசிக்கும் பெற்றோர், ஆறு வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டில் இருக்கும் தமது மகனை குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளமையால் அச்சமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டில் வசிக்கும் வவுனியா ஓமந்த பகுதியைச் சேர்ந்த…
-

கேப்பாப்புலவு இராணுவ முகாம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் !
முல்லைத்தீவு கேப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி இன்று கேப்பாப்புலவு இராணுவ படை தலைமையத்திற்கு முன்பாக கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ள நிலையிலே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த இராணுவ முகாமிற்கு இராணுவ தளபதி நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக வருகை தரவுள்ளதாகவும், முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ள நிலையிலே குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை விரைவில் விடுவிக்கக்கோரி அதிபருக்கும், முல்லைத்தீவு…
-

இஸ்ரேலை கைவிட்ட அமெரிக்கா !
ஐநாவில் போர் நிறுத்த தீர்மானத்துக்கான வாக்கெடுப்பில் அமெரிக்கா வாக்களிக்காமல் போனதை தொடர்ந்து அமெரிக்கா, இஸ்ரேலை கைவிட்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். உலக நாடுகள் பலவும் வலியுறுத்திவந்த நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் இருந்த போர் நிறுத்தத் தீர்மானம் நேற்றைய தினம் நிறைவேற்றப்பட்டது. அதில், அமெரிக்காவை தவிர யு.என்.எஸ்.சி-ல் மொத்தமுள்ள 15 நாடுகளில் 12 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்நிலையில், குறித்த வாக்கெடுப்பில், அமெரிக்கா தனது கொள்கையை நேற்று நடந்த ஐநா வாக்கெடுப்பின்போது கைவிட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
-

வீடொன்றில் நான்கு சடலங்கள் மீட்பு!
கனடாவில் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கனடாவின், சஸ்கற்றுவானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.தகவல் கிடைத்து அதிகாரிகள் சென்று பார்த்தவேளை நால்வர் இறந்து கிடந்தமை உறுதிப்படுத்தப்பட்டது. இந்த சடலங்கள் மீட்கப்பட்டமையால் பொதுமக்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் இருப்பதாக தாங்கள் நம்பவில்லை என்றும், அவ்வாறு தெரியவந்தால் பொது எச்சரிக்கையை வெளியிடுவோம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
-

காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் ; ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்
காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் அறிவிக்க இஸ்ரேலை வலியுறுத்தி ஐநா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அத்துடன் ஹமாஸ் தீவிரவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐ.நா.பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரஸ் எக்ஸ் பதிவில் , தீர்மானத்தை உடனடியாக அமல்படுத்தத் தவறினால் மன்னிக்க முடியாத குற்றமாகும் என தெரிவித்துள்ளார்.
-

மூன்றாண்டுகளுக்கு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் வீதி !
ரொறன்ரோவின் கார்டினர் அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து இவ்வாறு வரையறுக்கப்பட உள்ளது. நேற்று முதல் போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.மிகவும் பழமையான இந்த பாதை பழுதுபார்க்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மூன்றாண்டுகள் இந்தப் பாதை புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.கார்டினர் அதிவேக நெடுஞ்சாலையின் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-

கனடா வாழ் தமிழ்-முஸ்லிம் மக்கள் அனுரவிடம் விடுத்துள்ள கோரிக்கை !
நாட்டின் நெருக்கடி நிலைமைகளை தமிழ், முஸ்லிம் மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு, கனடா வாழ் தமிழ், முஸ்லிம் சமூகத்தினர், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமாரவிடம் கோரியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவிற்கு விஜயம் செய்துள்ள அனுரகுமார திஸாநாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் குறித்தும், அதற்கான தீர்வுத் திட்டங்கள் குறித்தும் இலங்கையின் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் போதியளவு தெளிவு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தெற்கில் போன்றே வடக்கிற்கு சென்று மக்களை தெளிவுபடுத்துமாறு தம்மிடம்…