Author: yalarasan canada

  • அதிகரித்து வரும் தட்டம்மை நோய்!

    அதிகரித்து வரும் தட்டம்மை நோய்!

    தட்டம்மை நோய்த் தொற்று பரவுகை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன் காரணத்தினால் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக பிரதம பொதுச் சுகாதார அதிகாரி டொக்டர் திரேசா டேம் தெரிவித்துள்ளார். மேலும்,நாடு முழுவதிலும் இந்த வருடம்,தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.எனவே பெற்றோர்  தங்களது பிள்ளைகளுக்கு தடுப்பூசிகளை உரிய நேரத்தில் ஏற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.  

  • மகிந்த வீட்டில் அடிதடி !

    மகிந்த வீட்டில் அடிதடி !

    முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச வீட்டில் இடம்பெற்ற ஒன்றுகூடலின் போது மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டத்தின் போது ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அங்கு பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கும் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசகர் எரந்த கினிக்கும் இடையில் மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது. ரணிலின் பிள்ளைகள் போல் செயற்படுவதாக காஞ்சனவை நகைச்சுவையாக எரந்த கினிகே சாடிய நிலையில் கோபமடைந்த அமைச்சர் அவரை தாக்க முயன்றதாக கட்சி…

  • வாடகை குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி !

    வாடகை குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி !

    வாடகை குடியிருப்பாளர்களுக்கு ஒர் மகிழ்ச்சியான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சரியான முறையில் நேர்மையாக வாடகை செலுத்துவோருக்கு நலன்களை வழங்கு சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.மத்திய அரசாங்கம் இந்த புதிய சட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. வாடகைக் குடியிருப்பாளர் சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மாதாந்தம் 2000 டொலர் வாடகை செலுத்துவோருக்கு கிடைக்காத சலுகைகள் அடகுக் கடன் தவணை செலுத்துவோருக்கு கிடைக்கப் பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இளம் கனடியர்கள் தங்களது கடின உழைப்பினை வாடகைக்காக செலவிட்டு…

  • வாழ விடுங்கள் ரொபர்ட் பயஸ் கடிதம் !

    வாழ விடுங்கள் ரொபர்ட் பயஸ் கடிதம் !

    எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இன்றி சக மனிதனைப் போல வாழ விரும்புவதாகவும் அதற்கு தாங்கள் முழு ஒத்தழைப்பினை நல்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு மறைந்த பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட ரொபர்ட் பயஸ் தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “நீண்ட சிறைவாசத்திற்கு பிறகு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு கடந்த 12-11-2022 முதல் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்காக சிறப்பு முகாமில் ஒன்றரை வருடங்களாக தங்ககவக்கப்பட்டு உள்ளோம். எஞ்சியிருக்கும் இறுதி…

  • ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை !

    ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை !

    பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் இரண்டு குற்றப்பத்திரங்களிலும் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை என உயர்நீதிமன்ற…

  • கொழும்பில் பாரிய தீ விபத்து !

    கொழும்பில் பாரிய தீ விபத்து !

    கிராண்ட்பாஸ் காவல்துறை பிரிவிற்குட்பட்ட வேல்ஸ் குமார மாவத்தையில் உள்ள டயர் கடை ஒன்றில் தீ பரவியுள்ளது. தீயை அணைக்க கொழும்பு தீயணைப்பு திணைக்களத்தில் இருந்து ஐந்து தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக சுகததாச உள்ளக விளையாட்டரங்கிற்கு முன்பாக உள்ள வேல்ஸ்குமார மாவத்தையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

  • அமெரிக்காவில் 4 பேர் படுகொலை!

    அமெரிக்காவில் 4 பேர் படுகொலை!

    அமெரிக்காவில் ராக்போர்ட், இல்லினாய்ஸ் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு நான்குபேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் ஆபத்தான நிலையிலும் ஏனைய நான்குபேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடத்திய பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து உடனடியாக எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

  • சிவலிங்கம் வைக்க எதிர்ப்பு தெரிவித்து பௌத்த தேரர்கள் ஆர்ப்பாட்டம்!

    சிவலிங்கம் வைக்க எதிர்ப்பு தெரிவித்து பௌத்த தேரர்கள் ஆர்ப்பாட்டம்!

    திருகோணமலையில் 1008 சிவலிங்கம் வைப்பதை தடுக்குமாறும், சிங்கள மக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்காமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை கோகன்னபுர காக்கும் அமைப்பினால்  இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பௌத்தப்பிக்கு ஒருவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், திருகோணமலை மாவட்டத்தில் வாழ்ந்து வரும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் சார்பாக குரல் எழுப்பும் விதத்தில் நாங்கள் செயல்பட்டு வருகின்றோம். கடந்த காலங்களில் திமுதுகம கரடிபுல் போன்ற இடங்களில் வாழ்ந்து வந்த மக்களுக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு…

  • நான் விரைவில் கொலைசெய்யப்படலாம்!  அருட்தந்தை வாக்குமூலம் !

    நான் விரைவில் கொலைசெய்யப்படலாம்! அருட்தந்தை வாக்குமூலம் !

    கடந்த திங்கட்கிழமை அருட்தந்தையர்களுக்கான விசேட திருப்பலி ஒன்று ஆயர் தலைமையில் மட்டக்களப்பு ஆயரில்லத்தில் இடம்பெற்றுள்ளது. அதன் பின்னர் அருட்தந்தை ஒருவர் தனக்கு ஆயரில்லத்தில் உள்ள சிலரால் ஏற்படக்கூடிய ஆபத்து மற்றும் அச்சுறுத்தல் குறித்து அருட்தந்தையர்கள் மத்தியில் ஆதங்கப்பட்டதுடன் என்னை துப்பாக்கி முனையில் கொலை செய்யப்படலாம் என அச்சம் வெளியிட்டுள்ளார். இது குறித்து அருட்தந்தை கருத்து தெரிவித்த காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது, அந்த காணொளியில், மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் என் மீது குரோத உணர்வை கொண்டுள்ளதுடன், மறைமாவட்டம்…

  • இராணுவ சேவையின் கீழ் முல்லைத்தீவு ஓட்டுத்தொழிற்சாலை !

    இராணுவ சேவையின் கீழ் முல்லைத்தீவு ஓட்டுத்தொழிற்சாலை !

    முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள ஓட்டுத்தொழிற்சாலை போரிற்கு பின்னர் இயங்காத நிலையில் தற்போது இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. போருக்கு முன்னர் விடுதலைப்புலிகள் காலத்தில் பண்டாரவன்னியன் ஓட்டுத்தொழிற்சாலையாக ஓடு,செங்கல் என்பன இங்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அருகில் உள்ள கூழாமுறிப்பில் களிமண் எடுக்கப்பட்டு அங்கு உற்பத்தி பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் போரிற்கு பின்னர் அந்த தொழிற்சாலை எந்த நடவடிக்கையும் அற்ற நிலையில் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் தங்கள் அரசியலுக்காக பல அமைச்சின் கீழ்…